இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான சூர்யாவை ஒரு பான் இந்திய ஸ்டாராக ஆக்கிவிட வேண்டும் என்ற முயற்சியில் கே.இ.ஞானவேல் ராஜாவும் சிறுத்தை சிவாவும் சேர்ந்து மிரட்டி இருக்கும் படம்.
1070 இல் ஆரம்பிக்கும் கதை 2024 இல் வந்து இப்போதைக்கு முற்றுப்பெறுகிறது. அது எப்படி என்பதை இரு வேறு காலகட்ட சுவாரஸ்யத்துடன் திரைக்கதை அமைக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சிவா.
தற்போதைய காலகட்டத்தில் கோவாவில் சூர்யா ஒரு பிளேபாயாகவும், காவல்துறை நேரடியாக பிடிக்க முடியாத குற்றவாளிகளை பிடித்து கொடுக்கும் Bounty hunter ஆகவும் இருக்கிறார். கிட்டத்தட்ட அதே டூட்டியில் அவருக்கு ஏட்டிக்குப் போட்டியாக வருகிறார் திஷா பதானி.
இவர்கள் இருவருக்கும் முறையே அல்லக் கைகளாக யோகி பாபுவும், ரெடின்ஸ் கிங்ஸ்லியும் வருகிறார்கள். இவர்கள் செய்யும் அலப்பறைக்கு இடையில் ரஷ்ய விஞ்ஞான ஆராய்ச்சி முகாமில் இருந்து தப்பிய சிறுவன் ஒருவன் குறுக்கிட அந்தச் சிறுவன் மீது சூர்யாவுக்கு ஒரு இனம் புரியாது ஈர்ப்பு ஏற்படுகிறது. அதைக் கண்டுபிடிக்கும் வேலையில்தான் கடந்த வரலாற்றுக் காலத்தில் நடந்த சம்பவங்கள் அவரது நினைவுக்கு வருகின்றன. அதன் முடிவு என்ன என்பது மீதிக்கதை.
ஆனால் அது முடியவில்லை. இரண்டாம் பாகத்திலும் தொடரும் என்பது உலகறிந்த விஷயம்தான்.
பிளேபாய், ஆக்ஷன் ஹீரோ, பாசக்கார மனிதன் என்று பலமுகம் காட்டி படம் முழுவதும் உணர்ச்சி மயம் காட்டியிருக்கிறார் சூர்யா.