மாதவிடாய் குறித்த மூட நம்பிக்கைகளை இந்திய பெண்கள் எப்படி எதிர்த்து போராடுகிறார்கள் என்பது பற்றி ஈரானிய – அமெரிக்கரான ரைகா ஜெஹ்தாப்சி எடுத்துள்ள ‘பீரியட் எண்ட் ஆஃப் சென்டென்ஸ்’( period end of sentence)என்கிற டாக்குமெண்டரி படம்தான் ஆஸ்கர் விருது பெற்றுள்ளது.
வட இந்தியாவில் உள்ள ஹார்பூர் எனும் பகுதியில் வசிக்கும் பெண்களிடம் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த டாக்குமெண்டரி வீடியோ 26 நிமிடங்கள் அடங்கியது.
விலை குறைந்த நாப்கினை தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் இந்த பீரியட் டாக்குமெண்டரியில் நடித்துள்ளார். இவரது கதாபாத்திரத்தால் உந்தப்பட்டுதான் பிரபல இந்தி நடிகர் அக்ஷய்குமார் ‘பேட் மேன்’ என்ற இந்திப்படத்தில் நடித்திருந்தார். கடந்த வருடம் பிப்ரவரியில் அப்படம் ரிலீஸாகியிருந்தது.
இந்நிலையில், பெண் சமூகத்துக்கு பெரும் தொண்டு செய்த ஒரு தமிழர் பங்கு பெற்ற படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வானது மகிழ்ச்சி. கீழே படம்…