June 20, 2024
  • June 20, 2024
Breaking News

Monthly Archives: November 2019

கார்த்தியிடம் ரஜினி ஃபீல் பார்த்தேன் – ஜோதிகா

by on November 30, 2019 0

கார்த்தி, ஜோதிகா அக்கா- தம்பியாக முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் தம்பி. பாபநாசம் ரீமேக் மூலம் தமிழில் அறிமுகமான இயக்குநர் ஜீத்து ஜோசப் முதல்முறையாக இயக்கும் நேரடி தமிழ்ப்படம். சௌகார் ஜானகி, சத்யராஜ், நிகிலா விமல், ரமேஷ் திலக் என பிரமிக்கும் நடிகர் பட்டாளம் நடித்திருக்கும் படம் இப்படி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பின் உச்சத்தை விதைத்திருக்கும் “தம்பி” படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெற்றது. படக்குழுவினருடன் சூர்யா கலந்துகொண்ட விழாவில் ஜோதிகா பேசியது… “அப்பா அம்மா முன்னாடி […]

Read More

எனை நோக்கிப் பாயும் தோட்டா திரைப்பட விமர்சனம்

by on November 29, 2019 0

எத்தனைக் காலம்தான் காத்திருக்க வைத்தால்தான் என்ன..? கௌதம் மேனன் இயக்கத்தில் வந்திருக்கும் இந்த ‘தோட்டா’வில் இளமை சீறிப் பாய்வதைச் சொல்லியே ஆக வேண்டும்… கதை என்று பெரிதாக ஒன்றுமில்லைதான். கௌதம் மேனனிடம் எப்போதும் இருக்கும் அதே ஸ்கிரிப்ட்தான். இதில் அண்ணன் சென்டிமென்ட் ஒன்று புதிதாக முளைத்திருக்கிறது. மற்றபடி தனுஷுக்கு மேகா ஆகாஷைக் கணடதும் காதல் வந்து அதைத் தொடர்ந்த பிரச்சினைகள்தான் கதை. அவரது வழக்கப்படியே ஹீரோவின் நரேஷனிலேயே கதை பயணிப்பதிலும் வழக்கமான ‘மேனன் டெம்ப்ளேட்’தான். ஆனால், அதை […]

Read More

குஷ்புவுக்கு முன்பு முத்தமிட்டு நடித்தேன் – சுந்தர் சி

by on November 29, 2019 0

இயக்குநர் V Z துரை இயக்கியுள்ள படம் ‘இருட்டு’. ஹாரர் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் சுந்தர் சி நாயகனாக நடிக்க, புதுமுகம் சாக்‌ஷி சௌத்ரி நாயகியாக நடித்துள்ளார். VTV கணேஷ், விமலா ராமன், சாய் தன்ஷிகா, யோகிபாபு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் சுந்தர் சி பேசியதிலிருந்து… ரொம்ப நாள் கழித்து நடிகராக இங்கு நிற்கிறேன். VTV கணேஷ் சார் தான் இந்தப்படம் உருவாக […]

Read More

அழியாத கோலங்கள் 2 திரைப்பட விமர்சனம்

by on November 29, 2019 0

எந்த மனிதனுக்குமே முதலில் முகிழ்த்த காதல் மரணப்படுக்கையிலும் மறக்காமல் இருக்கும். அதிலும், படைப்பாளிகளுக்குச் சொல்லவே வேண்டாம். அந்தக் காதலே அவர்களை கலைஞர்களாக்குகிற காரணி எனலாம். அப்படித் தன் பள்ளித் தோழியான முதல் காதலியால் உந்தப்பட்டு எழுத்தாளரான கௌரிசங்கர் வேறு பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார். 24 வருடங்கள் கழிந்த நிலையில் அவரது எழுத்துக்கு ‘சாகித்ய அகாடமி’ விருது கிடைக்க, போனில் வாழ்த்து வருகிறது முதல் காதலியிடமிருந்து… விருது வாங்கிய கையோடு வெளி உலகுக்குத் தெரியாமல் அவளைச் […]

Read More

சூர்யா தயாரிக்கும் அடுத்தபடம் சசிகுமார் ஜோதிகா நடிக்க தொடங்கியது

by on November 28, 2019 0

தொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடும் தரமான வெற்றிப்படங்களை தந்து வரும் நடிகர் சூர்யாவின் 2 டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் அடுத்த பட பூஜை, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷனில் இன்று  காலை (நவம்பர் 28) நடத்தப்பட்டது. மிக வித்தியாசமான படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் நடிகர்கள் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி கூட்டணியில் சூரி, கலையரசன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்களும் இணைந்து நடிக்கிறார்கள்.   கிராமியப் பின்னணியில் உறவுகளின் வலிமையைச் உரக்கச்சொல்லும் விதமாக இந்தப் படம் […]

Read More

கே பாக்யராஜ் பெண்களை அவமானப்படுத்துவது சரியா?

by on November 28, 2019 0

இரண்டு நாள்களுக்கு முன் கருத்துகளைப் பதிவு செய் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கே.பாக்யராஜ், “பெண்கள் இடம் கொடுக்காமல் ஆண்களால் தப்பு செய்ய முடியாது…” என்ற கருத்தில் பொள்ளாச்சி சம்பவத்தில் பெண்களுக்கும் குற்றத்தில் சம்பந்தம் என்று பேசினார். இதற்கு பல முனையிலிருந்தும் எதிர்ப்புகள் உருவாகி வரும் நிலையில் நடிகர் சங்க நாசர் அணி உறுப்பினரான பூச்சி முருகன் தன் வலைதள பக்கத்தில் கே.பாக்யராஜ் கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அது வருமாறு… “அகில இந்திய அளவில் திரைக்கதை […]

Read More

தம்பி திரையரங்கு உரிமையை வாங்கியது யார் தெரியுமா?

by on November 27, 2019 0

சமீபத்தில்கோடம்பாக்கத்தை திரும்பி பார்க்க வைத்த SDC பிக்சர்ஸ் தொரட்டி, திட்டம் போட்டு திருடுற கூட்டம்,காவியன், ஆகிய படங்களை வெளியிட்டனர்.   அடுத்துசேரன் நடிப்பில் உருவாகியுள்ள “ராஜாவுக்கு செக்”, திரிஷாவின் “கர்ஜனை” படங்களை வெளியிட இருக்கிறார்கள்.  இதற்கிடையில் கார்த்தியின் “தம்பி” படம் நன்றாக வந்திருப்பதாக கேள்விப்பட்டு அப்படத்தின் தமிழ்நாட்டு தியேட்டரிகல் உரிமையை வாங்க முடிவு செய்து அப்படத்தை வாங்கினர்.  பல முன்னணி நிறுவனங்கள் போட்டி நிலையிலும் “தம்பி” படத்தின் தமிழ்நாட்டு உரிமையை   SDC  பிக்சர்ஸ்  கைப்பற்றிள்ளதாம்.

Read More