March 29, 2024
  • March 29, 2024
Breaking News
July 9, 2018

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் மரண தண்டனையை உச்சநீதி மன்றம் உறுதி செய்தது

By 0 1011 Views

2012 டிசம்பர் 16-ந் தேதி இரவில் தலைநகர் டெல்லியில் 6 பேர் கொண்ட கும்பலால் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பஸ்சில் வைத்து கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். கைது செய்யப்பட்ட ஆறு பேரில் முக்கிய குற்றவாளி ராம்சிங், சிறையில் தற்கொலை செய்து கொள்ள, மற்றொருவன், சிறுவன் என்பதால் குறைந்தபட்ச தண்டனை பெற்றான்.

மற்ற நான்கு குற்றவாளிகள் முகேஷ், பவன், வினய், அக்‌ஷய் ஆகியோருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அதன்பின், மேல்முறையீட்டில் இந்த தண்டனையை உச்சநீதி மன்றம் உறுதி செய்தது. ஆனால், நால்வரில் அக்‌ஷய் தவிர மூவரும் மரண தண்டனையை மறுஆய்வு செய்யக்கோரும் மனுக்களை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்ய, அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, கடந்த மே 4-ந் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதி அசோக் பூஷன், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு, அந்த மூவரின் மறுசீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தண்டனையை எதிர்த்து குற்றவாளிகளால் மேல்முறையீடு செய்ய முடியுமே தவிர, தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோர முடியாது என தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். இதனால் அவர்களது மரணதண்டனை உறுதி செய்யபட்டுள்ளது.