“கதை கதையாம் காரணமாம், காரணத்தில் தோரணமாம்…” என்று ஒரு முதிர் மொழி வரும்.
ஆனால் காரணமே இல்லாமல் தோரணம் அமைக்க முடியும் என்பதை இந்தப் படம் மூலம் உலகுக்கு உணர்த்தி இருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.
‘ குடும்பம் என்று வந்துவிட்டாலே… அதுவும் கூட்டு குடும்பம் என்றாலே கணவன் மனைவி உறவுக்குள் அடிக்கடி பிணக்கு வந்துவிடும். பிரிவதும், பின் கூடுவதுமாக செல்லும் மனித வாழ்க்கையில் சுவாரசியமே அதுதான்…’ என்பதை மையப் புள்ளியாக வைத்து ஒரு முழு நீ….ள திரைக்கதை சொல்லி இருக்கிறார் அவர்.
குல தெய்வம் கோயிலில் வைத்து விஜய சேதுபதி நித்யா மேனன் தம்பதியின் பெண் குழந்தைக்கு மொட்டை அடிக்கும் வைபவம் தொடங்குகிறது. ஒரு பக்கத்து மூடியை சரக்கென்று வழித்தவுடன் ஆரம்பிக்கிற குடும்பச் சண்டையில் விஜய் சேதுபதி குடும்பம் ஒரு பக்கமாகவும் நித்தியா மேனன் குடும்பம் ஒரு பக்கமாகவும் நின்று அடித்துக் கொள்கிறார்கள்.
இதில் தேமே என்று சாமி கும்பிட வந்த கால வெங்கட்டும் அவர் மனைவி குழந்தைகளும் இரு குடும்பத்துக்கும் மத்திய அரசிடம் பண்ண போய் மத்தியில் சிக்கிக் கொள்கிறார்கள்.
தலைவன் தலைவிக்குள் என்ன பிணக்கு என்பதைத்தான் ஃப்ளாஷ் பேக், ஃப்ளாஷ் பேக், ஃப்ளாஷ் பேக், ஃப்ளாஷ் பேக்… (இதை படிக்கிற உங்களுக்கு கொள்ள வேண்டும் போல் கோபம் வருகிறதா இல்லையா… படம் பார்ப்பவர்களுக்கு எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்…) ஃப்ளாஷ் பேக்குகளாகப் போய் கதையைச் சொல்லி முடித்து அதே கோவிலில் இருந்து சற்று தொலைவில் முடிகிறது கதை.
வித்தியாசமாக நடிக்கிறேன் வேறு வழி என்று விஜய் சேதுபதி இதில் காட்டு கத்தல் போடும் ஒரு பாத்திரத்தை முயற்சி செய்திருக்கிறார். அவர் கத்துக்கிற கட்டில் நம் காது சவ்வெல்லாம் கிழிந்து தொங்குகிறது.
உண்மையில் அவர் எப்படிப்பட்ட கேரக்டர் என்பதை நம்மால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவர்கள் குடும்பமே நடத்தும் ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக இருக்கும் அவருக்கு படிப்பறிவு இலலை என்பதுதான் குறை. ஆனால் பட்டறிவு கூடவா இருக்காது..?
அவருக்கு நித்தியா மேனனை திருமணம் செய்து வைக்கிறார்கள். அவர்கள் இருவரும் பரோட்டாவும் சால்னாவும் போல் இனிய எல்லாரும் நடத்தி வந்தாலும், போகப்போக நித்யாவின் கை குடும்பத்தில் ஓங்குவதை விஜய் சேதுபதியின் அம்மாவாலும், சகோதரி ஆளும் தாங்க முடியாமல் அவர்கள் செய்யும் திரிசமத்தால் கணவன் மனைவிக்குள் பிரச்சனை வெடிக்கிறது.
அந்த பிரச்சனையில் நித்யவின் அம்மாவும் தூபம் போட, அடிக்கடி பிரிந்து சேரும் அவர்கள் ஒரு கட்டத்தில் மாதக் கணக்கில் பெரிய நேர்ந்த வேலையில் தான் விஜய் சேதுபதி கூப்பிடாமல் அவர்கள் குழந்தைக்கு மொட்டை போடும் வைபவத்தை நித்யா வீட்டினர் நடத்த கோயிலில் ஆரம்பிக்கிறது குடுமிப்பிடி சண்டை.
விஜய் சேதுபதி கேரக்டரை எப்படி நம்மால் பின் தொடர முடியவில்லை அதேபோல் தான் நித்தியா மேனனின் கேரக்டரும். பன் பரோட்டா போல் வரும் அவர் எதற்கெல்லாம் கோபப்படுவார், எதற்கு விட்டுக் கொடுக்கிறார் என்று தெரியாத அளவில் சரமாரியாக கணவனை நோகடிக்கிறார்.
இதற்கெல்லாம் காரணம் தன்னுடைய அம்மா தீபா சங்கர்தான் என்று தெரிந்தும் விஜய் சேதுபதி அம்மாவை கண்டிக்காததும் அல்லது தனிக்குடித்தனம் போகாததும் ஏன் என்று தெரியவில்லை.
அதேபோல் தன் மனைவிதான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று நன்றாக தெரிந்தும் விஜய் சேதுபதியின் அப்பாவாக வரும் பருத்திவீரன் சரவணன் வாயில் பரோட்டாவை அடைத்தது போல் எதுவும் பேசாமல் இருப்பதும் அநியாயம்.
அந்தப் பக்கத்தில் நித்தியா மேனன் வீட்டிலும் அப்படியே. நித்யா மேனனின் அப்பா செம்பரனுக்கு தன் மனைவி தான் பிரச்சனைக்கு மூல காரணம் என்று தெரிந்தாலும் அவரை கண்டிக்கவே மாட்டார். இதற்கும் அவர் பெரிய ரவுடியாம்.
ஆனால் ஒரே ஒரு பெரிய ஆறுதல் எந்த சரக்கும் இல்லாத இந்த படத்தை கலகலப்பான திரை மொழியில் சொல்லி இருப்பதுதான்.
காரணம் இல்லாமல் சிரிக்க வைத்தாலும் கலகலப்பாக நகர்ந்து விடுகிறது படம். அதிலும் கூட திரும்பவும் ரிப்பீட் ரிப்பீட் என்று வருவதும் மகா எரிச்சல்.
இந்தப் படத்தில் உலக மகா ஆச்சரியங்கள் ஒன்று நெடுநாள் கழித்து யோகி பாபு வரும் காட்சிகளை எல்லாம் நம்மால் சிரிக்க முடிவது.