April 23, 2024
  • April 23, 2024
Breaking News
August 12, 2019

தேசிய விருது பாடகரின் இசைத் தேவைக்கு உதவுங்கள்

By 0 612 Views

‘ஜோக்கர்’ படத்துக்காக 2017ம் ஆண்டு தேசிய விருது பெற்ற தமிழ்ப்பாடகர் சுந்தரய்யர். தர்மபுரியைச் சேர்ந்த இவருக்கு இந்நேரம் கைக்கொள்ளாத அளவுக்கு வாய்ப்புகளும், படங்களும் குவிந்திருக்கும் என்று நினைத்துவிட வேண்டாம். அது சொற்ப அளவே நிகழ… அவர் இப்போது சொந்தமாக இசைக்கச்சேரி நடந்தி வாழ்வைத் தக்கவைத்துக் கொள்ளும் வழிவகைகளைத் தேடும் முயற்சியில் இருக்கிறார்.

அதற்காக நண்பரின் உதவி கேட்டு அவர் எழுதியிருந்த நெகிழ்வான கடிதம் கண்ணில் பட்டு அவர் அனுமதியுடன் இங்கு கடிதத்தின் சில பகுதிகள் மட்டும் பதிவேற்றப்படுகிறது.

இதைக் கண்ணுறும் சினிமா நண்பர்கள் வாய்ப்புத் தருவதுடன் (பாடுவதுடன் நடிக்கவும் விரும்புகிறார்…) அவர் சொந்தமாக இசைக் கச்சேரி தொடங்க நிதி உதவி அளித்தால் நலம். பிற நண்பர்களும் அவரது இசைப்பயணத்துக்கு உதவலாம். அந்த உதவியை அவர் திருப்பித்தரும் கடனாகவேதான் கேட்கிறார் என்பது அவர் தன் திறமை மீது வைத்துள்ள நம்பகத்தன்மையை அளிக்கிறது.

Sundarayyar

Sundarayyar

கீழே அவரது கடிதம்… தொடர்பு முகவரி, அலைபேசி எண் மற்றும் வங்கி விவரங்கள்…

“அன்பான வணக்கம் நலமா. சினிமா வாய்ப்புக்கள் வரும் போது பார்ப்போம். இப்போது வாழ்வதற்கான வழியை தேடினேன். ஒரே வழி இசை நிகழ்ச்சி செய்வது. சொந்தமாக ஒரு ஆடியோ செட் வாங்க வேண்டும். அதற்கான தொகைக்கு உங்களை தேடி வந்திருக்கிறேன். ஒரு வருடத்தில் தொகையை திருப்பிக் கொடுத்து விடுவேன்.

இப்போது நான் தூண்டில் கேட்கிறேன். நானும் வாழ்வேன். மற்றவர்களையும் வாழ வைப்பேன். நீங்களே பொருட்களை வாங்கி கொடுத்தாலும் சரி. எவ்வளவு ஆகிறதோ அவ்வளவு பணமும் விரைவில் திருப்பி கொடுத்து கொடுத்து விடுவேன். நீங்களோ உங்களுக்கு தெறிந்த நண்பர்களோ, உறவுகளோ உதவி செய்ய கேளுங்கள். எவ்வளவு பணம் கொடுக்கிறார்களோ அவர் பெயரும் போன் எண்ணும் அனுப்புங்கள். இப்போதே செய்தால் அடுத்த (ஆவணி) முகூர்த்ததிலே நம் நிகழ்ச்சியை தொடங்கி விடலாம்.

நம் நட்புகளுக்கு நிகழ்ச்சி செய்தாலே நிற்பதற்கு நேரம் இருக்காது. எல்லா பொருட்களும் சேர்த்து (ஆடியோ செட்) குறைந்த பச்சம் 3 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. (சாதாரண கம்பெனி.) நல்ல கம்பெனி 5 லட்சத்துக்கும் மேல்.கண்டிப்பாக ஒரு வருடத்தில் திருப்பி கொடுத்து விடுவேன். பணம் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

அன்புக்கு நன்றி.

பாசத்தோடு பாடகர் சுந்தரையர்.

Sundaraiyar.K
Ac No : 333 2011 8845
SBi:Palacode Branch.
iFSC : SBIN000 3689

தொலைபேசி எண்:+91 90926 41426