March 1, 2024
  • March 1, 2024
Breaking News

Monthly Archives: March 2023

விடுதலை திரைப்பட விமர்சனம்

by on March 31, 2023 0

சிறந்த இயக்குனருக்கான அடையாளம், இதுவரை நாம் பார்த்திருக்கும் சிறந்த படங்களை விஞ்சி இன்னொரு படத்தைப் படைப்பதுதான் என்றிருக்க, இயக்குனர் வெற்றிமாறனோ இன்னும் ஒரு படி மேலே போய், தான் படைத்த சிறந்த படங்களையே கூட இந்தப் படத்தில் விஞ்சி நிற்கிறார். களம் நமக்கு நன்றாகத் தெரிந்ததுதான். பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டின் கனிம வளங்களைச் சுரண்ட நம் மலைப் பகுதிகளைத் தங்கள் வசப்படுத்த நினைப்பதுவும், அதற்கு நம் அரசு இயந்திரமும் துணை போக, அப்படி நேர்ந்து விடாமல் […]

Read More

பத்து தல திரைப்பட விமர்சனம்

by on March 30, 2023 0

கடந்த சில மாதங்களாகவே மிகவும்  எதிர்பார்ப்புக்குள்ளான படமாக இருந்தது இந்தப் படம். வெளியான படத்தின் டிரைலரும் பாடலும் அந்த எதிர்பார்ப்பை கூட்டுவதாகவே இருக்க, இப்போது படம் வெளியான நிலையில் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். சிம்புவின் இமேஜை அடுத்த கட்டத்துக்கு தூக்கிச் செல்லும் விதத்தில் இந்தப் படத்தின் கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் ஒபேலி என்.கிருஷ்ணா. ஏஜிஆர் என்கிற சர்வ வல்லமை பொருந்திய தாதாவாக வருகிறார் சிம்பு. மணல் கடத்தல், பொறியியல் கல்லூரி என்று பெரிய பெரிய வேலைகளாக […]

Read More

சிம்பு அண்ணன் இல்லாவிட்டால் பத்து தல நிறைவேறி இருக்காது – கௌதம் கார்த்திக்

by on March 30, 2023 0

நடிகர் கௌதம் கார்த்திக் தனது மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான ‘பத்து தல’ உலகம் முழுவதும் மார்ச் 30, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருவதால் உற்சாகமாக இருக்கிறார். நடிகர் சிலம்பரசன், இயக்குநர் ஓபிலி என் கிருஷ்ணா மற்றும் ஒட்டுமொத்த குழுவினருடன் இந்தப் படத்தில் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். நடிகர் கௌதம் கார்த்திக் கூறும்போது, ​​“ஒரு நடிகருக்கு அறிமுகப் படம் எப்படி முக்கியமோ, அதேபோன்று திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடிய ஒரு படமும் முக்கியமானது. ‘பத்து தல’ […]

Read More

ஆகஸ்ட் 16 1947

by on March 29, 2023 0

ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்‌ஷன் சார்பில் ஏ.ஆர்.முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் செளத்ரி தயாரித்திருக்கும் ‘ஆகஸ்ட் 16,1947’ திரைப்படத்தை பொன்குமார் இயக்கி இருக்கிறார். கெளதம் கார்த்தி, ரேவதி, புகழ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா  (27.03.2023) அன்று நடைபெற்றது.  படத்தொகுப்பாளர் சுதர்ஷன் பேசியதாவது, “இந்தப் படத்தில் வேலை பார்க்க வாய்ப்பு கொடுத்த முருகதாஸ் சாருக்கும் தயாரிப்பாளர் பொன்குமார் சாருக்கும் நன்றி. இந்தப் படம் நன்றாக வர உழைத்திருக்கும் அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் […]

Read More

விஜயா மருத்துவமனையில் தொடர்பு இல்லா உயிர்நிலை கண்காணிப்பு தொழில்நுட்பம்

by on March 28, 2023 0

வடபழனியின், விஜயா மெடிக்கல் அண்ட் எஜுகேஷனல் டிரஸ்ட், மேம்படுத்தப்பட்ட நோயாளி பாதுகாப்பிற்காக, Dozee இன் AI- அடிப்படையிலான, தொடர்பு இல்லாத உயிர்நிலை கண்காணிப்புத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. சென்னை, விஜயா மருத்துவமனை, தனது நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சையை வழங்குவதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக. நோயாளியின் பாதுகாப்பை மேம்படுத்த Dozee இன் Al-சார்ந்த, தொடர்பற்ற, தொடர்ச்சியான தொலைநிலை கண்காணிப்பு மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பை பயன்படுத்துகிறது. சென்னை, 28, மார்ச் 2023: இந்தியாவின் முதல் Al-அடிப்படையிலான தொடர்பு […]

