March 25, 2025
  • March 25, 2025
Breaking News
  • Home
  • Uncategorized
  • எம்பிரான் திரைப்பட விமர்சனம்

எம்பிரான் திரைப்பட விமர்சனம்

By on March 22, 2019 0 1898 Views

இந்த ஆன்மாக்களின் சீசனில் இது வேறு வகையான ஆன்மா கதை மட்டுமல்லாமல் காதலிலும் புதுவழி கண்ட படம் என்று சொல்லலாம். அப்படியொரு நூல் பிடித்து இந்தப்படத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணா பாண்டி.
டாக்டராக வரும் ரெஜித் மேனனுக்கு ஒரு வினோதமான கனவு தொடர்ந்து வருகிறது. அதையறியும்போழுது அவரைக் காதலிக்கும் ராதிகா ப்ரீத்தி பற்றித் தெரிய வருகிறது. அவர்களின் காதலைச் சேர்த்து வைக்க ப்ரீத்தியின் இறந்து போன் தாத்தா மௌலியின் ஆன்மா செய்யும் லீலைகள்தான் அந்தக் கனவு மேட்டர். அந்தக் காதல் என்ன ஆனது என்பது கிளைமாக்ஸ்.
இன்றைக்குக் காதல் என்றாலே அரைகுறை ஆடைகள், லிப்லாக் முத்தங்கள், இரட்டை அர்த்த வசனங்கள் மலிந்து விட்ட சினிமாவில் இத்தனை டீசண்டாக ஒரு படத்தைக் கொடுத்த கிருஷ்ணா பாண்டியைப் பாராட்டலாம்.