March 29, 2024
  • March 29, 2024
Breaking News
  • Home
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிப்பேன் – கமல்
June 22, 2018

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிப்பேன் – கமல்

By 0 978 Views

தனது கட்சியான ‘மக்கள் நீதி மய்யம்’ பதிவு தொடர்பாக நேற்று முன்தினம் டெல்லி சென்ற கமல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும், நேற்று காலையில் சோனியா காந்தியை சந்தித்ததும் எதிர்பாராத நிகழ்வுகளாக அமைந்தன.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்துச் செயல்பட கமல் திட்டமிட்டிருப்பதாக அரசியல் நோக்கர்களால் மேற்படி சந்திப்புகள் கருதப்பட, டெல்லியில் இருந்து நேற்று இரவு சென்னை திரும்பிய கமல், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதிலிருந்து…

“ராகுல் காந்தி, சோனியா இருவரையும் மரியாதை நிமித்தமாகவே சந்தித்து பேசினேன். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தோம். கூட்டணி பற்றி எதுவும் பேசவில்லை. காங்கிரஸ் தலைவர்களை சந்தித்ததால் நான் ஒருவழிப் பாதையில் செல்வதாக நினைத்து விட வேண்டாம். அரவிந்த் கெஜ்ரிவால் வெளியூர் சென்றிருந்ததால் அவரை சந்திக்க முடியவில்லை.

எனது பாதையை நான் ஏற்கனவே முடிவு செய்து விட்டேன். பாராளுமன்றத் தேர்தலில் ‘மக்கள் நீதி மய்யம்’ போட்டியிடுவது தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் கலந்து பேசி விரைவில் முடிவை அறிவிப்பேன்.

காவிரி பிரச்சினையில் மத்திய அரசின் முடிவுகள் வித்தியாசமாகவே உள்ளன. அதனை ஒவ்வொரு முறையும் விமர்சித்துக் கொண்டேதான் இருக்கிறோம். காவிரி ஆணையத்தை முறையாக செயல்படுத்த நாம் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.காவிரி விவகாரத்தில் உண்மையிலேயே வெற்றி விழாவைக் கொண்டாட வேண்டியவர்கள் விவசாயிகள்தான்..!”