March 29, 2024
  • March 29, 2024
Breaking News
August 29, 2018

சந்திராயன் 2 ஜனவரி 3-ல் விண்ணில் செலுத்தப்படும்

By 0 925 Views

மத்திய அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங்குடன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சிவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ம் தேதி சந்திராயன்-2 செயற்கை கோளை விண்ணில் ஏவ திட்டமிட்டு இருப்பதாக அறிவித்துள்ளார்.

மேலும், காலநிலை ஒத்துழைக்காவிட்டால், ஜனவரி 3-ம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்ட சந்திராயன் 2 பிப்ரவரி 16-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் எனவும் சிவன் தெரிவித்துள்ளார்.

சந்திராயன்-2 செயற்கை கோளின் எடை 3 ஆயிரத்து 850 கிலோவாக உயர்த்தப்பட்டதால், ஜி.எஸ்.எல்.வி.எம்.கே-2 ரக விண்கலத்தில் செலுத்த முடியாது எனவும், இதற்காக ஜி.எஸ்.எல்.வி.எம்.கே 3 மறுவடிவமைப்பு செய்யப்படுவதால் சந்திராயன் 2 உருவாக்கத்தில் தாமதம் ஏற்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

உலகிலேயே முதன்முறையாக சந்திரனின் தென் துருவத்தை அடைய இருக்கும் செயற்கை கோள் சந்திராயன்-2 எனவும், இது 40 நாள்கள் பயணித்து தனது இலக்கான நிலவை அடையும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.