ஏற்கனவே தன் படங்களில் பல புதுமைகளையும் சாதனைகளையும் செய்து கவனத்தை ஈர்த்துக்கொண்டிருக்கும் பாபு கணேஷ் இப்போது தயாரித்து இயக்கியிருக்கும் 370 படத்தில் தன் மகன் ரிஷிகாந்தை ஹீரோ ஆக்குகிறார்.
இந்தப்படமும் கின்னஸ் சாதனையில் இடம்பெறவிருக்கிறது. என்ன சாதனை என்கிறீர்களா..? மொத்தப்படமும் 48 மணிநேரத்தில் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. இதில் மேகாலி கதாநாயகியாக, ரிஷா, திருநங்கை நமீதா, பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், வெற்றி, பெசன்ட் நகர் ரவி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
படத்தை மொத்தமாக முடித்துவிட்ட பாபு கணேஷ் இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகைகள் எப்படி வீணாகிப் போகிறார்கள் என்பது பற்றிக் குறிப்பிட்டார். அதில் எடுத்துக்காட்டாக டி.ராஜேந்தரால் கதாநாயகியாக்கப்பட்டு பின்னர் கிளாமர் வேடங்களில் நடிக்கத் தொடங்கிய மும்தாஜ் பின்னர் ஒட்டுமொத்தமாக கோலிவுட்டிலிருந்தே காணாமல் போய் விட்டதை சுட்டிக் காட்டினார்.
அதற்குக் காரணம் அவரது பி.ஆர்.ஓதான் என்று குறிப்பிட்டார். இல்லாவிட்டால் இன்னும் மும்தாஜ் முன்னணி நடிகையாக இருந்திருப்பார். அவரது தோல்விக்குக் கூட இருப்பவர்களே காரணமாகிறார்கள்…” என்றும் அப்போது கூறினார்.
மற்றும், ரிஷி காந்துக்கு வில்லனாக நடிக்க ஆர்வமிருந்தது. ஆனால், நான் தான் இந்தப்படத்தில் ஒரு கமாண்டோ வேடம் இருக்கிறது. அதைச் செய் என்றேன். இதைப் பார்த்து தமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள் அவரை வைத்துப் படம் எடுப்பார்கள் என்பது உறுதி.
370 படம் ராணுவ வீரர்களின் தியாகத்தைச் சொல்லும் நாட்டுபற்றுள்ள கதையை மையமாகக் கொண்டுள்ளது. இதில் ரிஷி காந்தும், நாயகி மேகாலியும் ஆடும் நடனம் ஒன்று அற்புதமாக அமைந்துள்ளது. அது ரசிகர்களைக் கவரும்..!” என்றார்.
முன்னதாகப் பேசிய கலைப்புலி எஸ்.தாணு, “பல சாதனைகளை செய்த பாபு கணேஷ் இந்தப்படத்தில் சாதனை செய்வதோடு வெற்றியும் பெறுவார். குறுகிய காலத்தில் படம் தயாரிப்பது எப்படி என்று தயாரிப்பாளர்கள் பாபு கணேஷிடம் ஆலோசனை பெறலாம்..!” என்றும் பேசி வாழ்த்தினார்.