November 23, 2024
  • November 23, 2024
Breaking News
  • Home
  • பல்சுவை
  • இன்று முதல் கோவிட் பரிசோதனைகள் இன்றி சிங்கப்பூர் பயணிக்கலாம்..!
February 13, 2023

இன்று முதல் கோவிட் பரிசோதனைகள் இன்றி சிங்கப்பூர் பயணிக்கலாம்..!

By 0 581 Views

சிங்கப்பூர் பயணத்துறை கழகம வர்த்தக கூட்டுச் செயல்பாட்டாளர்களுடன் பயண செயல்பாடுகளை மீட்டெடுக்கும் முயற்சிகளைத் துரிதப்படுத்துகிறது!

இந்திய இளையதலைமுறையினரையும் மற்றும் திருமணப் பயணங்களையும் சிங்கப்பூருக்கு ஈர்ப்பதை 2023-ம் ஆண்டுக்கான முக்கிய இலக்குகளாக அறிவிக்கப்பட்டுள்ளன; “ஒன்றாக இணைந்து மீட்சிக்கான வழிகளை மேம்படுத்துவோம்!” [‘Ramping up pathways to recovery, together!] என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட வர்த்தக செயல்பாட்டைச் சிங்கப்பூர் பயணத்துறை கழகம் மேற்கொள்கிறது.

சென்னை, பிப்ரவரி 13, 2023: சிங்கப்பூர் பயணத்துறை கழகம் (STB) 2023-ம் ஆண்டில் இந்தியப் பயணிகளுக்குச் சிங்கப்பூரை மேலும் விரும்பத்தக்க இடமாக மாற்றுவதற்கான லட்சிய நோக்குடன் கூடிய திட்டங்களை சென்னையில் இன்று (பிப்ரவரி -13) நடைபெற்ற வர்த்தக செயல்பாட்டு நிகழ்ச்சியில் வெளியிட்டது.

இத்திட்டங்கள் கோவிட் பெருந்தொற்றுக்குப் பிந்தைய பயணங்களை முன்புபோல் அதே உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும், கொண்டாட்டமாகவும் மேற்கொள்ளும் பயணமாக மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

13 பிப்ரவரி 2023, காலை 11 மணி முதல் சிங்கப்பூரில் இருந்து திரும்பும் இந்தியப் பயணிகளுக்கு, அனைத்து ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை அவசியம் என்பதை நீக்குவதற்கான அறிவிப்பை இந்திய அரசு வெளியிட்டு இருப்பதன் மூலம், அனைத்து கோவிட் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு இருக்கின்றன. இந்த அறிவிப்பு, சிங்கப்பூருக்கு வருகைத் தரும் இந்தியப் பயணிகளுக்கு எளிமையான முறையில், எந்த தடையும் இல்லாமால் உற்சாகமாக பயணத்தை மேற்கொள்வதற்கு வழி வகுக்கிறது.

சிங்கப்பூருக்கு பயணம் செய்வதில் இதுவரை இருந்த கட்டுப்பாடுகளை பெருமளவில் தளத்தி இருப்பதனால் ‘ ஏப்ரல் 2022-லிருந்து இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு மேற்கொள்ளும் பயணங்கள் பெருமளவில் அதிகரித்து இருக்கிறது. மேலும் 2022-ல் சிங்கப்பூருக்கு வருகைத் தந்த உலகளாவிய 6.3 மில்லியன் பயணிகளில், 686,000 பயணிகள் இந்தியாவிலிருந்து வந்த பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

11 லட்சம் பேர் இந்தோனேஷியாவில் இருந்து சிங்கப்பூருக்குப் பயணம் செய்துள்ள நிலையில் சிங்கப்பூரின் இரண்டாவது பெரிய பயணச் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது சிங்கப்பூருக்கும் 16 இந்திய நகரங்களுக்கும் ‘ இடையே நேரடி விமான போக்குவரத்து இணைப்பு உள்ளது. நாடு முழுவதிலும் வளர்ந்து வரும் பயணத் தேவையைப் பயன்படுத்திக் கொள்ள சிங்கப்பூர் தயாராக உள்ளது.

மீட்சிக்கான 2023 மற்றும் வரவிருக்கும் ஆண்டுகளில் சிங்கப்பூரை ஒரு முக்கியப் பயண இலக்காக நிலைநிறுத்துவதில் கவனம் செலுத்தப்படவுள்ளது. சிங்கப்பூர் பயணத்துறை கழகம் தொலைநோக்குப் பார்வையுடன் ஒன்றாக இணைந்து வழிகளை மேம்படுத்துவோம்!” என்ற கருப்பொருளை மையமாக முன்வைத்து செயல்பாடுகளை மேற்கொள்கிறது பயணிகளிடையே ஈர்ப்பை மேலும் அதிகரிக்க செய்வதன் மூலம், பெரும் எண்ணிக்கையில் பயணம் மேற்கொள்ளும் இந்தியப் பயணிகளுக்கு இது சிறப்பான பயண அனுபவத்தை வழங்குகிறது.

