May 18, 2024
  • May 18, 2024
Breaking News

Monthly Archives: January 2021

விஜே சித்ரா கடைசியாக நடித்து வெளியான கால்ஸ் பட டிரெயிலர் ஏற்படுத்திய அதிர்ச்சி

by on January 31, 2021 0

மறைந்த நடிகை வி.ஜே சித்ராவின் கடைசிப் படமான கால்ஸ் படத்தின் ட்ரெய்லர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சின்னத்திரை மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் வி.ஜே சித்ரா. அவர் திடீரென இறந்தது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சினிமா துறையில் சாதிக்க நினைக்கும் பல பெண்களுக்கு எடுத்து காட்டாக விளங்கிய அவரின் மரணம் பலபேருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் இறப்பிற்கு முன் நடித்த படம் கால்ஸ். இப்படத்தின் […]

Read More

சசிகலா நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார் – பிப் முதல்வாரம் சென்னை வருகை

by on January 30, 2021 0

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா.   இந்நிலையில் தண்டனைக்காலம் நிறைவடைந்ததையடுத்து கடந்த 27ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவர் விடுதலை செய்யப்படுவதற்கு முன்பே உடல்நலக்குறைவு ஏற்பட்டு கொரோனா தொற்றும் அறியப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.    அதனால் விடுதலை தொடர்பான கோப்புகள் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சசிகலாவிடம் கையெழுத்து பெறப்பட்டது.   ஆனாலும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதால் […]

Read More

இயக்குனர் ஷங்கருக்கு பிடிவாரண்ட் – எந்திரன் கதை வழக்கு

by on January 30, 2021 0

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்த ‘எந்திரன்’ படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கடந்த 2010-ம் ஆண்டு சிவில் வழக்கும், காப்புரிமையை மீறியதாக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு மற்றொரு வழக்கையும் ஐகோர்ட்டில் தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கை ரத்து செய்ய இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.   ஆனால் இந்த வழக்கை விசாரணை செய்ய தடை விதிக்க முடியாது […]

Read More

கபடதாரி திரைப்பட விமர்சனம்

by on January 29, 2021 0

வேற்று மொழியில் வெற்றி பெற்ற படங்களுக்கு இன்னொரு மொழியில் வரவேற்பு அதிகமாக இருக்கும். அப்படி கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற படம் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ‘கபடதாரி’யாக இங்கே வந்திருக்கிறது. எப்போதோ நடந்து விட்ட கொலைகளும் அவை தொடர்பான மர்மங்களுமாக ஒரு மர்டர் மிஸ்டரியாக வெளியாகி இருக்கும் படம் இது. படத்தின் புரமோஷன்களும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்க, படம் எப்படி என்று பார்க்கலாம். வழக்கமான காக்கிச்சட்டைப் போலீஸ் படங்களையே பார்த்து சலித்து விட்டதாலோ என்னவோ ஒரு வித்தியாசத்துக்காக இதில் போக்குவரத்து […]

Read More

கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து நடிக்கும் கூகுள் குட்டப்பன்

by on January 28, 2021 0

பலராலும் பேசப்பட்டு, கொண்டாடப்பட்ட மலையாள படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சுராஜ், செளபின், சூரஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் சிறந்த நடிகர், அறிமுக இயக்குநர், கலை இயக்குநர் ஆகிய கேரள மாநில விருதுகளை வென்றது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கடும் போட்டிக்கு இடையே கைப்பற்றினார் முன்னணி இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார். பலரும் அவர் இயக்குவதற்காகக் கைப்பற்றியுள்ளார் என எண்ணினார்கள். ஆனால் […]

Read More

பா இரஞ்சித் தயாரிக்க மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம்

by on January 28, 2021 0

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌சன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குனர் பா.இரஞ்சித் தான் இயக்கும் படங்கள் மட்டுமல்லாமல் தனது நீலம் புரொடக்சன்ஸ் மூலம் காலம் கடந்து பேசப்படும் படங்களையும் வழங்கியுள்ளார். அந்த வகையில் அவரது தயாரிப்பில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு’ ஆகிய திரைப்படங்கள் விமர்சன மற்றும் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த வெற்றியைத்தொடர்ந்து இயக்குனர் […]

Read More

இன்னும் ஒரு நாள் பொறுத்திருந்தால் அமேசான் பிரைமில் மாஸ்டர் படம் பார்க்கலாம்

by on January 27, 2021 0

ஜனவரி 29 அன்று ஆக்‌ஷன் த்ரில்லர் தமிழ் திரைப்படமான மாஸ்டர் படத்தின் டிஜிட்டல் ப்ரீமியர் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது. சேவியர் ப்ரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஜெரமியா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான மாஸ்டர் படத்தின் பிரத்யேக டிஜிட்டல் வெளியீட்டை இந்தியா உள்ளிட்ட 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள ப்ரைம் சந்தாதாரர்கள் […]

Read More

லைகா புரடக்‌சன்ஸ் சுபாஸ்கரனுக்காக சிவகார்த்திகேயன் டான் ஆகிறார்

by on January 27, 2021 0

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள டாக்டர் மற்றும் அயலான் திரைப்படங்கள் விநியோக தளத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் அடுத்த அதிரடியான அறிவிப்பாக, சிவகார்த்திகேயனின் 19 வது படமாக “டான்” படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இயக்குநர் அட்லியிடம் “மெர்சல், பிகில்” படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய, சிபி சக்கரவர்த்தி இப்படத்தினை இயக்குகிறார். லைகா புரடக்‌சன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா, சிவகார்த்திகேயன் புரடக்‌சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறார். லைகா குழும தலைவர், […]

Read More

சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ ஆஸ்கர் போட்டியில் பங்கேற்பு

by on January 26, 2021 0

இந்தியத் திரையுலகினர் மத்தியில் கொண்டாடப்பட்ட படம் ‘சூரரைப் போற்று’. கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான படங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தமிழ்ப் படம் என்ற அபார சாதனையைப் படைத்தது. தற்போது ‘சூரரைப் போற்று’ படக்குழுவினரின் அபாரமான உழைப்புக்கு மேலும் பெருமைச் சேர்க்கும் வகையில் ஆஸ்கர் போட்டியில் களமிறங்கியுள்ளது. இந்த முறை கரோனா அச்சுறுத்தலால் ஆஸ்கர் போட்டியில் பல மாற்றங்களைச் செய்துள்ளனர். ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் கூட ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கலாம். அந்த வரிசையில் பொதுப்பிரிவில் […]

Read More