September 22, 2020
  • September 22, 2020
Breaking News

Currently browsing செய்திகள்

தெலுங்கின் முன்னணி நடிகர் திடீர் மரணம்

by by Sep 8, 2020 0

தெலுங்கின் முன்னணி காமெடியனாகவும், வில்லன் நடிகராகவும் வலம் வந்தவர் ஜெயபிரகாஷ் ரெட்டி.

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த ஆறு படத்தில் ரெட்டி என்னும் கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். உத்தமபுத்திரன் படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் மிகவும் பிரபலமடைந்தது. ஆனால் தொடர்ந்து தமிழில் இவர் நடிக்கவில்லை.

இந்நிலையில் இன்று ஜெயபிரகாஷ் ரெட்டி மாரடைப்பு காரணமாக காலமானார். மேடை நாடகத்தில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கியவர், பின்னர் தெலுங்கு திரையுலகில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் பணிபுரிந்துள்ளார்.

இவருக்கு வயது 73….

Read More

பாட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் திருமணத்தை உறுதி செய்தார் விஷ்ணு விஷால்

by by Sep 7, 2020 0

நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் இயக்குனர் நடிகர் நட்ராஜ் மகள் ரஜினிக்கும் திருமணமாகி ஆர்யன் என்ற மகன் இருக்கிறார்.

இருந்தாலும் கருத்து வேறுபாடு காரணமாக ரஜினிக்கும் விஷ்ணுவுக்கும் 2018-ம் ஆண்டு விவாகரத்து ஆனது.

அததன் பிறகு பாட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் அவருக்கு காதல்்் வந்துவிட்டதாக  அனைத்து மீடியாக்களும்் எழுதின.

இதனைத் தொடர்ந்து பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் தனது காதலை 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி உறுதி செய்தார் விஷ்ணு.

இன்று (செப்டம்பர் 7) ஜுவாலா கட்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு…

Read More

வசமாக சிக்கிக் கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

by by Sep 6, 2020 0

யுவன் சங்கர் ராஜா, நடிகர்கள் சாந்தனு, கிக்கி விஜய், சிரிஷ் உள்ளிட்டோர் அணிந்திருந்த டி சர்ட் வாசகமான #ஹிந்தி_தெரியாது_போடா என்ற ஹேஷ்டேக் இன்று முழுதும் வைரலாகி வந்தது தெரிந்திருக்கும்.

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு எப்போதுமே குரல் கொடுத்து வரும் நிலையில், இந்த டிரெண்டிங்கை பார்த்த தமிழ் பொண்ணு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தானும் அந்த டி சர்ட்டை வாங்கி அணிந்து கொண்டு போட்டோ போட்டிருந்தார்.

அதைப் பார்த்த பலரும் ‘இந்த வீடியோ-விலே இருக்கறவர்தானே ஐஸ்வர்யா ராஜேஷ்..? அப்ப…

Read More

போதை மருந்து கடத்தல் வழக்கில் நடிகை ராகினி திவிவேதி கைது

by by Sep 4, 2020 0

பெங்களூருவில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த டிவி நடிகை அனிகா, கேரளாவைச் சேர்ந்த ரவீந்திரன், அனூப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கைதான டிவி நடிகை அனிகாவிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு கன்னட சினிமா நடிகர், நடிகைகளுடன் தொடர்பு இருப்பதும் திரையுலகினர் நடத்தும் பார்ட்டிகளின் போது அனிகா போதை மாத்திரைகளை விற்று வந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில், கன்னட சினிமாவில் நடக்கும் பார்ட்டிகளின் போது போதைப் பொருட்கள் பயன்பாடு இருப்பதாக கன்னட பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் பரபரப்பு புகார்…

Read More

பூர்ணிமா பாக்யராஜின் தாயார் காலமானார்

by by Sep 1, 2020 0

நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜின் மனைவி பூர்ணிமா பாக்கியராஜின் தாயார் திருமதி. சுப்புலட்சுமி ஜெயராம் இன்று காலமானார்.

85 வயதான சுப்புலட்சுமி ஜெயராம் சமீப காலமாக உடல் நலம் இல்லாமல் இருந்த நிலையில் இன்று (01-09-2020) நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் உயிர் பிரிந்தது.

அவருக்கு பூர்ணிமா பாக்யராஜ் தவிர ஸ்ரீராம் என்று ஒரு மகன் இருக்கிறார்.

அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெற இருக்கிறது. 

 

Read More

திருச்சிக்கு மருத்துவத் தேர்வு எழுத வந்த சாய் பல்லவி

by by Sep 1, 2020 0

வெளிநாட்டு மருத்துவப் படிப்பை முடித்து இந்தியாவுக்கு வரும் மாணவர்கள், இங்கு மருத்துவராக பணியாற்ற வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி தேர்வில் (FMGE- Foreign Medical Graduate Examination) தேர்ச்சி பெறுவது அவசியம்.