இளம் இந்தியப் பயணிகளைப் பொறுத்தவரையில் திருமணங்கள் மற்றும் ஆண்டுவிழாக்கள் போன்ற முக்கிய வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கொண்டாடுவதற்கான ஒரு லட்சிய இடமாகவும் சிங்கப்பூர் உள்ளது. சிங்கப்பூர் பயணத்துறை கழகம் குடும்பப் சுற்றுலாக்கள், வர்த்தகம் சார்ந்த பயணங்கள் மற்றும் சொகுசுக் கப்பல் விடுமுறை பயணங்கள் ஆகியவற்றை இணைந்து அதிகரிக்கும் முயற்சிகளை தனது கூட்டுச் செயல்பாட்டாளர்களுடன் மேற்கொள்ள இருக்கிறது.

37 இந்தியா, மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்க பகுதிகளுக்கான சிங்கப்பூர் பயணத்துறை வாரியத்தின் மண்டல இயக்குனர் ஜி.பி. ஸ்ரீதர் (GB Srithar, Regional Director, India, Middle East, South Asia and Africa) கூறுகையில், “சென்னையில் சிங்கப்பூர் பயணத் துறை கூட்டுச் செயல்பாட்டாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எங்களது பயண நண்பர்களிடையே நல்லுறவை உருவாக்குவதில் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் சிங்கப்பூர் சுற்றுலாவை மக்களிடையே கொண்டு சேர்ந்து மிகப் பெரிய சுற்றுலா இடமாக மாற்றும் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

எங்களது சிங்கப்பூர் பயணத்துறை கூட்டுச் செயல்பாட்டாளர்கள் இந்நிகழ்வை மாபெரும் சந்திப்பாக மாற்றியிருக்கிறார்கள். இந்தியா நீண்ட காலமாக சிங்கப்பூரின் மிகப்பெரிய சுற்றுலா சந்தைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. 2023-ம் ஆண்டில் இன்னும் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தலமாக சிங்கப்பூரை வரவேற்பைப் பெறவிருக்கிறது. 2019-ல் சிங்கப்பூருக்கு வருகைத் தந்த இந்தியப் பயணிகளின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் 2022-ம் ஆண்டின் 6.86 லட்சம் பயணிகளின் எண்ணிக்கை 50% ஆகும். இந்த ஆண்டு சிங்கப்பூருக்கு மேலும் உற்சாகமளிப்பதாக இருக்கும். பலதரப்பட்ட இன்பகரமான, உற்சாகமான, அழகிய காரணங்களுக்காக சிங்கப்பூருக்கு பல பயணிகளை இந்தியப் நாங்கள் வரவேற்கிறோம்.” என்றார்.

இந்த மாபெரும் வர்த்தக ஈடுபாட்டு நிகழ்வு, சிங்கப்பூரின் புதிய இடங்கள், முன்முயற்சிகள் மற்றும் சிங்கப்பூர் பயணத்துறை கழகம் கவனம் செலுத்தி வரும் இலக்குகளைக் ஆனந்தமயமாக்கும் காட்சிப்படுத்தியது. 2023-ல் சுற்றுலாவை வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அம்சங்களில், சென்டோசாவின் பல்வேறு கேளிக்கை அம்சங்களுடனான குடும்ப சுற்றுலா, சென்சரிஸ்கேப் அனுபவ பூங்கா மற்றும் மாண்டாய் வனவிலங்கு காப்பகத்தின் பறவைகள் பாரடைஸ் (Sentosa’s multiconcept family development, Sensoryscape experiential park & Mandai Wildlife Reserve’s Bird Paradise] ஆகியவை அடங்கும். இந்த புதிய அம்சங்கள் இந்தியா முழுவதிலும் இருந்து வரும் பயணிகளுக்கு சிங்கப்பூரின் மீதான ஈர்ப்பை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியின் கிரேட்டர் நொய்டாவில் நடந்த எஸ்ஏடிடிஇ 2023-ல் (SATTE 2023) சிங்கப்பூர் சுற்றுலா கூட்டுச் செயல்பாட்டாளர்களின் பங்கேற்பு மற்றும் மும்பையில் நடைபெற்ற வர்த்தக அமர்வைத் தொடர்ந்து சென்னை வர்த்தக செயல்பாட்டு அமர்வு நடைபெற்றது. சிங்கப்பூரில் இந்திய திருமணங்களை விமரிசையாக நடத்துவதைப் பெற்ற 35 முன்னணி பற்றி இந்தியாவின் தேர்ச்சி திருமண திட்டமிடல் நிறுவனங்களுடன், 6 சிங்கப்பூர் கூட்டுச் செயல்பாட்டாளர்கள் கலந்துரையாடல்களை மும்பையில் மற்றும் டெல்லியில் பிப்ரவரி 7 மற்றும் 8-ம் தேதிகளில் நடைபெற்றன.

