April 25, 2024
  • April 25, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • என்னைக் கஷ்டப்படுத்திய வண்டி இயக்குநர் – விதார்த் உருக்கம்
September 9, 2018

என்னைக் கஷ்டப்படுத்திய வண்டி இயக்குநர் – விதார்த் உருக்கம்

By 0 919 Views

பொல்லாதவன் படத்துக்குப் பின் ஒரு மோட்டார் பைக்கை கதையின் மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் ‘வண்டி’. ரூபி ஃபிலிம்ஸ் ஹஷீர் தயாரிப்பில் விதார்த், சாந்தினி நடித்திருக்கிறார்கள். சூரஜ் எஸ் குரூப் இசையமைத்திருக்கும் இந்த படத்தை ரஜீஷ் பாலா இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இசையை வெளியிட்டு வாழ்த்தி பேசியது ஹைலைட்.

மற்றவர்கள் பேசியதிலிருந்து…

தயாரிப்பாளர் பிஎல் தேனப்பன் –

“விதார்த் நடித்தால் அது நல்ல படமா தான் இருக்கும். தமிழ்நாட்டில் சமீபத்தில் 150 திரையரங்குகள் புதிதாக வந்திருக்கின்றன. சினிமா நன்றாகத்தான் இருக்கிறது. நல்ல படங்கள் எடுத்தால் கண்டிப்பாக ஓடும், இந்த படமும் அதில் ஒன்றாக இருக்கும்..!”

நடிகர் அருள்தாஸ் –

“வண்டி ஒரு சிறப்பான ஸ்கிரிப்ட். விதார்த் ஒரு நல்ல யதார்த்தமான நடிகர். மல்டி கேமரா செட்டப்பில் படத்தை எடுத்திருக்கிறார்கள், இது கொஞ்சம் புதுவிதமான அனுபவமாக இருக்கும்..!”

இசையமைப்பாளர் சூரஜ் எஸ் குரூப் –

“நானும் சென்னையில் வளர்ந்தவன் தான். ஜிவி பிரகாஷ் சார் இசை எனக்கு மிகவும் பிடிக்கும். தொடர்ந்து தமிழ் படங்களுக்கு இசையமைக்க விரும்புகிறேன்..!”

இயக்குனர் ரஜீஷ் பாலா –

“புது இயக்குனருக்கு தயாரிப்பாளர் கிடைப்பது ரொம்ப கஷ்டம். அப்படிக் கிடைத்த பின்னரும், இந்தப் படம் தயாரிப்பில் நிறைய பிரச்சினைகளை சந்தித்தது. ஒரு நல்ல தயாரிப்பாளர் இருந்தால் தான் நல்ல படம் வரும், அப்படி ஹஷீர் எனக்கு ஒரு நல்ல தயாரிப்பாளராக அமைந்தார்.

இந்த படம் 70 நாட்கள் படப்பிடிப்பில் இருந்தது, 55 நாட்கள் இரவு பகலாக படப்பிடிப்பு நடந்தது. மொத்த குழுவின் கடின உழைப்பினால் தான் இது சாத்தியமானது..!”

நடிகர் ஜான் விஜய் –

“தொடர்ந்து போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். ஆனால், இதுவரை நடித்ததிலேயே சிறப்பான போலீஸ் கதாபாத்திரம் இதுவாக தான் இருக்கும்..!”

நடிகர் விதார்த் –

“வீரம்’ படத்தின் போது எனக்கு இந்தக் கதையை சொன்னார்கள். ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் 4 கேமராக்களை வைத்தெல்லாம் படத்தை எடுத்தார்கள். இயக்குனர் ரொம்பவே கஷ்டப்படுத்தினார். ஆனால், ‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா உடன் நடிக்கும்போது இயக்குனர் ராதாமோகன் என் நடிப்பை பாராட்டி தள்ளினார். அதற்கு காரணம் இந்த படத்தில் நான் எடுத்த பயிற்சிதான்.

இந்த படத்தில் ஒரு ஃபிரேம் மாறினாலும் படம் புரியாது. அப்படிப்பட்ட ஒரு ஹைப்பர்லிங்க் படம். தயாரிப்பில் இருக்கும்போது சில பிரச்சினைகள் நடந்தது, அப்போது தேனப்பன் சாரிடம் சென்றேன். அவர் தான் இதை சுமூகமாக முடித்து வைத்தார். அடுத்து ஒரு கேங்க்ஸ்டர் படம் நடித்திருக்கிறேன், எல்லா வகையான படங்களிலும் நடிக்க விருப்பம் இருக்கிறது..!”