அதாவது அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 5 நாடுகளில் மருத்துவப் படிப்பு முடித்தால் இந்த எப்எம்ஜிஇ தேர்வை இந்தியாவில் எழுதத் தேவையில்லை.

அதேவேளையில், ரஷ்யா, சீனா, வங்கதேசம், பிலிப்பைன்ஸ், ஜார்ஜியா உள்ளிட்ட நாடுகளில் மருத்துவம் படித்தவர்கள், இந்தியாவில் டாக்டராக பணியாற்ற கட்டாயம் இந்தத் தேர்வில்…

Read More

மலேசியாவில் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு வந்த எம்ஜிஆர் கள்

by by Aug 30, 2020 0

நேற்று முன்தினம் மலேசிய நாட்டிலுள்ள கோலாலம்பூர், பெட்டலிங் ஜெயா, கெலாங், காஜாங், ஜொகூர் பாகு, ஈப்போ, பட்டர்ஒர்த் ஆகிய இடங்களில் ‘லோட்டஸ்’ குழுமத்தின் 11 அரங்குகளில் டிஜிட்டல் வடிவத்திலான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் திரையிடப்பட்டது.

பெட்டலிங் ஜெயா லோட்டஸில் சமூக இடைவெளியுடன் அரங்கு நிறைந்து காணப்பட்டது. லோட்டஸ் குழுமத்தின் அதிபர் ‘டத்தோ’ திரு ராமலிங்கம் படம் காண வந்தவர்களை வரவேற்றார்.

எம்.ஜி.ஆர். ரசிகர்கள் அவருக்கு மாலையணிவித்து மகிழ்ந்தனர்.

மலேசியாவில் எம்.ஜி.ஆர்.தோற்றத்தில்
பிரபலமான நடிகர்கள் ஹரி (திருமதி லதாவுடன் ‘வாலிபன் சுற்றும் உலகம்’…

Read More

அண்டாவ காணோம் தள்ளிப்போனது மம்மி சேவ் மி 30இல் ரிலீஸ் – ஜே எஸ் கே அறிக்கை

by by Aug 28, 2020 0

அனைவருக்கும், வணக்கம்! 

இன்று 28 ஆகஸ்ட் 2020 ‘அண்டாவ காணோம்’ திரைப்படம் JSK Prime Media App–ல் திரையிட திட்டமிட்டிருந்தோம். சில தவிர்க்க முடியாத காரணங்களால் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பின்னர் அதற்கான தேதியை விரைவில் அறிவிக்க உள்ளோம்.

‘அண்டாவ காணோம்’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்த
வாடிக்கையாளர்களுக்கு நன்றி. கிட்டத்தட்ட 14 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

JSK…

Read More

ஆரவ் திருமணம் அடுத்த மாதம் நடக்கிறது – ஓவியா கலந்து கொள்கிறார்?

by by Aug 26, 2020 0

சென்னை ஈ சி ஆர் சாலையிலுள்ள ரிசார்ட் ஒன்றில் வரும் செப்டம்பர் 6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ந‌டக்கிறது ‘பிக் பாஸ்’ முதல் சீசனில் டைட்டில் வென்ற ஆரவ்வின் திருமணம்.

ஆரவ் திருமணம் செய்து கொள்ளப் போகிற பெண் ராஹே. யார் இந்த ராஹே?

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் படமாகத் தயாராகி வரும் ‘ஜோஷ்வா’ மூலம் தமிழ்த் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார் ராஹே.

ராஹே குடும்பமும் ஆரவ் குடும்பமும் ஏற்கனவே பழக்கமான வர்களாம். அந்தத் தொடர்பில்…

Read More

எம்ஜிஆர் வேடத்தில் விஜய் ஜெயலலிதா வேடத்தில் சங்கீதா விஜய் திருமண நாள் கலாட்டா

by by Aug 26, 2020 0

நடிகர் விஜய் நேற்று தனது 21 ஆவது திருமண நாள் விழாவை மனைவி மற்றும் குடும்பத்துடன் கொண்டாடினார். அவர் கொண்டாடினாரோ இல்லையோ அவரது ரசிகர்கள் நாடெங்கும் அவரது திருமண நாள் விழாவை கொண்டாடினர்.

இந்நிலையில் விஜய்யின் திருமண தினத்தை முன்னிட்டு மதுரையில் உள்ள விஜய் ரசிகர்கள் வித்தியாசமானபோஸ்டர் ஒன்றை ஒட்டி இருக்கிறார்கள்.

அதில், எம்.ஜி.ஆர் வேஷத்தில் விஜேக்யும், ஜெயலலிதா வேடத்தில் அவரது மனைவியும் இடம்பெற்றுள்ளனர்.

இந்த போஸ்டர் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது👇

Read More