April 25, 2024
  • April 25, 2024
Breaking News
February 25, 2020

எரும சாணி விஜய் அருள்நிதி பட இயக்குநர் ஆனார்

By 0 632 Views

தரமான படங்களின் மூலம் தன்மீதான நம்பிக்கையை நிலை நிறுத்திக்கொண்டு பயணிப்பவர் நடிகர் அருள்நிதி. தற்போது அதன் இன்னொரு தொடர்ச்சியாக இணைய உலகில் ‘எரும சாணி’ மூலம்  புகழ் பெற்ற  விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கும் படத்தில் இணைந்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் எம்என்எம் பிலிம்ஸ் சார்பில் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

‘எரும சாணி’ புகழ் விஜய் குமார் ராஜேந்திரன் பெரிய திரையில் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி நடிப்பில் வெற்றி பெற்ற ‘நட்பே  துணை’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

இது பற்றி ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் அரவிந்த் சிங் என்ன கூறுகிறார்..?

“இப்படம் கல்லூரி வாழ்வின்  பின்னணியில் உண்மையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகிறது. ஆரம்பத்தில் விஜய் இந்தக்கதையை கூறியபோதே அதில் பரபரப்பு நிறைந்திருந்தது.

இந்தப்படத்தின்  திரைக்கதையை முடித்தவுடன் நாங்கள்  முதல் வேலையாக நடிகர் அருள்நிதியை தான் அணுகினோம். எப்போதும் தரமான முயற்சிகளுக்கு செவி சாய்ப்பவர் அவர். “ஆறாது சினம், டிமாண்டி காலனி, இரவுக்கு ஆயிரம் கண்கள், K13” , தற்போது 5 ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் இன்னாசி இயக்கத்தில் உருவாகி வெளிவர உள்ள பெயரிடப்படாத புதிய படம் என ஐந்து படங்கள் அவருடன்  ஒளிப்பதிவாளராகபணிபுரிந்ததில் அவரது கதைத்தேர்வு,  திரைத்துறையில் தெளிந்த பார்வை மீது பெரும் மரியாதை உண்டானது.  எனவே அவர் தான் இப்படத்திற்கு சரியானவர் என அவரை அணுகினோம்.

அவரும் விஜய் கூறிய திரைக்கதையில் உற்சாகமாகி உடனடியாக ஒப்புக்கொண்டார். இணைய உலகில் ‘எரும சாணி’  மூலம் புகழ் பெற்ற விஜய் ராஜேந்திரன் சினிமாவில் அறிமுகமாகி நடிகர்கள்  இயக்குநர்களின் முதல்தர தேர்வாக, காமிக்கல் காமெடி செல்லமாக மாறியிருக்கிறார். அவர் பெரிய திரையில் இயக்குநராக தனது பயணத்தை எனது தயாரிப்பில் தொடங்குவதில் எனக்கு பெரு மகிழ்ச்சி.

நடிகர் அருள்நிதி சூப்பர் குட் ஃபிலிம்ஸ் R B சௌத்திரி தயாரிப்பில் நடிகர் ஜீவாவுடன் இணைந்து நடித்துள்ள “களத்தில் சந்திப்போம்” படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. தயாரிப்பாளர் கதிரேசன் அவர்களின் 5ஸ்டார் நிறுவனத்தில் புதுமுக இயக்குநர் இன்னாசி இயக்கத்தில் நடித்துள்ள பெயரிடப்படாத புதிய  படம் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.