July 20, 2025
  • July 20, 2025
Breaking News

Articles Posted by G Tamil News

சாதீய பிரச்சினை படம் பைரவ கீதா மூலம் தமிழுக்கு வரும் ராம்கோபால் வர்மா

by on October 7, 2018 0

மிகச்சிறந்த இயக்குநராக ராம்கோபால் வர்மா அறியப்பட்டது ஒரு காலம். இன்றைக்கும் அவரது படங்கள் பாலிவுட்டில் பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அடிக்கடி ட்விட்டர் மூலம் வம்புகளில் சிக்கினாலும் அவரது படைப்புத் திறன் வியக்க வைப்பதாகவே இருக்கும். ஆர்ஜிவி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் ராம்கோபால் வர்மா இப்போது புதுமுகங்கள் நடிக்கும் ‘பைரவா கீதா ’ என்ற படத்தை தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் தயாரித்து வெளியிடுகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் படங்களை இயக்கி […]

Read More

விஜய்யுடன் மோதும் விஜய் ஆன்டனி..!

by on October 7, 2018 0

இந்த வருட ஆரம்பத்தில் தீபாவளிக்கு வரும் படங்களாக விஜய், அஜித், சூர்யா படங்கள் கருதப்பட்டாலும் தயாரிப்பு அடிப்படையில் அஜித்தும் சூர்யாவும் பின் தங்க விஜய்யின் ‘சர்கார்’ மட்டுமே வெளியாவதாக அதிகாரபூர்வமாகவே அறிவிக்கப்பட்டது. அதற்கு முதல் காரணம் தயாரிபாளர்களான சன் பிக்சர்ஸ். திட்டமிடுவதில் கெட்டிக்காரர்களான அவர்கள் வெளியிடும் தேதியை முடிவு செய்தே படத்தை முடித்து வெளியீட்டுக்குத் தயாராக்கி விட்டார்கள். அவர்களின் திட்டமிடுதலுக்கேற்ப ஏ.ஆர்.முருகதாஸும் படத்தை முடித்துக் கொடுத்து விட்டார். ‘சர்கார்’ மகா பெரிய படமாக இருப்பதால் மற்ற படங்களுக்குத் […]

Read More

யார் பாரம் தாங்குவார்களோ அவர்கள்தான் உயர முடியும் – விஜய் சேதுபதி

by on October 6, 2018 0

‘மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்’ சார்பில் எஸ். நந்தகோபால் தயாரித்து வெளியான திரைப்படம் 96. ஒளிப்பதிவாளராக இருந்த பிரேம்குமார் இந்த படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார். இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, திரிஷா நடித்திருக்கும் இந்தப் படம் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்கு காரணமான ரசிகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. விழாவில் விஜய் சேதுபதி பேசுகையில்,‘தமிழ் சினிமா மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. ‘பரியேறும் பெருமாளி’ன் வெற்றி கொண்டாடப்படுகிறது. சாதியின் தீவிரத்தையும், […]

Read More

டோக்கியோ பட விழாவில் ராஜீவ் மேனன் இயக்கி ஜி.வி நடித்த ‘சர்வம் தாளமயம்’

by on October 6, 2018 0

‘மின்சார கனவு’, ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ வெற்றிப் படங்களை இயக்கிய ராஜீவ் மேனன் தற்போது ஏ.ஆர்.ரஹமான் இசையில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகிய ‘சர்வம் தாள மயம்’ படத்தை இயக்கியுள்ளார். ஒரு மிருதங்க வித்வானிடமிருந்து கலையைக் கற்று கொள்ள விரும்பும் ஒரு இளைஞன் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தை சார்ந்தவன் என்பதால் அவரிடமிருந்தும், கர்நாடக இசை சமூகத்திலிருந்தும் நிராகரிக்கப்படுகிறான். இன்றைய காலகட்டத்தில் சாதி மத பிரச்சினைகளைத் தாண்டி அவனது இசை ஆசை வென்றதா என்பதே படத்தின் கதை. தற்போது இப்படம் […]

Read More

நோட்டா படத்தின் விமர்சனம்

by on October 6, 2018 0

அரசியல் நையாண்டிப் படங்களை சினிமா ரசிகர்கள் எபோதுமே அன்லிமிட்டட் மீல்ஸ் ஆக விரும்பிச் சுவைப்பார்கள். அதிலும் நடப்பு அரசியலை ஒரு பிடி பிடித்தால் அது அன்லிமிட்டட் ஆம்பூர் பிரியாணியாகவே ஆகிவிடும். அப்படி ஒரு அரசியல் சட்டயர் கொண்டு ரங்கராட்டினம் சுற்றியிருக்கிறார் இயக்குநர் ஆனந்த் சங்கர். படத்தின் இன்னொரு ஹைலைட்டான அம்சம் தெலுங்குப் படவுலகின் ‘ஹாட் ஸ்டார்’ விஜய் தேவரகொண்டாவைத் தமிழ் ஹீரோவாக இந்தப்படத்தில் பட்டம் சூட்டியிருப்பது. அந்த வகையிலும் குறிப்பிடத் தகுந்த படமாக மாறிவிட்டது நோட்டா. ஹீரோவாக […]

Read More

96 பட விவகாரம் – விஜய் சேதுபதி பொறுப்பேற்ற தொகையை விஷால் திருப்பித் தருகிறார்

by on October 5, 2018 0

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ‘96’ திரைப்படம் நேற்று முன் தினம் வெளியானது. இந்நிலையில்,தயாரிப்பாளர் திரு.நந்தகோபாலுக்கு ரூ.1.50 கோடி தொகையை பைனான்ஸ் மூலம் நடிகர் விஷால் தரப்பில் வாங்கிக்கொடுக்கப்பட்டது . அந்தத் தொகையை தயாரிப்பாளர் நந்தகோபால் ‘96’ பட ரிலீஸின்போது திரும்பத் தறுவதாக கூறியதால் நேற்று பட ரிலீஸுக்கு முன்பு வரை அது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை சரியான முடிவை எட்டாததை அடுத்து ‘96’ படத்தின் நாயகன் விஜய்சேதுபதி அந்தத் தொகையை தருவதாகக் கூறியபிறகு பிரச்னை […]

Read More

வாசித்தால்தான் எழுத்துக்கு கற்பனை செய்ய முடியும் -கூகை நூலகத் திறப்பில் பா.இரஞ்சித்

by on October 5, 2018 0

இயக்குனர் பா.இரஞ்சித் திரைத்துறை சார்ந்தவர்களுக்கு உதவும் வகையில் கூகை திரைப்பட இயக்கம் எனும் அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இதற்காக பெரும் நூலகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் நண்பர்கள் உதவியோடு அந்த முயற்சியைத் தொடங்கியிருக்கிறார். சென்னை வளசரவாக்கம் ஜானகி நகரில் கூகை திரைப்பட இயக்கம் அமைப்பின் அலுவலகத்தை ‘சாய்ரட்’ பட இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே, நடிகை குஷ்பு திறந்து வைக்க இயக்குனர் ராம், லெனின் பாரதி, மாரிசெல்வராஜ் உள்ளிட்ட திரைத்துறை சார்ந்த இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் […]

Read More