April 25, 2024
  • April 25, 2024
Breaking News
September 12, 2018

நீதிமன்றம் கைது செய்ய உத்தரவிட்டதால் நித்தியானந்தா தப்பி ஓட்டம்

By 0 1003 Views

பரபரப்புகளுக்குப் பெயர் போனவர் நித்யானந்தா. இவர் கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகில் உள்ள பிடதியில் நடத்தி வரும் ஆசிரமத்தில் பெண் பக்தர்களை பாலியல் பலாத்காரம் செய்வதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று நித்யானந்தாவின் சீடர் லெனின் 2010-ம் ஆண்டு போலீசில் புகார் செய்தார்.

பிடதி போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் ராம்நகர் மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு 8 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

சென்ற வாரம் 6-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நித்யானந்தா கோர்ட்டில் ஆஜராகவில்லை. நித்யானந்தா அலட்சியம் காட்டி வருகிறார் என்ற நீதிபதி உடனே நித்யானந்தாவைக் கைது செய்ய உத்தரவிட்டார். ஜாமீனில் அவர் வெளிவர முடியாத பிடிவாரண்டையும் பிறப்பித்தார்.

அதனையடுத்து நித்யானந்தாதாவை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கிய போலீசார் அவரை தேடி ஆசிரமம் சென்றபோது நித்யானந்தா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது தெரிய வந்தது. அவருக்கு இருக்கும் மற்ற ஆசிரமங்களிலும்போலீசார் அவரைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

வரும் 14-ந்தேதி நித்யானந்தா மீதான வழக்கு ராம்நகர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது நித்யானந்தா கோர்ட்டில் ஆஜராவார் என்று பிடதி ஆசிரம வட்டாரம் தெரிவிக்கிறதாம்.

நல்ல சாமியார்… நல்ல ஆசிரமம்..!