இது ஒரு பான் இந்திய படம். அதனால் தமிழ் அல்லாத தலைப்பு பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ள ஏதுமில்லை. இருந்தாலும் கேரளாவில் தயாரிக்கப்பட்டதால் இந்த ஏஆர்எம் என்பதற்கான விரிவாக்கம் மலையாளத்தில் ‘அஜயன்ட ரண்டாவது மோஷனம்’ என்று அறிக… அதாவது அஜயனின் இரண்டாவது திருட்டு.
நாயகன் இதில் மூன்று முகம் காட்டி இருக்கிறார் அதாவது அவர் மூன்று வேடங்களில் வருகிறார். முதல் வேடம் மன்னராட்சி காலத்தில் அமைகிறது அவரது வீர தீர செயலுக்கு பரிசாக என்ன வேண்டும் என்று மன்னர் கேட்க அரிதான சிலை ஒன்றே பரிசாக கேட்க மன்னரும் அதை அளிக்கிறார்.
சாதிய வேறுபாடுகள் பெரிதாக இருந்த அந்த காலகட்டத்தில் அந்த சிலையை கேட்டு பெற்றதன் காரணம் எல்லா இன மக்களும் பாகுபாடில்லாமல் அதை வணங்க வேண்டும் என்பதுதான். ஆனால் அப்படி முடியாமல் போக, அம்மை நோய் ஏற்பட்டு அவர் இறந்து போவதாக அத்துடன் அந்த கதை முடிவு பெறுகிறது.
அடுத்த காலகட்டத்தில் இவர் மணியன் என்ற ஒரு திருடனாக அறியப்படுகிறார். அவர் மேற்படி கோயிலில் இடம்பெற்றிருக்கும் அந்த அரிய சிலையை மனைவியின் ஆசைக்காகத் திருடுகிறார். மனைவியிடம் காட்டிவிட்டு அதை பத்திரமாக பாதுகாக்கக் கொண்டு செல்லும்போது பொதுமக்களால் பிடிக்கப்பட்டு சிலை மீண்டும் கோயிலில் வைக்கப்பட, அவர் இறந்து போகிறார்.
இறந்து போன திருடன் மணியனின் பேரனாக மூன்றாவது வேடத்தையும் அவரே ஏற்கிறார். திருடனின் மகள் வயிற்றில் பிறந்ததால் சிறுவயதில் இருந்து இவரையும் திருடனாகவே ஊர் பார்க்க ஆனால் ஒரு மின்சாரப் பழுது நீக்குபவராக வரும் அவர் அரசு வேலைக்காக காத்திருக்கிறார்.
இப்போது முதல் தலைமுறையிலிருந்து கதை மீண்டும் தொடங்குகிறது. அந்த அரிய சிலையை அவருக்கு அளித்த மன்னரின் வாரிசு ஒருவன் இந்த ஊர் கோவிலில் சிலை இருப்பதை அறிந்து அதை தனதாக்கிக் கொள்ள வருகிறான். அதை இப்போது திருடனாக அறியப்படும் வைத்து காரியம் சாதிக்க நினைக்க அது முடிந்ததா என்பது மீதி கதை.
அறிமுக இயக்குநர் ஜிதின் லால்.
’அஜயனின் ரெண்டாம் மோஷனம்’ (அஜயனின் ரெண்டாவது திருட்டு) என்ற மலையாள வாக்கியத்தின் சுருக்கம் தான் ‘ஏ.ஆர்.எம்’. கதை
நாயகிகளாக நடித்திருக்கும் கிரித்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லக்ஷ்மி என மூன்று பேரும் மூன்று காலக்கட்டங்களுக்கு ஏற்ற தேர்வாக இருப்பதோடு, அவர்களின் நடிப்பும் கதாபாத்திரத்தை போல் அளவாக அமைந்திருக்கிறது.
பசில் ஜோசப், ரோஹினி, ஹரிஷ் உத்தமன், நிஷ்தர் சையத், ஜெகதீஷ், பிரமோத் ஷெட்டி, அஜு வர்கீஸ், சுதீஷ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதை ஒட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் திபு நிணன் தாமஸின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது. குறிப்பாக மூன்று காலக்கட்டங்களை தனது பீஜியம் மூலமாக வேறுபடுத்தி காட்டியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ஜோமன் டி.ஜான் அழகான கேரள பகுதிகளுக்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதத்தில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.
படத்தொகுப்பாளர் சமீர் மொஹமத், மூன்று கதாபாத்திரங்களையும், மூன்று காலக்கட்டங்களையும் நான் லீனர் முறையில் தொகுத்தாலும், ரசிகர்களுக்கு எந்தவித குழப்பமும் ஏற்படாத வகையில் மட்டும் இன்றி எந்த இடத்திலும் படம் தொய்வடையாதவாறு காட்சிகளை தொகுத்திருக்கிறார்.
சண்டைக்காட்சிகளை வடிவமைத்த விக்ரம் மோர் மற்றும் பீனிக்ஸ் பிரபு, களரி சண்டைக் காட்சியை வடிவமைத்த பி.வி.சிவகுமார் குருக்கள் ஆகியோரது பணியும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. சலீம் லஹிரின் தலைமையில் வி.எஃப்.எக்ஸ் காட்சிகளும் படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறது.
ரமேஷ், அகரன் மற்றும் கைலாஷ் ஆகியோரது வசனங்கள் மிக எளிமையாகவும், சுருக்கமாகவும் இருந்தாலும், திரைக்கதைக்கு வலிமை சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. குறிப்பாக மலையாள படம் பார்க்கிறோம் என்ற உணர்வே ஏற்படாத வகையில் தமிழ் வசனங்கள் இடம்பெற்றிருப்பது படத்திற்கு கூடுதல் பலம்.
அறிமுக இயக்குநர் ஜிதின் லால்,