March 28, 2024
  • March 28, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சிவகார்த்திகேயனுக்கு நெருக்கடிக்கு மேல் நெருக்கடி
September 18, 2019

சிவகார்த்திகேயனுக்கு நெருக்கடிக்கு மேல் நெருக்கடி

By 0 845 Views

எந்த ஹீரோவும் தன் தோல்வியைத் தன் வாயால் ஒத்துக்கொள்ளாத உலகம் இது. ஆனால், வெள்ளை மனம் படைத்த சிவகார்த்திகேயன் தன் ‘மிஸ்டர் லோக்கல்’ தோல்வியைத் தன் வாயாலேயே ஒத்துக்கொண்டார்.

இது ஒரு புறமிருக்க, அதற்கு முந்தைய அவரது படங்களும் தோல்வியைத் தழுவிய நிலையில் அவர் அடுத்து ஒரு சூப்பர் டூப்பர் வெற்றிப்படத்தைக் கொடுதே ஆக வேண்டிய நிலையில் இருக்கிறார்.

அதற்காகவே களிமண்ணையும் பொன்னாக்கி விடும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எவர்கிரீன் இயக்குநரும், தன்னை ஹீரோவாக்கியவருமான பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது நம்ம வீத்ட்டுப் பிள்ளை படத்தில் கர்ம சிரத்தையாக நம்பிக்கையுடன் நடித்து வெளியீட்டை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.

ஆனால், படத்தின் டிரைலரைப் பார்த்த ரசிகர்கள் சலிப்படைந்ததாகச் சொல்லப்படுகிறது. இப்போதுதான் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் கார்த்தி நடித்து ஊர்ப்பட்ட உறவுகளுக்காக உருகிய கதையைப் பார்த்து முடித்தோம். மீண்டும் அதே கதையா என்று ஒரு சலிப்பு ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அடுத்த நெருக்கடியாக ஆகியிருக்கிறது பட வெளியீட்டுப் பிரச்சினை. செப்டம்பர் 27-ம் தேதி வெளியாவதாகச் சொல்லப்பட்ட படம் குறித்து இதுவரை வெளியீட்டுத் தகவலே இல்லை. இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் எந்த அறிவிப்பும் வெளியாகாததால் எல்லா மட்டத்திலிருந்தும், குறிப்பாக சிவகார்த்திகேயன் ரசிகர்களிடமிருந்து அங்கலாய்ப்பு கிளம்பியிருக்கிறது.

படத்தின் வெளியீடு அறிவிக்கப்படாத காரணம் 20ம்தேதி வெளியாகவிருக்கும் சூர்யாவின் ‘காப்பான்’. அந்தப்பட டிவி உரிமையைப் பெற்றிருக்கும் சன் டிவி, அந்தப்பட வெற்றிக்குக் குறுக்கீடாக நம்ம வீட்டுப் பிள்ளை இருந்துவிடக் கூடாதென்று அமைதியாக இருக்கிறார்களாம்.

இருந்தாலும் 27ம் தேதி படம் வெளியாகிவிடும் என்றே சொல்லப்படுகிறது. தன் பரந்துபட்ட கரங்களால் எந்த நெருக்கடியிலும் தன் படங்களை வெற்றிப்படமாக்கத் தெரிந்த சன் பிக்சர்ஸ் தன் இந்தப்படத்தையும் வெற்றொய்ப்படமாக்கி விடுவார்கள் என்ற கடைசி நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

நண்பர்களையும் கைதூக்கி விடும் நல்ல மனம் கொண்ட சிவகார்த்திகேயனுக்கு நல்லதே நடக்கட்டும்..!