July 20, 2025
  • July 20, 2025
Breaking News

Articles Posted by G Tamil News

மெர்க்குரி விமர்சனம்

by on April 24, 2018 0

சைகை மொழியில் சத்தமாக ஒரு கருத்தை இந்தப்படத்தின் மூலம் சொல்ல முடிவெடுத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். கதை என்னவோ இயல்பாக, பழைய பாதையில்தான் ஆரம்பிக்கிறது. நான்கு ஆணும், ஒரு பெண்ணும் நண்பர்கள் என்பது எண்பதுகளிலிருந்து சப்பிப்போட்ட பனங்கொட்டை லைன். அதிலும் அதில் ஒரு ஆண், ஒரு பெண்ணைக் காதலிப்பது அந்தப் பனங்கொட்டையை வெயிலில் காயவைத்ததைப் போன்றது. இதில் இருக்கும் ஒரே சுவாரஸ்யம், அவர்கள் அனைவரும் காது கேளாத, வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளிகள் என்பதுதான். சனந்த், தீபக், […]

Read More

விஜய் சேதுபதியும் ஆக்‌ஷனுக்குள் இறங்குகிறார்

by on April 24, 2018 0

விஜய்சேதுபதியும், அஞ்சலியும் ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமாரின் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை ‘பாகுபலி-2’வை வெளியிட்ட எஸ்.என்.ராஜராஜனின் ‘கே புரொடக்‌ஷ்ன்ஸ்’ மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின் ‘ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ்( பி) லிட்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறார்கள். இதே நிறுவனங்கள் தற்போது ‘பியார் பிரேமா காதல்’ படத்தை தயாரித்து வருகிறார்கள். விஜய்சேதுபதி நடித்த படங்களிலே இந்தப்படம் பிரமாண்டமாகவும், அதிரடி ஆக்ஷன் படமாகவும்.தயாராகிறதாம். இதில் மாறுபட்ட வில்லனாக லிங்கா நடிக்க ஒரு முக்கியமான […]

Read More

கிடு கிடுவென உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை

by on April 24, 2018 0

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப மாதத்திற்கு இரண்டு முறை இந்திய எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்த பழைய சிஸ்டத்தை மாற்றி, சென்ற ஆண்டு ஜூனில் இருந்து தினந்தோறும் விலையை நிர்ணயிக்கும் முறை கொண்டு வரப்பட்டது. இதன் விளைவாகக் கண்ணுக்குத் தெரியாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வந்தது. அதன் அடிப்படையில் இன்று பெட்ரோல் விலை இதுவரை […]

Read More

மே 3 முதல் பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு

by on April 24, 2018 0

உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பாக “மே 3 முதல் கலந்தாய்வு விண்ணப்பங்களை இணையதளங்களில் பதிவு செய்ய முடியும்..!” என்றார். மேலும் அவர் கூறியது… தமிழகத்தில் கடந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கையில் 152704 இடங்கள் நிரப்பப்பட்டன. இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான மொத்த காலி இடங்கள் மே 15ல் தெரியும். இந்த ஆண்டு பிளஸ்2 தேர்வு முடிவு வெளியானதும் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தொடங்கும். பொறியியல் படிப்புக்காக இணையதளங்களில் […]

Read More

எஸ்.வி.சேகர் பதிவு மன்னிக்க முடியாத குற்றம்-ரஜினி

by on April 23, 2018 0

உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக பெறுவதற்காக ரஜினிகாந்த் இன்றிரவு அமெரிக்கா செல்கிறார். முன்னதாக அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் சமீபத்தில் ட்விட்டரில் வெளியிட்ட கருத்து பற்றிய கேள்விக்கு, “ஐபிஎல் போராட்டத்தின்போது சீருடையில் இருக்கும் போலீஸ் காரர்களை தாக்கியது தவறு. காவலர்களும் சட்டம் கையில் இருக்கிறதென்று வரம்பு மீறக்கூடாது..!” என்றார். அவர் கட்சி தொடங்குவது குறித்து கேட்கப்பட்டபோது, “நான் கட்சி தொடங்குவது உறுதி. ஆனால், நான் இன்னும் உறுதியாகவில்லை..!” என்றார். பேராசிரியர் நிர்மலா தேவி மற்றும் எஸ்.வி.சேகரின் […]

Read More

தாய்லாந்தில் கவர்ந்த மிஸ்டர் சந்திரமௌலி படக்குழு..!

by on March 20, 2018 0

‘மிஸ்டர் சந்திரமௌலி’ என்கிற வசீகரத் தலைப்பு கொண்ட படத்தை போப்டா மீடியா ஒர்க்ஸ் சார்பில் ‘கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கின்றது. கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா கசாண்டரா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சந்தோஷ் பிரதாப், இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் அகத்தியன், சதிஷ், விஜி சந்திரசேகர், ஜகன் மற்றும் ‘மைம்’ கோபி ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையில், ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவில், டி.எஸ்.சுரேஷ் படத் தொகுப்பில், ஜக்கியின் கலை […]

Read More