April 19, 2024
  • April 19, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தெருக்கூத்தை மையமாக கொண்ட படத்தில் பீச்சாங்கை கார்த்திக்
February 12, 2019

தெருக்கூத்தை மையமாக கொண்ட படத்தில் பீச்சாங்கை கார்த்திக்

By 0 780 Views

1980 மற்றும் 1990 களில் இருந்த தெரு கூத்தை மையமாக வைத்து தயாராகி வருகிறது ஒரு புதிய படம். ‘பீச்சாங்கை’ படத்தில் நடித்த ஆர்.எஸ்.கார்த்திக் இதில் நாயகனாகிறார்.

இதில் கார்த்திக் ஜோடியாக மனிஷாஜித் மற்றும் இயக்குநர் மாரிமுத்து, சிவசங்கர் மாஸ்டர், தவசி, நந்திதா ஜெனிபர் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள், செல்வம் நம்பி இசையமைக்க , ஜெய்ஸ் ஒளிப்பதிவை மேற்கொள்ள M.G.M. நிறுவனத்துடன் ஜனா ஜாய்ஸ் முவிஸ் ஜேம்ஸ்சிவன் இணைந்து தயாரிக்கிறார். எழுதி இயக்குகிறார் இயக்குநர் ஆதிரை.

முதலாம் கட்டப் படபிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சிதம்பரம் அருகே உள்ள வெள்ளயங்குடி கிராமத்தில் இன்று தொடங்கியது. இங்கு 1980 களின் காலத்தை காண்பிக்கும் வகையில் பல நாடக கலைஞர்களுடன் மிக பிரமாண்டமாக அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடைபெறுகிறது.

இயக்குநர் ஆதிரை கூறுகையில், “கூத்து என்பது சினிமாவின் முதல்படியாகும். கலையின் ஆதி வடிவம். ஆனால், இன்றைய காலகட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கலை அழிந்து கொண்டு வருகிறது. அன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் கூத்து நடக்கும். ஆனால் இந்த காலகட்டத்தில் ஏதோ ஒரு கிராமத்தில் கூத்து நடப்பதே ஆச்சரியமாக இருக்கிறது,

கூத்து அழிந்து விடக் கூடாது. அந்தக் கலையை காப்பாற்ற அதனை பதிவு செய்யும் பொருட்டே இந்தப் படத்தை இயக்கி வருகிறேன்..!” என்கிறார்.

நல்ல முயற்சி..!