Read More

அண்ணாமலை அதிரடி – ராமநாதபுரம் பாஜக நிர்வாகிகள் மாற்றம்

by on March 28, 2023 0

ராமநாதபுரம் மாவட்டத்தில் பா.ஜனதாவில் பொறுப்பு வழங்க பணம் பேரம் பேசப்பட்டது தொடர்பாக ஒரு ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பா.ஜனதா நிர்வாகி ஒருவர் தற்கொலைக்கு முயன்றது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது. மாவட்ட அளவில் புகைந்து கொண்டிருந்த இந்த விவகாரம் மாநில தலைமையின் காதுகளை எட்டியது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய மாநில தலைவர் அண்ணாமலை அதிரடியாக நடவடிக்கை எடுத்தார். மாவட்ட தலைவர் கதிரேசன் தலைமையிலான நிர்வாகிகள் கூண்டோடு மாற்றப்பட்டனர். கட்சி நிர்வாகத்தை மறுசீரமைபு செய்வதற்காக […]

Read More

போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஆவணப்படப் போட்டி

by on March 27, 2023 0

சென்னை மாநகர காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் “Drive Against Drugs” போதைப் பொருளுக்கெதிரான விழிப்புணர்வு ஆவணப்படங்களுக்கான போட்டி மற்றும் சிறுவர்களுக்கான காமிக்ஸ் வெளியீட்டு விழா !!  இன்றைய நம் சமூகத்தில் போதைப்பொருள் மிக முக்கியமான பிரச்சனையாக மாறியுள்ளது. சமூகத்தில் போதைப்பொருளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மாணவர்களுக்காக பிரத்தியேகமாகக் குறும்பட போட்டி சென்னை மாநகர காவல்துறை சார்பில் நடத்தப்பட்டது. இப்போட்டியைத் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார். 300க்கும் அதிகமான மாணவர்களின் குறும்படங்களிலிருந்து, நான்கு […]

Read More

உன் அப்பாவித்தனத்தால் உன்னை ஹீரோவாகினேன் என்றார் வெற்றிமாறன் – விடுதலை ஹீரோ சூரி

by on March 24, 2023 0

இயக்குனர் வெற்றிமாறன், தற்போது நடிகர் சூரியை நாயகனாக நடிக்க வைத்து ‘விடுதலை’ என்ற படத்தை இயக்கியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இப்படம் வரும் மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி ‘விடுதலை’ படம் குறித்தும், அந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் நடிகர் […]

Read More

நடிகர் அஜித் குமார் தந்தை மறைவு – அஜித் அறிக்கை

by on March 24, 2023 0

நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.எஸ்.மணி என்கிற பி.சுப்பிரமணி இன்று அதிகாலை இயற்கை எய்தினார். இது குறித்து அஜித் குமாரும் அவரது சகோதரர்களும் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு… எங்களது தந்தையார் திரு. பி.எஸ்.மணி(85 வயது) அவர்கள் பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கரையோடும் கவனித்து வந்தும், எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் […]

Read More

இந்தியன் யோகா அசோசியேஷனுடன் இணைந்து நற்சிந்தனை வட்ட123-வது நிகழ்வு

by on March 24, 2023 0

உலக மகளி்ர் தினத்தை முன்னிட்டு நற்சிந்தனை வட்டம் மற்றும் தமிழ்நாடு மாநில பிரிவு – இந்தியன் யோகா அசோசியேஷன் இணைந்து வழங்கிய நற்சிந்தனை வட்டத்தின் 123-வது மாதாந்திர நிகழ்ச்சி 19/03/2023 ஞாயிறன்று மாலை சென்னை, வளசரவாக்கம், காமகோடி நகரில் அமைந்துள்ள ஸ்ரீகாமகோடி தியான மண்டபத்தில் இனிதே நடைபெற்றது.  முன்னதாக நற்சிந்தனை வட்டத்தின் மகளிர் குழுவினர் குத்துவிளக்கேற்றிட, நற்சிந்தனை வட்டத்தின் யோகா இயக்குனர் திருமதி T.வள்ளி வரவேற்புரையும், நற்சிந்தனை வட்டத்தின் தலைவர் திரு.R.பாலன் தலைமை உரையும் நிகழ்த்தி விழாவினை […]

Read More