நடிகர் கிருஷ்ணா நடிக்கும் 23 வது படத்தின் துவக்க விழா… நடிகர் கிருஷ்ணா நடிக்கும் படத்தின் பூஜை இன்று சென்னை வடபழனி பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. டான் கிரியேசன்ஸ் L. கணேஷ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அப்பாத்துரை பாரதிராஜா இயக்கும் புதிய படத்தின் துவக்கவிழா சென்னையில் படபூஜையுடன் துவங்கியது. விழாவில் கழுகு படத்தின்...
ராமலெட்சுமி புரொடக்ஷன்ஸ் மற்றும் அனுசுயா ஃபிலிம் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கலன்’. ‘ கிடுகு’ படத்தை இயக்கிய வீரமுருகன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் அப்புகுட்டி, தீபா , யாசர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சம்பத் ராம், சேரன் ராஜ், மணிமாறன், ராஜேஷ், பீட்டர் சரவணன், வேலு, முகேஷ், மோகன்,...
காலம் காலமாக பள்ளி ஆண்டு விழாக்களில் இன்றைய சமூகத்தில் காலம் சென்ற பெருந்தலைவர்கள் நேரில் வந்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையில் நாடகம் போடுவார்கள். கிட்டத்தட்ட அதே கற்பனையில் காலம் சென்ற அறிவியல் அறிஞர் அப்துல் கலாமை நவீன பொழுதில் அழைத்து வந்திருக்கிறார் இயக்குனர். ஆனால் நமக்குத் தெரிந்த அப்துல் கலாமாக அல்ல ;...
ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பயணமும் ஒவ்வொரு விதமானது. அதில் சிலரது வாழ்க்கைப் பயணம் வினோதங்கள் நிறைந்தது. அப்படி தியாகு என்ற மனிதனின் வாழ்க்கை வினோதங்களை நமக்குக் கடத்துகிறார் இயக்குனர் ஆர்.சிவா. சந்தோஷமான மலை கிராமத்து வாழ்க்கையில் சித்தப்பாக்களின் சூழ்ச்சியால் தன் பெற்றோரை சிறுவயதிலேயே இழந்து விடும் தியாகு சென்னையில் ஒரு மேன்ஷன் உரிமையாளர் வசம் ஒப்படைக்கப்படுகிறார்....
நெல்சன் திலீப்குமாரை ஒரு முன்னணி இயக்குனராக மட்டும்தான் நமக்குத் தெரியும் அல்லவா..? ஆனால் அவர் இப்போது கவின் நடிக்க சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் ‘பிளடி பெக்கர்’ (Bloody Begger) என்ற படத்தைத் தயாரித்திருக்கிறார். Filament Pictures சார்பாக நெல்சன் திலிப் குமார் தயாரிக்கும் இந்த படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, அக்ஷயா ஹரிஹரன் உள்ளிட்டோர்...
சினிமாவுக்கு வாத்தியார் பெருமை சேர்த்தது ஒரு காலம். இது வாத்தியார்களைப் பெருமைப்படுத்தும் சினிமாப் படம். எல்லோருக்கும் கல்வி சென்று சேர வேண்டும் என்கிற அடிப்படையில் கிராமப்புறங்களில் பணி புரியும் வாத்தியார்களின் பங்கு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வலியுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் போஸ் வெங்கட். அத்துடன் கல்வி போதித்து அறியாமையைப் போக்குவது என்பது...
சினிமா வரலாற்றில் இயக்குனர் யார் என்பது தெரியாமலேயே வெளிவந்திருக்கும் படம் இது. அதற்குக் காரணம் அவர் பாதியிலேயே இந்தப் படத்திலிருந்து விலகி விட்டாராம். அந்தக் கதை என்னவென்று நமக்குத் தெரியாது. எனவே, படத்தின் கதையைப் பார்க்கலாம். இதுவும் ஒரு காதல் கதைதான், ஆனால், வழக்கமான காதல் கதைகளில் இருந்து வித்தியாசப்பட்டது. காதலுக்கு வித்தியாசமான வில்லனாக...