April 23, 2024
  • April 23, 2024
Breaking News

Monthly Archives: December 2019

மாஸ்டர் படத்தில் விஜய் குடிகாரர் ஆக வருகிறாரா?

by on December 31, 2019 0

இன்று மாலை புத்தாண்டு கொண்டாட்டத்தை மிஞ்சி விஜய் ரசிகர்கள் கொண்டாடிய விஷயம் தளபதி 64 படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டது தான். மாஸ்டர் என்ற அந்த தலைப்புடன் விஜய் 64 படத்தின் முதல்பார்வை வெளியானது. ஆனால் அந்த ஃபர்ஸ்ட் லுக் கில் விஜய் முகம் சற்றே கலங்கியது போல் தோன்றுகிறது. ஃபர்ஸ்ட் லுக் படம் சரியாக அச்சாகவில்லையோ என்று பலரும் முதலில் நினைத்தார்கள் ஆனால் திட்டமிட்டபடி தான் அப்படி விஜய் முகம் கலங்கியவாறு இருப்பதா க வைக்கப்பட்டுள்ளதாம். அது […]

Read More

வெப் சீரிஸ் போன தமன்னா வெகுண்டெழுந்த ஸ்ரீ ரெட்டி

by on December 31, 2019 0

இது வெப் சீரீஸ் சீசன். சினிமா நட்சத்திரங்கள் சினிமாவில் வாய்ப்பிழந்து போனால் அடுத்து அடைக்கலமாகும் இடமாக முன்பு டிவி சீரியல் இருந்தது. இப்போது அந்த இடத்தை வெப் சீரீஸ் ஆக்கிரமித்து இருக்கிறது. அப்படி சினிமாவில் தமிழ் தொடங்கி இந்தி வரை கோலோச்சிய தமன்னா, கடைசி கடைசியாக பேயாகவே நடித்து வந்தார். இனியும் விட்டால் சினிமாவில் தன்னை நிரத்தரப் பேயாக ஆக்கிவிடுவார்கள் என்று பயந்து அவரை நோக்கி வந்த வெப் சிரீஸை கபாலென்று பிடித்துக் கொண்டார். அப்படி அவர் […]

Read More

தல அஜித்தை மிரட்ட தயாராகும் இயக்குநர்

by on December 31, 2019 0

‘தல’ ரசிகர்களுக்கு இனி வலிமை படம் பற்றிய அப்டேட்டுகளைப் பெறுவதுதான் தலையாய வேலையே. இந்நிலையில் தல அஜித் அடுத்து ‘நேர்கொண்ட பார்வை’ காம்போவான போனி கபூரின் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் அவரது 60-வது படமான ‘வலிமை’ பற்றிதான் இனி அவர்களின் அடுத்த நகர்வு இருக்கப் போகிறது. அதன்படி நவம்பரில் இருந்து ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் வலிமை படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதைத் தொடர்ந்து புது வருடத்தின் ஜனவரியில் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. படத்தில் அஜித் உடன் […]

Read More

உடல்நிலை பாதித்த பிஆர்ஓவுக்கு ஒரு லட்சம் தந்த தமிழரசன் தயாரிப்பாளர்

by on December 30, 2019 0

எஸ்என்எஸ் மூவிஸ் சார்பில் கௌசல்யா ராணி பெருமையுடன் தயாரிக்கும் படம் தமிழரசன். இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் சிறப்பம்சமே வெகு நாட்களுக்குப் பிறகு  இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார் என்பதுதான். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா அடையாரில் மிகப்பிரம்மாண்டமாக நடந்ததுடன் அதில் வெளியிடப்பட்டது. விழாவில் இசை ஞானி இளையராஜா, இயக்குனர் இமயம் பாரதிராஜா, நாயகன் விஜய் ஆண்டனி, ராதாரவி,படத்தின் இயக்குநர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் சுரேஷ் […]

Read More

இரண்டாம் திருமணத்துக்கு தயாரான தொகுப்பாளினி ரம்யா

by on December 30, 2019 0

சின்னத்திரை, மீடியா மற்றும் பெரியதிரை வட்டாரங்களில் ரம்யா சுப்ரமணியனை யாருக்கும் தெரியாமல் இருக்காது. தொகுப்பாளினியாக தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர் இப்போது ஆடை, சங்கத்தமிழன் படங்களில் நடித்ததை அடுத்து இப்போது விஜய் 64 படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருவதால் ரசிகர்கள் வட்டத்திலும் பிரபலமடைந்து விட்டார். அத்துடன் முக்கியமான மீடியா சந்திப்புகளுக்கு அவரே தொகுப்பாளினியாகவும் மீடியாக்கள் தொடர்பான கேள்விகளின் தொகுப்பாளராகவும் மாறிவிட்டார். இந்நிலையில் அவரிடம் ரசிகர்கள் கேள்வி கேட்டு பதில்பெறும் நேரலை உரையாடல் நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் நடந்தது. […]

Read More

ரஜினியின் நடிப்புக்கு கைதட்டி மகிழ்ந்த தர்பார் படக்குழு

by on December 29, 2019 0

நீண்ட இடைவெளிக்குப் பின் கடந்த பேட்டை படத்தில்தான் ரஜினிகாந்த் தன் வழக்கமான ஸ்டைலில் நடிப்பில் கலக்கியிருந்தார். அதற்குப் பின் இப்போது அவரது முழு ஸ்டைல் நடிப்பைக் கொண்டுவர தர்பார் படத்தில் முயற்சித்து இருப்பதாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் கூறினார். படத்தில் பல இடங்களில் அவர் தன் பஞ்ச் டயலாக்குகளை பேசி வருகிறாராம். அப்படி அவர் தன் வழக்கமான மேனரிசங்கள், மற்றும் பஞ்ச் வசனங்களை பேசி  நடிக்கும்போது ஏ.ஆர்.முருகதாஸ் உட்பட படப்பிடிப்பில் இருந்த தர்பார் படக்குழு மொத்தமும் கைதட்டி […]

Read More