June 13, 2025
  • June 13, 2025
Breaking News
  • Home
  • இளையராஜா

Tag Archives

முதல்வர் வெளியிட்ட ‘திருக்குறள்’ திரைப்படத்தின் முதல் பாடல்..!

by on January 18, 2025 0

‘காமராஜ்’, ‘WELCOME BACK GANDHI’ திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தமிழரின் பெருமைமிகு அடையாளம் திருக்குறள்–ஐத் திரைப்படமாகத் தயாரித்துள்ளது. இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். திரைப்படம் விரைவில் வெளியாகிறது. இளையராஜா எழுதி இசையமைத்துள்ள ‘முல்லை வாசம்’ பாடலை முதல்வர் வெளியிட்டார்கள். இந்தப் பாடலின் ராகத்தில் இதுவரை இசைஞானி எந்தப்பாடலும் இயற்றவில்லை எனத் தெரிவித்தார். வெளியீட்டுவிழா நிகழ்வில் இயக்குனர் A.J.பாலகிருஷ்ணன், முதன்மைக் கொடையாளர் T.P.இராஜேந்திரன், VIT வேந்தர், தலைவர் தமிழியக்கம், டாக்டர் கோ.விசுவநாதன், வள்ளுவராக நடித்துள்ள கலைச்சோழன், வாசுகியாக […]

Read More

விடுதலை பாகம் 2 திரைப்பட விமர்சனம்

by on December 24, 2024 0

விடுதலை படத்தின் முதல் பாகம் தந்த வெற்றியும் வரவேற்பும், இந்த இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பை அதிகமாக்கியது.  கடந்த படத்துக்கும் இந்தப் படத்துக்கும் இனிய முரண் என்னவென்றால் அதில் சூரி அதிக திரை நேரத்தை எடுத்துக் கொண்டிருந்தார் – விஜய் சேதுபதி ஒரு விருந்தினர் வேடத்தில்  வந்திருந்தார்.  ஆனால் இதில் அப்படியே தலைகீழாக ஆகிப் போய் விஜய் சேதுபதியே அதிக திரை நேரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்தக் கதையை ஆரம்பித்தவர் சூரி என்பதால் அவரை வைத்துப் படத்தை […]

Read More

விடுதலை2 படத்துக்கு இசையமைப்பு ஆகாயத்தில் புள்ளி வைத்த மாதிரி – இளையராஜா

by on November 27, 2024 0

‘விடுதலை2’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா! எல்ரெட் குமார் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘விடுதலை2’ படம் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஒளிப்பதிவாளர், நடிகர் ராஜீவ் மேனன், “’விடுதலை1’ படம் ஒரு மேஜிக். முதல் படத்தில் நிழலில் ஒளிந்திருந்த லீடர் விஜய்சேதுபதி இரண்டாம் பாகத்தில் வெளியே […]

Read More

ஜமா திரைப்பட விமர்சனம்

by on July 31, 2024 0

கூத்துக் கலைதான் சினிமாவின் நதிமூலம் என்றிருக்க, இந்த சினிமாவின் மூலம் கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட அர்ப்பணிப்புடன் முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் பாரி இளவழகன்.  திருவண்ணாமலைப் பக்கம் நடக்கிற அல்லது நடந்த கதையைப் படமாக இயக்கியிருக்கும் அவரே படத்தின் நாயகனாகவும் நடித்திருப்பது சிறப்பான விஷயம். கூத்தின் குழுதான் ஜமா என்று அழைக்கப்படுகின்றது. அப்படி ஒரு ஜமாவில் பெண் வேடமிட்டு நடிக்கிறார் பாரி இளவழகன். இதனால் அவரது உடல் மொழி, பழகும் விதம் முதற்கொண்டு […]

Read More

விடுதலை திரைப்பட விமர்சனம்

by on March 31, 2023 0

சிறந்த இயக்குனருக்கான அடையாளம், இதுவரை நாம் பார்த்திருக்கும் சிறந்த படங்களை விஞ்சி இன்னொரு படத்தைப் படைப்பதுதான் என்றிருக்க, இயக்குனர் வெற்றிமாறனோ இன்னும் ஒரு படி மேலே போய், தான் படைத்த சிறந்த படங்களையே கூட இந்தப் படத்தில் விஞ்சி நிற்கிறார். களம் நமக்கு நன்றாகத் தெரிந்ததுதான். பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டின் கனிம வளங்களைச் சுரண்ட நம் மலைப் பகுதிகளைத் தங்கள் வசப்படுத்த நினைப்பதுவும், அதற்கு நம் அரசு இயந்திரமும் துணை போக, அப்படி நேர்ந்து விடாமல் […]

Read More

இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது: சபரிமலை சன்னிதானத்தில் வழங்கப்பட்டது

by on January 15, 2020 0

மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்காக அதிக பங்களிப்பு அளித்தவர்களுக்கு ஹரிவராசனம் விருதை கேரளா அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. 2020-க்கான விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது. இன்று சபரிமலை சன்னிதானத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது. இந்த விருதில் ரூ.1 லட்சம் பணம், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கவுரவிக்கப்படும். கடந்த 2019-க்கான ஹரிவராசனம் விருது பாடகி பி.சுசிலாவுக்கு வழங்கப்பட்டது. 2020-ம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதை இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது. இதே […]

Read More

இசை எனக்கு மூச்சு விடுவதைப் போல – இளையராஜா

by on November 20, 2019 0

தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த வில்லன் நடிகர் நம்பியாரின் நூற்றாண்டு வருடம் இது. அதற்கான விழாவில் இளையராஜா கலந்து கொண்டது சிறப்பு. அவ்விழாவில் இளையராஜா பேசியதிலிருந்து… “1980-ல் குருசாமி நம்பியார் சுவாமிகளிடம் ஐயப்பனுக்கு மாலை போட்டுக் கொண்டேன். அப்போது சபரிமலை சென்று வந்த மூன்று நாள்களும் அவற்றில் நம்பியார் சுவாமிகளிடம் பெற்ற அனுபவங்களும் மறக்க முடியாதவை.  நான் தேக்கடிக்குக் கீழே சபரிமலை சென்றால் தங்கிச்செல்ல ஒரு கெஸ்ட் ஹவுஸ் கட்டியிருக்கிறேன். நான் என் வேலை காரணமாக தொடர்ந்து […]

Read More

இளையராஜாவையும் எஸ்பிபியையும் இணைத்த தமிழரசன்

by on June 1, 2019 0

சில அதிசயங்கள் கலையால் மட்டும்தான் சாத்தியப்படும். அப்படியொரு அதிசயத்தை மீண்டும் சினிமாக்கலை நிகழ்த்தி இருக்கிறது. பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் தமிழரசன் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது இசையில் பல வருடங்களுக்குப் பிறகு யேசுதாஸ் இந்தப் படத்துக்காக ஒரு பாடலை பாடிச் சென்றார். பலரும் இந்த நிகழ்வை இன்ப ஆச்சர்யமாக கொண்டாடி வந்த வேளையில், இளையராஜா இசையில் இப்போது இந்த படத்திற்காக எஸ்.பி.பி ஒரு மெலடி […]

Read More