April 25, 2024
  • April 25, 2024
Breaking News
May 1, 2018

மதுரை வங்கியில் பட்டப்பகலில் 10 லட்சம் கொள்ளை

By 0 908 Views

மதுரை விளக்குத்தூண் பகுதியில் கிழக்கு ஆவணி மூலவீதியில் இந்தியன் வங்கியின் மண்டல அலுவலகமும், கிளை அலுவலகமும் இயங்கி வருகின்றன. அத்துடன் முதல் தளத்தில் கிளை அலுவலகமும் இயங்கி வருகிறது.

இந்நிலையில் இங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கான பிரிவுபசார விழா 4-வது மாடியில் நடக்க, அதில் பங்கேற்பதற்காக ஊழியர்கள் அனைவரும் சென்றிருந்தனர்.

காசாளரும் கேபினை பூட்டி விட்டு சென்று விட்டார். இதைப் பயன்படுத்தி ஒரு மர்மநபர் வங்கிக்குள் புகுந்து, கேபினுக்கு மேல் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு இருந்த இடைவெளியில் சாமர்த்தியமாக நுழைந்து பணப்பெட்டியில் இந்த 10 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்திருக்கிறார்.

இந்த விஷயம் யாருக்கும் தெரியாது. ஆனால், கணக்காளர் பணத்தில் 10 லட்சம் குறைந்ததைக் கணக்கு பார்த்தபோது கண்டுபிடித்து வங்கியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை பார்த்தபோது, அதில் மர்ம நபர் பணத்தை திருடியது தெரியவந்திருக்கிறது.

இதுதொடர்பாக வங்கி மேலாளர் சீனிவாசன் விளக்குத்தூண் போலீசில் புகார் கொடுத்தை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்தியன் வங்கியின் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் வங்கி ஊழியர்களுக்குத் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் நடந்த இந்தக் கொள்ளை சம்பவம் மதுரையைப் பரபரப்பில் வைத்துள்ளது.