சோதிட புராண பிரியர்களுக்கு எளிதாகத் தொடர்புபடுத்திக்கொள்ளும் படம் இது.
நவ கிரகங்களில் சாயா கிரகங்கள் என்றழைக்கப்படும் ராகுவும், கேதுவும் எப்படி உருவாகின என்று சொல்லும் கதையை மேடை நாடகங்களில் புகழ்பெற்ற இயக்கி இருக்கிறார்.
கதைப்படி தேவர்களுக்கும், அசுரர்களுக்குமான தொடர் மோதலில் தேவர்கள் பக்கம் நிறைய இழப்புகள் ஏற்பட, இரேசர்வா வரம் கிடைக்க வேண்டி நாரதரின் யோசனைப்படி பாற்கடலில் துயிலும் நாராயணனை சந்திக்கிறார்கள்.
அப்போது அவர், பல்வேறு மூலிகைகளை பாற்கடலில் கலந்து அதை மலையை மத்தாகவும், பாம்பைக் கயிறாகவும் வைத்து கடந்தால் அமுதம் உருவாகும் என்றும், அதை அருந்துபவர்களுக்கு மரணமிலாப் பெருவாழ்வு கிடைக்கும் என்று கூற, ஒரு பக்கம் தேவர்களும், மாறி பக்கம் அசுரர்களுமாக நின்று பாற்கடலைக் கடைய அமுதம் கிடைக்கிறது.
அதில் தங்கள் பங்கைக் அசுரர்கள் கேட்க, பகவான் நாராயணனின் தந்திரத்தால் தேவர்கள் மட்டுமே அதை அருந்துகிறார்கள்.
ஆனால், அசுர இளவரசனான சுபர்பானு, நாராயணனின் தந்திரத்தை மிஞ்சும் விதமாக தேவர் வேடத்தில் சென்று அமுதத்தை அருந்துகிறார்.
இதில் கோபமான நாராயணின் கோபம் சபர்பானுவை என்ன செய்தது, அதில் எப்படி ராகு, கேது எவ்வாறு உருவாகிறார்கள் என்று சொல்லும் கதை.