April 18, 2024
  • April 18, 2024
Breaking News
December 28, 2018

கே.பாக்யராஜ் முன்னிலையில் பொங்கிய இயக்குநர்

By 0 812 Views

‘என் காதலி சீன் போடுறா’ என்ற தலைப்புடன் தயாராகியிருக்கும் படத்தை சங்கர் மூவீஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கிறார்.

இப் படத்தில் ‘அங்காடிதெரு’ மகேஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ‘ஷாலு’ அறிமுகமாகிறார். இவர்களுடன் ‘ஆடுகளம்’ நரேன், மனோபாலா, அஞ்சலிஅம்மா,அம்பானிசங்கர், தியா, தென்னவன்,வையாபுரி, ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவை வெங்கட் கவனிக்க, இசையமைக்கிறார் அம்ரிஷ். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராம்சேவா. இவர் ராமகிருஷ்ணன் நடித்துள்ள ‘டீக்கடை பெஞ்ச்’ படத்தை இயக்கியவர்.

படத்தின் பாடல்களை கே.பாக்யராஜ் வெளியிட்டார். விழாவில் ராம்சேவா கொஞ்சம் பொங்கியே விட்டார். “ஆரம்பத்தில் எனக்கும் தயாரிபாளருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. இதற்கும் 23 நாளில் படத்தை முடித்து விட்டேன். இடையில் வந்த சிலரால் என்னால் தயாரிப்பாளரை சந்திக்கவே முடியவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பின் இப்போது இங்குதான் அவரைச் சந்தித்தேன்…” என்று ஆவர் பொங்க, “பாடல்களைப் பார்த்தேன். நல்லா இருந்தது, நீங்க நல்ல வருவீங்க..!” என்று ஆற்றுப் படுத்தினார் கே.பாக்யராஜ்.

En Kadhali Scene Poduraa

En Kadhali Scene Poduraa

அதன் பின் படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்…

“ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு முழுக்க முழுக்க காமெடியாக உருவாக்கி உள்ளோம். நாம் ‘எப்பொழுதும் சந்தோஷமாக வாழ வேண்டும். அதே நேரத்தில் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும். அப்படி ஜாக்கிரதையாக இல்லா விட்டால் ஏற்படுகின்ற பிரச்சனைகள் நம் வாழ்க்கையையே மாற்றிப் போட்டு விடும்…’ என்கிற கருத்தை உள்ளடக்கிய படம் தான் இது.

நான்கு பாடல்களும் வெவ்வேறு விதமாக கொடுத்திருக்கிறார் இசைமைப்பாளர் அம்ரிஷ். சின்னமச்சான் பாடலை தொடர்ந்து செந்தில்கணேஷ் – ராஜலக்ஷ்மி இருவரும் இந்த படத்திலும் ஒரு பாடலை பாடி இருக்கிறார்கள். ‘நிலா கல்லுல செதுக்கிய சிலையா’ என்று துவங்கும் அந்த பாடல் மிகப் பெரியஹிட்டாகும். படப்பிடிப்பு புதுச்சேரி மற்றும் சென்னையில் நடைபெற்றது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது..!” என்றார் அவர்.

இவ்வளவு நல்ல இயக்குநரை பொங்க வைக்கலாமா தயாரிப்பாளர்..?