April 25, 2024
  • April 25, 2024
Breaking News
  • Home
  • அரசியல்
  • இந்தியா
  • முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
September 19, 2018

முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

By 0 1117 Views

கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது இஸ்லாத்தில் மும்முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில், முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறியது.

இருந்தும், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை இல்லாததால் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு தெரிவிக்க, இம்மசோதா அப்படியே விடப்பட்டது..

கடந்த மழைக்கால கூட்டத் தொடரில் இந்த சட்ட மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று மசோதாவில் மூன்று முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டன. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டாலும் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை.

இம்மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பி விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்ததால், முத்தலாக் தடை மசோதா மீண்டும் கிடப்பில் உள்ளது.

எனவே, அவசர சட்டம் மூலம் முத்தலாக் நடைமுறைக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்தது.

அதன் விளைவாக டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முத்தலாக் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தும் ஒப்புதல் அளித்துள்ளார்.