April 25, 2024
  • April 25, 2024
Breaking News
February 2, 2019

சிவகார்த்திகேயனின் மிஸ்டர். லோக்கல் பட சிறப்பு

By 0 830 Views

ஆச்சு… சிவகார்த்திகேயனின் அடுத்த பட டைட்டில் அறிவிச்சாச்சு… ஸ்டூடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா தயாரிப்பில் எம்.ராஜேஷ் இயக்கவிருக்கும் அந்தப்படத்தின் டைட்டில் ‘மிஸ்டர். லோக்கல்’.

ஆனால், அதை இப்படி எழுதாமல் ஆங்கிலத்தில் Mr என்றும் தமிழில் லோக்கல் என்றும் எழுதுகிறார்கள். இதுதான் இந்தப்படத்தின் சிறப்பா என்று கேட்டு விடாதீர்கள். இதைவிட சிறப்பு இருக்கிறது.

‘வேலைக்காரன்’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த நயன்தாரா இதில் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இதில் இணைவதும் சிறப்பாக இருக்கலாம். முதல்முறையாக சிவா படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இதில் இசைப்பதும் சிறப்பான விஷயம்தான். பாடல்கள் தரை லோக்கலாக இருக்கப் போகிறது.

ஆனால், நாம் சொல்ல வரும் சிறப்பு வேறு..!

சிவகார்த்திகேயன் கையிலிருப்பது என்னவென்று பாருங்கள். சிங்கிள் டீ..! அதனால் இது இயக்குநர் ராஜேஷ் படம்தானா என்பதுதான் அனைவருக்கும் எழும் சந்தேகம். அவர் படம் என்றால் தலைப்பிலோ முதல் பார்வையிலோ ஏதோ ஓரிடத்தில் ‘கிக்’ இருக்கும். அதுவும் இது ‘மிஸ்டர். லோக்கல்’ என்பதால் சரக்கும் லோக்கலாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால், இதில் அநியாயயத்துக்கு வெறும் சிங்கிள் டீயை வைத்துக்கொண்டு சிவா சிரித்துக் கொண்டிருக்கிறார். அவரது இமேஜ் அப்படி ‘க்ளீனா’னது என்பதால் இருக்கலாம்.

ஆனால், ராஜேஷால் இப்படி சிரிக்க முடியுமா தெரியவில்லை. பாவம்… சிக்கிட்டார்.

“மச்சி… ஒரு குவாட்டர் சொல்லேன்…” என்றிருந்தவறை இதில் “மச்சி சிங்கிள் டீ சொல்லேன்…” என்று மாற்றியிருக்கிறார் சிவா.

எனிவே… இதுவும் ‘ஹாட்’தான்..!