May 3, 2024
  • May 3, 2024
Breaking News

Monthly Archives: November 2020

அப்பா எஸ் ஏ சியிடம் விஜய் பேசுவதில்லை – ரகசியம் உடைக்கும் ஷோபா சந்திரசேகரன்

by on November 6, 2020 0

நேற்று விஜய் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ததாக ஒரு புயல் கிளம்பியது. அதற்குப்பின் விஜய்யிடமிருந்து வந்த அறிக்கையில் அந்தக் கட்சிக்கும் தனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்பதை தெளிவுபட தெரிவித்து இருந்தார் விஜய். அப்போதுதான் தெரிந்தது, விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் ஆரம்பித்த கட்சி அது என்று. விஜய்யிடம் அனுமதி கேட்காமலேயே தன் விருப்பத்தில் எஸ்ஏசி ஆரம்பித்த அந்த கட்சியில் அவரே செயலாளராகவும், பொருளாளராக விஜய்யின் அம்மா ஷோபா இருப்பதாகவும் தெரியவந்தது. இப்போது […]

Read More

எம்ஜிஆரிடம் கேட்காததை என்னிடம் கேட்கிறீர்களே – கமல்

by on November 5, 2020 0

சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கமல் அளித்த பேட்டி சாரம்சம்: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கட்சி, சின்னம் போன்றவற்றைப் பயன்படுத்துகிறீர்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளதே? ”மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும். அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்”, ”மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்” என்று பாடினார் எம்ஜிஆர். அவரைக் கேட்காமல் என்னைக் கேட்கிறீர்களே. கட்சியின் தேர்தல் திட்டத்தை, ”நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்” என்று பாடினார் எம்ஜிஆர். அது அவர் சொந்தப் படமல்ல. நாகிரெட்டியார் எடுத்த படம். அதேபோன்று எந்த […]

Read More

அரசியலுக்குள் நுழைந்தார் விஜய்

by on November 5, 2020 0

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ் சினிமாவையும் அரசியலையும் பிரித்துப் பார்க்கவே இயலாத சூழல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் ரஜினிகாந்த் அடுத்து அரசியலுக்கு வந்து விடுவார் என்று பல ஆண்டுகள் எதிர்பார்த்த நிலையில் அவர் விலகிவிடும் சூழலே நிலவி வருகிறது.  ஆனால் சில வருடங்களுக்கு முன்பு வரை அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்க இயலாத சூழலில் இருந்த கமல்ஹாசன் திடீரென்று அரசியல் பிரவேசம் செய்து வரும் சட்டமன்ற தேர்தலுக்கு தானே போட்டியிடவும் தயாராகி விட்டார். இந்நிலையில் கண்டிப்பாக அரசியலுக்கு […]

Read More

பிரபல தமிழ்ப்படங்களின் எடிட்டர் புற்றுநோயால் மரணம்

by on November 4, 2020 0

பிரபல எடிட்டர் கோலா பாஸ்கர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 55. தமிழில் குஷி, 7ஜி ரெயின்போ காலனி, ஒரு கல்லூரியின் கதை, புதுப்பேட்டை, கேடி, போக்கிரி, கண்டேன் காதலை ,யாரடி நீ மோகினி, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன உள்ளிட்ட படங்களில் எடிட்டராக பணிபுரிந்தவர் கோலா பாஸ்கர். இவர் சில காலமாக தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 8 மணியளவில் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு மனைவியும் , பாலகிருஷ்ணா […]

Read More

பள்ளி திறந்த 3ஆவது நாளில் 150 மாணவர்கள் 10 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு

by on November 4, 2020 0

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறந்து 3 நாட்களில் 150 மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மாநில நிலைகளுக்கேற்ப தளர்வுகளுடன் பொதுமுடக்கம் செயல்படுத்தப்பட்டு வருவதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் படிப்படியாகத் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் கடந்த 2ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. […]

Read More

தமிழின் அடுத்த சாதனைப்படம் வெற்றி மாறன் சசிக்குமார் கதிரேசன் கூட்டணியில்

by on November 4, 2020 0

பத்தாண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் வெற்றிமாறனும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எஸ்.கதிரேசனும் இணைகிறார்கள். ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ‘பொல்லாதவன்’ படம் மூலம் s.கதிரேசன் தயாரிப்பாளராகவும் , டைரக்டராக வெற்றிமாறனும் திரைத்துறையில் அறிமுகமானார்கள். இதை தொடர்ந்து மீண்டும் வெற்றிமாறன் இயக்க ‘ஆடுகளம்’ படத்தை தயாரித்தார்,எஸ்.கதிரேசன். இப்படம் 6 தேசிய விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றது. மேலும் ‘நய்யாண்டி’,’ ஜிகர்தண்டா’ போன்ற பல படங்களைத் தயாரித்தார். டைரக்டர் வெற்றிமாறன், ‘கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி’ தயாரிப்பு நிறுவனத்தைத் […]

Read More

பாம்பு பிடித்த சிம்பு மீது புகார் – வைரல் வீடியோவால் வழக்கு பாயுமா?

by on November 3, 2020 0

நடிகர் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து வருகிறார். கிராமத்து பின்னணியில் செண்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் கலந்து உருவாகி வரும் இப்படத்துக்காக தனது உடல் எடையைக் குறைத்திருக்கிறார் சிம்பு.  திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தப் படத்தை படமாக்கி வரும் படக்குழு ஒரே கட்டமாக ஷூட்டிங்கை முடிக்கவும் திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. அதில் நடிகர் சிம்பு தனது தோளில் பாம்புடன் தோன்றியிருந்தார். இந்த போஸ்டர் […]

Read More

இரண்டாம் குத்து படக்குழுவினர் நடிகர் நடிகைகளுக்கு நோட்டீஸ் – ஹைகோர்ட் உத்தரவு

by on November 3, 2020 0

இரண்டாம் குத்து திரைப்படத்தை திரையிட தடை விதிக்கவும், படத்தின் டீசரை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கக் கோரிய வழக்கில் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருக்கிறது. இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் கூறும்போது முன்பு வந்த திரைப்படங்களான பாசமலர் போன்ற படங்கள் குடும்ப உறவுகளைப் பற்றி இருந்தது. ஆனால் தற்போது தகாத வார்த்தைகள் இரட்டை அர்த்தங்கள் ஆகியவற்றை படத்தில் கொண்டுவந்து படத்திற்கான விளம்பரத்தை தேடுகின்றனர். இதைவிட […]

Read More

ஒவ்வொருவரின் கனவை நிறைவேற்ற சூரரை போற்று உந்து சக்தியாக இருக்கும் – சூர்யா

by on November 2, 2020 0

“தனது கனவுகளை தானே அடைந்து அதை பெரும் சாதனையாக மாற்றிய ஒரு நபரைப் பற்றிய கதையை நாங்கள் சொல்லியிருக்கிறோம்”- அமேசான் ப்ரைம் வீடியோவின் சூரரைப் போற்று படத்தில் தனது கதாபாத்திரம் குறித்த சில முக்கிய தகவல்களை நடிகர் சூர்யா பகிர்ந்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் சூரரைப் போற்று தமிழ் திரைப்படத்தின் ட்ரெய்லரை அமேசான் ப்ரைம் வீடியோ சமீபத்தில் வெளியிட்டது. சூரரைப் போற்று தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. அமேசான் கிரேட் இந்தியா ஃபெஸ்டிவலின் ஒரு […]

Read More