October 29, 2025
  • October 29, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சாதிகளின் சாயத்தை வெளுக்கும் சாயம் பிப்ரவரி 4 முதல்…
January 31, 2022

சாதிகளின் சாயத்தை வெளுக்கும் சாயம் பிப்ரவரி 4 முதல்…

By 0 600 Views

ஒயிட் லேம்ப் புரொடக்சன் தயாரிப்பில் மற்றும் எஸ்.பி. ராமநாதன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’. படத்தினை புதுமுக இயக்குனர் ஆண்டனி சாமி இயக்கியுள்ளார். அபி சரவணன் கதாநாயகனாக நடிக்க, இந்தியா பாகிஸ்தான் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ஷைனி இந்த படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.

பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின், மற்றும் பல நட்சத்திரங்கள்ர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

நாகா உதயன் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் கிறிஸ்டோபர் மற்றும் சலீம் ஆகியோர் ஒளிப்பதிவை மேற்கொள்ள, முத்து முனியசாமி படத்தொகுப்பை கவனிக்கிறார். யுகபாரதி, விவேகா, அந்தோணி தாசன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘தாழ்த்தப்பட்ட ஒருவரை தாழ்த்தப்பட்டவர் என்பதற்காகவே கொலை செய்த குற்றத்திற்காக’ என தொடங்கும் ட்ரைலரே இந்த படம் பரியேறும் பெருமாள், காலா, ஜெய்பீம் வரிசையில் இடம்பெறும் என படத்தின் டிரைலரை பார்த்தவர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

உலகம் முழுவதும் இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.