December 2, 2025
  • December 2, 2025
Breaking News

BP 180 திரைப்பட விமர்சனம்

By on December 2, 2025 0 3 Views

நாயகனே வில்லனாக நாயகி அவரை திருத்த என்று போகிற கதை… ஆனால் நாயகனும் நாயகனும் ஜோடி இல்லை என்பது புதிய விஷயம். 

வடசென்னை முக்கிய தாதாவாக இருக்கிறார் டேனியல் பாலாஜி. மீனவர் சங்க தலைவராக இருக்கும் கே பாக்யராஜ் வளர்க்கப்பட்ட அவர் இன்னொரு புறம் அரசியல்வாதி அருள் தாசி ன் வலது கையாகவும் இருக்கிறார்.

சென்னையில் புறநகர் பகுதியில் அமைந்த அரசு மருத்துவமனையில் மருத்துவராக இருக்கிறார் நாயகி தான்யா ரவிச்சந்திரன். நேர்மைக்கு பெயர் போன அவர் வசம் அகால மரணம் அடைந்த கே பாக்யராஜின் மகளின் உடல் வந்து சேர்கிறது. 

அதை போஸ்ட்மார்ட்டம் செய்யாமல் கேட்கிறார் கே பாக்யராஜ் ஆனால் அப்படி தர முடியாது என்று மறுக்கிறார் தான்யா. இந்த விஷயம் டேனியல் பாலாஜி கைக்கு வர அதிலிருந்து தான்யாவின் நேர்மைக்கும் டேனியல் பாலாஜியின் அடாவடிக்கும் நடக்கும் யுத்தத்தில் யார் வென்றது என்பதுதான் கதை. 

ஒரே உடையில் தான் நடித்திருக்கிறார் என்று நினைக்கும் அளவுக்கு டேனியல் பாலாஜியின் காஸ்ட்யூம் அமைந்திருக்கிறது. ஆனால் நடிப்பில் பல இலைகளை தொட்டிருக்கிறார். கடைசியில் தான்யா தரும் மெண்டல் அவர் படும் பாடு அபாரம். 

தான்யாவின் முகமும் நடிப்புமே அவரை நேர்மையாளராக காட்டுகிறது.

தனக்கு கிடைத்துள்ள நல்ல கேரக்டருக்கு தான்யா ரவிச்சந்திரன் நியாயம் சேர்க்கும் வகையில் நன்றாக நடித்துள்ளார். டேனியல் பாலாஜியின் வில்லத்தனம் தரமாக அமைந்துள்ளது. பாவம் நடிப்பில் இன்னும் எவ்வளவோ உயரங்களைத் தொடவேண்டியவர் சென்றுவிட்டார். பாக்கியராஜ் எமோஷ்னல் காட்சிகளில் சற்று மிகையான நடிப்பைத் தந்துவிட்டாரோ என்று தோன்றுகிறது. அருள்தாஸ், தமிழ் உள்ளிட்டோர் ஒகே ரகம்

படத்தின் மூட்-க்குள் நம்மைக் கொண்டுபோக வேண்டும் என்ற முயற்சியில் இசை அமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா கொஞ்சம் அதிகமாகவே வாசித்து விட்டார் போல. நல்ல இசை தான். கொஞ்சம் சத்தத்தைக் குறைத்திருக்கலாம். ஒளிப்பதிவாளர் ராமலிங்கம் நல்ல நல்ல ஷாட்களை கம்போஸ் செய்துள்ளார். இயக்குநர் ஜேபி மிஷ்கின் உதவியாளர் என்பதால் ஷாட்களில் எல்லாம் மிஷ்கின் பட ரெபரன்ஸ்.

ஒரு அரசு மருத்துவமனையின் நேர்மையான மருத்துவரை வைத்து கதைப் பின்னப்பட்ட விதம் அருமை. ஆரம்பத்தில் எங்கெங்கோ துண்டு துண்டாக சிதறிச் சென்ற காட்சிகளையும் கேரக்டர்களையும் இடைவேளைக்கு முன்பு ஒரே புள்ளியில் இணைத்த விதம் நச். சிலபல லாஜிக் கேள்விகள் தொக்கி நின்றாலும், மனித உயிரை வதைப்பது எளிது, வதைபட்ட உயிரை காப்பாற்றுவது பெரும் கடினம் என்பதை உணர்த்தியதால் பிபி180-க்கு ஒரு சல்யூட் வைக்கலாம்