பிரபு தேவாவை வைத்து ஜாக்பாட் என்ற காமெடி படத்தை இயக்கிய கல்யாண் இயக்குகிறார் – அதில் யோகி பாபு நடிக்கிறார் என்றால் நமக்கு இந்தப் படத்தை எப்படி எதிர்பார்க்கத் தோன்றும்..?
ஒரு காமெடி படமாகத்தானே..?
அப்படி எதிர்பார்த்து போய் உட்கார்ந்து விடாதீர்கள். ஒரு கனமான மற்றும் சோகமான படத்தைக் காண நேரும்போது நீங்கள் ஏமாற்றம் அடையலாம்.
சைல்டு ட்ராபிக்கிங் என்று சொல்லக்கூடிய பெண் குழந்தைகளை கடத்தும் கதை அப்படி கண்டைனர் வைத்து கடத்தப்படும் பெண் குழந்தைகள் நிறைய சித்திரவதைகளுக்கு ஆட்படுத்தப்பட்டு சமூக விரோதிகளுக்கு பாலியல் விருந்தாக்கப்படுகிறார்கள்.
கடத்தப்பட்ட குழந்தைகள் அதிலிருந்து மீண்டார்களா அவர்களை மீட்க முடிந்ததா என்பதுதான் மீதி கதை.
ஹீரோ திலீபன் என்று சொல்லலாம் சொல்லாமலும் இருக்கலாம் ஏனென்றால் அவரை நமக்கு அறிமுகப்படுத்திய இரண்டாவது காட்சியிலேயே போலீஸ் துரத்த ஆரம்பித்து தலை மறைவாகி விடுகிறார் அவர்.
அதற்குப்பின் கிளைமாக்ஸ் க்கு முந்திய காட்சிகள் தான் வெளியே வந்து கொஞ்சம் சண்டை எல்லாம் போட்டு படம் முடிவதற்கு உதவுகிறார்.
அவர் ஒரு விஞ்ஞானியா என்பது பற்றி எல்லாம் கதையில் சொல்லப்படவில்லை ஆனால் ஒரு டைம் டிராவல் செய்யும் ஷோவை கண்டுபிடிக்கிறார். காலை ஓங்கி தரையில் உதைத்தால் நிகழ்காலத்துக்கு பின்னோக்கி பாய்ந்து கடந்த காலத்துக்கு ஈட்டுச்செல்லும் அந்த ஷூ என்ற நிலையில் அதை சோதித்துப் பார்க்கும்போது போலீஸிடம் அகப்பட்டுக் கொள்கிறார் அங்கிருந்து தப்பி தலைமறைவாகிறார்.
ஆனால் படத்தின் நாயகியாக சிறுமி ஏன் சொல்ல முடியும் ஏனென்றால் கிட்டத்தட்ட பத்து வயதுக்குள் இருக்கும் அந்த சிறுமி தான் கதையின் மையப் புள்ளையாகி முழு படத்தை நகர்த்த உதவியிருக்கிறாள்.
தாயின் முகத்தைக் கூட பார்க்காமல் குடிகார தந்தையிடம் வளர்ந்து வரும் அவள் தந்தையின் தொழிலான செருப்பை தைக்கும் தொழிலையும் ஒரு பக்கம் கவனித்துக் கொண்டு இன்னொரு பக்கம் பள்ளிக்கூடத்துக்கும் சென்று வருகிறாள் இந்நிலையில் யோகி பாபு அவர்களிடம் தன் சோவை தக்க வர அதையும் விற்று கொடுத்து விடுகிறார் அவளது தந்தை.
இந்த நேரம் திலீபன் ஒளித்து வைத்திருக்கும் ஷூ சிறுமி கையில் கிடைக்க அதை யோகி பாபு இடம் அதற்குப்பின் யோகி பாபுவுக்கு என்ன ஆனது என்பதெல்லாம் படம் தாங்கி நிற்கும் சோகத்தை மறக்கடிக்கும் சில காட்சிகளாக வருகின்றன.