April 19, 2024
  • April 19, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தோழர் என்றதால் வேலையை விட்டு துரத்தினார்கள் – இயக்குநரின் குமுறல்
November 21, 2019

தோழர் என்றதால் வேலையை விட்டு துரத்தினார்கள் – இயக்குநரின் குமுறல்

By 0 626 Views

நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பு ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இயக்குநர் பா.இரஞ்சித் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

“எங்களோட இரண்டாவது தயாரிப்பு இது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. இந்தப்படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம்..!” என்று எளிமையாக முடித்துக் கொண்டார் அவர்.

இசை அமைப்பாளர் தென்மா –

“இந்த மேடையில் பேசுவதற்காக ஐந்து வருடம் பிராக்டிஸ் பண்ணேன். தயாரிப்பாளாரா பா.ரஞ்சித் சாருக்கு ரொம்ப நன்றி. இயக்குநர் அதியன் கூட க்ளோசா பயணிக்க முடிந்தது. அவர் பொலிட்டிக்கலா யோசிக்கக் கூடியவர். அதனால் எப்படி இருப்பாரோ என்று நினைத்தேன். ஆனால் அவர் பேரன்பின் காதலர். கிஷோர் பற்றி நிறையா பேசலாம். நீலம் புரொடக்சன் டீம் எல்லாருமே எனக்கு நிறைய சப்போர்ட் பண்ணாங்க. மேலும் என்னோட டீம் எல்லாருக்குமே நன்றி..!” 

நடிகர் லிஜிஸ் –

“என்னை ரஞ்சித் அண்ணனிடம் அறிமுகப்படுத்தியது அதியன் அண்ணன் தான். பரியேறும் பெருமாள் படத்தைப் போலவே இப்படத்தையும் ஊடகங்களும் மக்களும் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன்..!” 

இயக்குநர் மாரிசெல்வராஜ் –

“நீலம் புரொடக்சன் இதை மாதிரி நிகழ்வுகளை நடத்திக்கொண்டே இருக்க வேண்டும். எப்படி ஒரு மாடு மேய்க்கிறவனை கொண்டுவந்து ‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்க வைத்தாரோ, அதேபோல் இரும்பு கடையில் வேலை பார்க்கும் ஒருவரை இப்போது ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தை இயக்க வைத்துள்ளார் அண்ணன் பா.ரஞ்சித்.

தோழர் அதியன் அவர்களின் அரசியல் எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படியான ஒருவர் படமெடுத்தால் எப்படி இருக்கும்? என்ற ஆசை எனக்குள் இருந்தது. படத்தைப் பற்றி ரஞ்சித் அண்ணன் பேசி இருக்கிறார். ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் பேசி இருக்கிறார். இப்படத்தை எதைக்கொண்டு தடுத்தாலும் இப்படம் அடைய இலக்கை அடைந்தே தீரும்..!”

நடிகை ஆனந்தி –

“நீலம் புரொடக்சன் படத்தில் நடிக்க அழைத்தால் கதையே கேட்காமல் நடிப்பேன். ஏன்னா கண்டெண்ட் அவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கும். இயக்குநர் அதியன் தோழர் நல்ல இயக்குநர் அதைவிட மிகச்சிறந்த மனிதர். இந்தப்படத்திற்காக படத்தில் பணியாற்றிய அனைவரும் மிகப்பெரிய உழைப்பைப் போட்டிருக்குறார்கள். நடிகர் தினேஷ் கிரேட் ஆர்ட்டிஸ்ட்..!”

நடிகர் தினேஷ்-

“ஒருபடம் ஜெயித்தபிறகு பேசும்போது தான் எனர்ஜியாக இருக்கும். ஆடியோ லாஞ்ச்சில் பேசும்போது எனக்கு எப்போதுமே பதட்டமாக இருக்கும். ஒரு இரும்பு கடையில் வேலை பார்ப்பவனுக்குள் எவ்வளவு கஷ்டம் இருக்கிறது என்பதை இயக்குநர் அதியன் பேசும்போது அதிகமாக வலித்தது. இந்தப்படத்திற்காக பலருக்கும் நன்றி சொல்ல வேண்டும். அனைவருக்கும் நன்றி..!”

இயக்குநர் அதியன் ஆதிரை –

“தோழர் என்ற வார்த்தையை சொன்னதிற்காக என்னை வேலையை விட்டு துரத்தி இருக்கிறார்கள். ஆனால் பா.ரஞ்சித் என்னை அதே அடையாளத்தோடு அறிமுகப்படுத்துகிறார். இரும்புக்கடையில் வேலைசெய்யும் போது சுவாசிக்கிற காற்று மிகவும் கொடியது. இரும்புக்கடையில் வேலை செய்கிறவர்கள் எத்தனையோ பேர் வாழ்க்கையை இழந்திருக்கிறார்கள்.

இரு குழந்தைகளுக்கு அப்பாவாக பா.ரஞ்சித் அண்ணனிடம் வந்து சேர்ந்தேன் அதன்பின் எனக்கு கஷ்டமே வந்ததில்லை. குண்டு படத்தில் ஒரு லாரி டிரைவரின் கதை  இருக்கிறது. இரும்புக்கடையில் வேலை செய்கிறவர்களின் வலியை யாரும் கண்டுகொள்வதில்லை. இன்னொருத்தனின் உழைப்பைச் சுரண்டும் சமூகமாகத்தான் இந்த சமூகம் இருக்கிறது. இந்த சினிமா உன் எதார்த்தை அழித்துவிடக்கூடாது என்று பா.ரஞ்சித் சொன்னார்.

இந்த சமூகத்தில் நடக்கும் எல்லா விசயங்கள் மீதும் நாம் ஒரு கண் வைக்க வேண்டும் என்பதை இப்படம் உணர்த்தும். இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு பா.ரஞ்சித்,  “நீலம் புரொடக்சனுக்கு பெரிய வாசலைத் திறந்து வைத்துவிட்டாய்” என்றார் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இந்தக்கதைக்குள் தினேஷ் வந்ததும் எனக்கு ஒரு கர்வம் வந்தது. ஏன் என்றால் அட்டக்கத்தி படம் வந்தபிறகு எனக்கான கதைகளையும் படம் பண்ணமுடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.

தோழர் ஆனந்தி அவங்க மனசு போலவே படத்தில் அழகாக நடித்துள்ளார். ரித்விகா என் மனதுக்கு நெருக்கமான தோழி. அவரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். படம் பார்த்த அனைவரும் முனிஷ்காந்த் நடிப்பை பாராட்டி இருக்கிறார்கள். படத்தில் அனைவருமே மிகச்சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். கேமராமேன் கிஷோர் ரொம்ப நெருக்கமான மனிதர். இசை அமைப்பாளர் தென்மா அழகாக பண்ணி இருக்கிறார்..!”

டிசம்பர் 6ம் தேதி இந்த ‘குண்டு’ தியேட்டர்களில்…