April 26, 2024
  • April 26, 2024
Breaking News

Monthly Archives: May 2020

அடுத்த ஓடிடி வெளியீடு நெட்பிளிக்ஸ் – அட்லீ தயாரிப்பில்..?

by on May 31, 2020 0

இயக்குநர் அட்லீ தயாரிப்பில் உருவாகியிருக்கும் அந்தகாரம் திரைப்படத்தின் உரிமையை நெஃட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விக்னராஜன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்த அர்ஜுன் தாஸ், கிரீடம் படத்தில் அஜித்துக்கு தம்பியாக நடித்த வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் ‘அந்தகாரம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்தை அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து பேஷன் […]

Read More

டிக்கெட் விலையை குறைத்து தியேட்டர்களை திறக்க அனுமதி கேட்டு கோரிக்கை

by on May 31, 2020 0

தமிழகத்தில் கொரானா வைரஸ் தொற்றை தடுக்க மார்ச் 19 அன்று திரையரங்குகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது மார்ச் 31 முதல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு தமிழகத்தில் இன்றுவரை சில மாற்றங்களுடன் தொடர்ந்து வருகிறது கொரானோ தொற்று பரவலை பொறுத்து சிறு மற்றும் குறுந்தொழில்கள் அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் என எல்லா தொழில்களையும் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது முதலில் மூடப்பட்ட தனித்திரையரங்குகள், மால், மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கு […]

Read More

அஜித் நடித்த என்னை அறிந்தால் பாகம் 2 படமாக்க திட்டம் – கௌதம் மேனன்

by on May 30, 2020 0

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு திரிஷா நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் படமாக்கப்படும் என்று அறிந்த நிலையில் அதன் குறும்படம் ஒன்றை லாக் டவுனில் வைத்து இயக்கி வெளியிட்டார் கௌதம் மேனன்.  கார்த்திக் டயல் செய்த எண் என்று தலைப்பிடப்பட்ட அதில் சிம்புவும் த்ரிஷாவும் நடித்திருந்தது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பை கிளறி விட்டது. அந்தப் படத்தை போன்றே அஜித், அருண் விஜய், […]

Read More

நட்சத்திரங்கள் சம்பளத்தை குறைக்க மணிரத்தினம் ஆலோசனை

by on May 30, 2020 0

கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தமிழ்த் திரையுலகம் எப்படி பயணிக்கும் என்பதை தென்னிந்திய சேம்பர் ஆஃப் காமர்ஸ் மற்றும் இண்டஸ்ட்ரீஸ் (SICCI) வெப்பினார் (Webinar)கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது. இதில் முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு திரையுலகம் இனிமேல் எப்படி பயணிக்க வாய்ப்புள்ளது தொடர்பாக தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். இதில் இயக்குநர் மணிரத்னம் பேசும்போது, “திரைப்பட விநியோகம் மற்றும் திரையிடல் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இனி தயாரிப்புச் செலவுகளைக் குறைக்க வேண்டும். துறை தொடர்ந்து இயங்குவதை […]

Read More

காட்சி ஊடகங்களில் சாதி மத பிரச்சனை தென்பட்டால் புகார் அளிக்க வேண்டிய முகவரி

by on May 30, 2020 0

சமூக வலைதளங்கள், டிவிக்கள், மற்றும் ஒடிடி தலங்கள், ஆன்லைன் தொடர் உள்ளிட்டவற்றில், ஜாதி, மத துவேஷத்தை தூண்டும் வகையில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பினால், அது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்திடம் புகார் அளிக்க வேண்டிய முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஜீ 5 எனும் ஓடிடி தளத்தில் வெளியான ‘காட்மேன்’ டீசரில், பிராமண சமூகத்தை அவமதிக்கும் வகையில் காட்சிகள், வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த தொடரை தடை செய்ய வலியுறுத்தி போலீசில் […]

