November 22, 2024
  • November 22, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • லஷ்மி ராமகிருஷ்ணன் ஒரு அசாதாரண இயக்குனர்- நடிகர் கிஷோர்
June 26, 2019

லஷ்மி ராமகிருஷ்ணன் ஒரு அசாதாரண இயக்குனர்- நடிகர் கிஷோர்

By 0 850 Views

பன்முகப்பட்ட கதாபாத்திரங்களிலும் மிக இயல்பாக நடித்து நம் கவனத்தைக் கவர்பவர் நடிகர் கிஷோர். அதவர் ஏற்பது ஒரு நேர்மறையான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி… அல்லது வில்லத்தனம் கலந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சரி… அவர் ஒருபோதும் அதன் மீது கவனத்தைக் குவிப்பதைத் தவறவிடமாட்டார்.

அந்த வகையில் வரும் ஜூன் 28ஆம் தேதி வெளியாகும் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தில் தனது புதிய அவதாரத்தின் மூலம் ரசிகர்களைக் கவர வருகிறார் அவர்.

ஒரு திரைப்படத்தில் அந்தந்த திரைப்பட இயக்குனர்களுடன், கலைஞர்களும் எப்போதுமே தங்கள் நன்றிகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பது வெளிப்படையானது. ஆனால் ‘ஹவுஸ் ஓனர்’ படம் பற்றி நடிகர் கிஷோரின் மேற்கோள்கள் மிகவும் உணர்ச்சி மேலிட்டது.

அவர் அதுபற்றிக் கூறும்போது, “ஆம், ஹவுஸ் ஓனர் பயணம் எனக்கு ஒரு உணர்ச்சிகரமான அனுபவமாக இருக்கிறது. இந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் சிறியது என்றாலும், நான் ஒரு நடிப்புப் பயிற்சி வகுப்பில் இருந்ததை போலவே நிறைய கற்றுக்கொண்டேன். லஷ்மி ராமகிருஷ்ணன் ஒரு அசாதாரண இயக்குனர், இது நூறு சதவிகித உண்மை.

வெளிப்படையாக, அவருடன் பணிபுரிந்த எவரும் அதை ஏற்றுக் கொள்வார்கள். இது வெறுமனே அவரது இயக்குனர் திறமை பற்றியது மட்டுமல்ல, அவர் படப்பிடிப்பு தளத்தில் எல்லாவற்றையும் கையாண்ட விதத்தைப் பற்றியது. ‘ஹவுஸ் ஓனர்’ போன்ற ஒரு படத்தில் வேலையாட்கள் மிகக்குறைவு, பல பணிகளிலும் அவரே ஈடுபட்டார். இது நம்பமுடியாத ஆச்சரியமாக இருந்தது.

இன்றைய சினிமாவில் நாம் தொழில்நுட்பரீதியில் புத்திசாலித்தனமான, ஆனால் வாழ்க்கை அனுபவம் இல்லாத பல இளம் திரைப்பட இயக்குனர்களை சந்திக்கிறோம் என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும். அவர்களில் பெரும்பாலோர் தங்கள் பார்வையை பகிர்ந்து கொள்ள கஷ்டப்பட்டிருக்கிறார்கள், சில சமயங்களில், நான் அவர்களிடம் நடித்துக் காட்ட சொல்லுவேன், அப்போது தான் நான் அதை பின்பற்ற முடியும்.

இருப்பினும், லஷ்மி ராமகிருஷ்ணன் திரையில் வரும் ஒவ்வொரு ஃபிரேமிலும் வாழ்க்கையை வழங்கியுள்ளார். ஒரு கலைஞராக, நாம் நடிக்கும் கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை முற்றிலும் உணர்வது என்பது பொதுவானது. ஆனால் என் மனைவி ராதாவின் கதாபாத்திரத்தில் (நடிகை ஸ்ரீரஞ்சனி நடித்தது) இருக்கும் வலி, சோகம் மற்றும் அன்பை என்னால் உணர முடிந்தது.

படம் பார்க்கும்போது பார்வையாளர்கள நிச்சயமாக அதே அனுபவங்களை அனுபவிப்பார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். ஸ்ரீரஞ்சனி மிக அற்புதமாக நடித்துள்ளார். நான் சொன்னது போல, அவரது கதாபாத்திரம் அவ்வளவு உணர்ச்சிகளைக் கொண்டுள்ளது, அதை அவர் பாராட்டத்தக்க வகையில் வெளிப்படுத்தியுள்ளார். கிஷோர் மற்றும் லவ்லின் இருவரும் தான் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் ஆன்மாக்கள் – அவர்கள் தான் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் கதையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றுள்ளனர்..!” என்கிறார்.

‘மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ்’ சார்பில் டாக்டர் ராமகிருஷ்ணன் தயாரித்துள்ள இந்த ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை வரும் ஜூன் 28ஆம் தேதி ஏஜிஎஸ் சினிமாஸ் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது.