January 10, 2025
  • January 10, 2025
Breaking News
  • Home
  • Uncategorized
  • பேரனை ஹீரோவாக்கி படம் இயக்கும் ஈரோடு சௌந்தர்

பேரனை ஹீரோவாக்கி படம் இயக்கும் ஈரோடு சௌந்தர்

By on May 29, 2019 0 1094 Views

வெற்றி பெற்ற சேரன் பாண்டியன், நாட்டாமை, பரம்பரை, சமுத்திரம் போன்ற படங்களின் கதை வசனம் எழுதியவர் ஈரோடு செளந்தர். அத்துடன் முதல் சீதனம், சிம்மராசி படங்களையும் இயக்கி இருக்கிறார்.

குடும்பக் கதைகளை செண்டிமெண்ட் கலந்து அவற்றுக்கு வசனங்கள் மூலம் உயிர் கொடுக்கும் வித்தை அறிந்தவர்.. அதனால் தான் ‘சேரன் பாண்டியன்’, ‘நாட்டாமை’ படங்களின் கதைக்காகவும், ‘சிம்மராசி’ படத்தில் வசனத்திற்காகவும் தமிழக அரசு விருது கொடுத்து கெளரவித்தது.

இவர் இப்போது இயக்கும் புதிய படத்திற்கு ‘அய்யா உள்ளேன் அய்யா’ என்று தலைப்பு வைத்திருக்கிறார். இந்த படத்தில் தனது பேரன் கபிலேஷ் என்பவரை கதா நாயகனாக களம் இறக்குகிறார். அத்துடன் இன்னொரு எதிர் மறை நாயகனாக தனது தம்பி மகன் பால சபரீஸ்வரன் என்பவரை நடிக்க வைக்கிறார்.

கதா நாயகியாக பிரார்த்தனா நடிக்கிறார். இவர் மலையாளத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். மற்றும் மனோபாலா, லிவிங்ஸ்டன், பாவா லட்சுமணன், நளினி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு சந்துரு. இசை மகேந்திரன். தயாரிப்பு வீர ஸ்ரீ சந்தன கருப்பராயன் புரொடக்‌ஷன்ஸ். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஈரோடு செளந்தர்.

படப்பிடிப்பு 4ம் தேதி ஈரோட்டில் துவங்குகிறது.

10 ம் வகுப்பு பள்ளிக்கூட கதை என்பதால் இந்த கதைக்கு 10 ம் வகுப்பு படிக்கும் தனது பேரன் சரியாக இருக்கும் என்பதால் நாயகனாக அறிமுகப் படுத்துகிறேன்.

மாணவர்களின் எதிர்காலம் என்பது 10 ம் வகுப்பிலிருந்து 12 ம் வகுப்பு கால கட்டம் தான்..அதை மட்டும் மனதில் வைத்து மாணவர்கள் செயல்பட்டால் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்..கொஞ்சம் தடம் மாறினாலும் அவர்கள் வாழ்க்கை திசை மாறி விடும் என்கிற கருத்தை சொல்கிற படமாக “அய்யா உள்ளேன் அய்யா” உருவாகிறது என்றார் ஈரோடு செளந்தர்.