கடந்த சில ஆண்டுகளாக, சிங்கப்பூர் உலகளாவிய அளவில் முக்கிய வணிக மற்றும் ஓய்வுக் கால மையமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இது பயணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு வகையான அனுபவங்கள் கலந்த உற்சாகத்தையும், உணர்வையும் வழங்குகிறது.

பயணிகள் நேரடி விளையாட்டு, கலை, பொழுதுபோக்கு அல்லது வனவிலங்கு பார்வையிடல் ஆகியவற்றில் ஈடுபடலாம். சிங்கப்பூரின் கலாச்சார பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் சுவையான உணவு வகைகளை உண்டு மகிழலாம். சிலிர்ப்பைத் தேடும் சாகசச் செயல்களிலும் உற்சாகத்துடன் ஈடுபடலாம். சிங்கப்பூர் ஒரு ஆரோக்கிய மையமாகவும் முக்கியத்துவம் பெற்று வளர்ச்சி கண்டு வருகிறது. மன மகிழ்ச்சி உற்சாக உணர்வு மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றை கொண்டாடும் வகையிலான அனுபவங்களையும் பயணிகள் பெறமுடியும்.

அதே நேரத்தில், சிங்கப்பூர் பசுமைத் திட்டம் 2030 (Singapore Green Pi:n 2030)-ன் முக்கிய தூணான ‘சிட்டி இன் நேச்சர்’ (இயற்கையில் நகரம் – City in Nature) என்ற தொலைநோக்குப் பார்வையுடன், கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த சுற்றுலாவில் சிங்கப்பூர் முன்னோடியாக விளங்குகிறது.

சிங்கப்பூர் பயணத்துறை கழகம் பற்றி…

சிங்கப்பூர் பயணத்துறை கழகம் (STB) சிங்கப்பூரின் முக்கியப் பொருளாதாரத் துறைகளில் ஒன்றான சுற்றுலாவை மேம்படுத்தும் முன்னணி நிறுவனமாகும். தொழில்துறை கூட்டு செயல்பாட்டாளர்கள் மற்றும் சமூகத்துடன் இணைந்து, சிறந்த சுற்றுலா நிலப்பரப்பை இது வடிவமைக்கிறது. “சிங்கப்பூரை ஒரு துடிப்பான, உற்சாகமான இடமாக தனித்துகாட்டும் வகையில், ஆர்வம் நிறைவேறும்” (Passion Possible) என்ற வாழ்வியல் ப்ராண்ட் உடன் மக்கள் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும் ஆழமான உறவைக் கொண்டாடவும் வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறோம். :

மேலும்: www.stb.gov.sg அல்லது www.visitsingapore.com | எங்களைப் பின்தொடரவும்facebook.com/STBsingapore அல்லது twitter.com/stb_sg

(1) சிங்கப்பூர் நகரத்திற்கு வரும் அனைத்து பயணிகளும் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் முழுமையாக தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். இல்லையெனில், அவர்கள் புறப்படுவதற்கு முன் எடுக்கப்பட்ட கோவிட் பாதிப்பு இல்லை என நிரூபிக்கப்பட்ட சோதனை முடிவைச் சமர்ப்பிக்க வேண்டும். கோவிட் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, விழிப்புடன் செயல்பாடுகள் நடைபெறுகிறது. தேவைப்பட்டால், அறிவியல் சான்றுகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் மாற்றங்கள் செய்யப்படும் அல்லது புதிய நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும்.

(2) தற்போது இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு இணைக்கப்பட்டுள்ள 16 நகரங்கள்: மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, கொல்கத்தா, கவுஹாத்தி, அகமதாபாத், ஹைதராபாத், கொச்சி, புனே, திருவனந்தபுரம், விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரம். ஏர் இண்டிகோ விமானம் புவனேஸ்வரில் இருந்து நேரடி விமானத்தை இயக்கும் என்ற அறிவிப்பு அண்மையில் வெளியானது