Read More

என் கதை திருடப்பட்ட அஜித் படம் – எழுத்தாளர் இந்துமதி கிளப்பி இருக்கும் சர்ச்சை

by on May 29, 2020 0

அகிலன் கண்ணன் அவர்கள் சித்திரப் பாவை பற்றி ஒரு பதிவிட்டிருந்தார். அதைப் படித்ததும் என் கதை திருடப்பட்டது ஞாபகத்திற்கு வந்தது. அதுவும் எப்பேர்ப்பட்ட கதை. இன்னும் கூட அனைவராலும் பாராட்டப் படும் கதை. படித்தவர்களால் மறக்க முடியாத கதை. ” தரையில் இறங்கும் விமானங்கள்.” இதைப் போய் திருடி இருக்கிறார்கள். அதுவும் நான் மிகவும் மதிக்கும் அஜீத் அவர்கள் நடித்த படம். ” முகவரி ” என்ற பெயரில் படமாகியிருந்தது. பின்னால் அஜீத்தின் சொந்தப் படம் என்று […]

Read More

பொன்மகள் வந்தாள் திரை விமர்சனம்

by on May 29, 2020 0

குழந்தைகளுக்கு மருத்துவம் பார்க்கும் டாக்டராவதற்குக் கொஞ்சமாகப் படித்திருந்தால் போதும் என்று நினைக்கும் பொதுப்புத்தியினாலேயே  பெரும்பாலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கும் சமுதாயம் முக்கியத்துவம் தருவதில்லை. அதிலும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு சரியான நீதி கிடைப்பதில் இந்த வளர்ந்த சமுதாயம், இன்னும் தளர்ந்த நிலையிலேயே இருக்கிறது.   அது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் எல்லா தீர்ப்புகளுமே உண்மையின் அடிப்படையில் அமையாமல், சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையிலேயே அமைவதால் உண்மையான நீதி மறுக்கப்படுவதும், அதுவே சமுதாயத்தில் […]

Read More

ரஜினி கார்த்திகை மாதம் புதிய கட்சியை அறிவிப்பார் – ரஜினி அண்ணன் சத்யநாராயணா

by on May 29, 2020 0

ரஜினி அரசியலுக்கு வெகு விரைவில் வருவார் என அவரது அண்ணன் சத்திய நாராயணா மீண்டும் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:- ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்பது மக்கள் விருப்பமாகும். இது தொடர்பாக அவர் தன் ரசிகர்களுடனும், தனது நல விரும்பிகளான நண்பர்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார். தற்போது முதல் சுற்று ஆலோசனையை அவர் முடித்துள்ளார். ஜூலை மாதம் மீண்டும் ரசிகர்களை சந்தித்து இரண்டாம் சுற்று ஆலோசனை நடத்தவுள்ளார். அவரது ரசிகர்கள் அனைவரும் ஒட்டு […]

Read More

இந்தியாவின் முதல் பெண் ஆக்ஷன் குறும்படம் மாயா அன்லீஷ்ட்

by on May 28, 2020 0

நாடக நடிகை, பாடகி, உடற்பயிற்சியாளர், நகைச்சுவையாளர் என்று பன்முகத் திறன் கொண்ட மாயா கிருஷ்ணனை பிரதானமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட குறும்படம் மாயா அன்லீஷ்ட்’. பெண் ஆக்ஷ்ன் காட்சிகளைக் கொண்ட படங்கள் எதுவும் இந்தியாவில் இதுவரை உருவாக்கப்பட்டதில்லை. இவ்வாறு உருவாகும் முதல் இந்தியப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற சண்டைக் கலைஞரான யானிக் பென் வடிவமைத்திருக்கும் ஆக்ஷன் காட்சிகள் கொண்ட இப் படம் முழுக்க முழுக்க பாரிஸில் உருவாக்கப்பட்டிருக்கிறது. யானிக் பென் மற்றும் […]

Read More