July 20, 2025
  • July 20, 2025
Breaking News

Articles Posted by G Tamil News

விஷாலுக்கு சவால் விடும் வரலட்சுமி சரத்குமார்

by on October 10, 2018 0

தன் 25வது படமாக விஷால் நடித்துத் தயாரித்திருக்கும் சண்டக்கோழி 2 அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. விஷாலுடன் இதில் கீர்த்தி சுரேஷ் , வரலட்சுமி சரத்குமார் , ராஜ் கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் உற்சாகமாக இருக்கும் டீமில் வரலட்சுமி சரத்குமாரிடம் பேசியதிலிருந்து… “சண்டக்கோழி2 படத்தில் வேலை பார்க்கும் போது நிறைய சந்தோஷமான சூழலே இருந்தது. லிங்குசாமி சார் மிகவும் கூலான மனிதர். […]

Read More

தல ரசிகனின் கதையை இயக்கும் தாதா 87 இயக்குநர்

by on October 9, 2018 0

சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி நடிப்பில் “தாதா 87” படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ளார். “தாதா 87” படத்தின் பாடல்களும், முன்னோட்டமும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது. தற்போது AFF நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி நடிகர் அம்சன் நடிக்கும் புதிய படமொன்றை இயக்கவுள்ளார். தல அஜித்தின் தீவிர ரசிகராகவும், கல்லூரியின் சூப்பர் சீனியராகவும் அம்சன் நடிக்கின்றார். மற்ற நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் […]

Read More

எனக்கு ரொம்ப பிடிச்ச டைரக்டர் – விஜய் சேதுபதி வாக்குமூலம்

by on October 9, 2018 0

‘ஆரண்ய காண்டம்’ என்றொரு படம். பாக்ஸ் ஆபீஸில் பெருத்த நஷ்டம். எனினும், விமர்சகர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. அதிலிருந்து எந்த நிகழ்வில் அந்தப்படம் திரையிட்டாலும் சரி, பெருத்த கூட்டம் கூடிவிடும். ரசிகர்கள் நின்று கொண்டே பார்க்கவும் தயங்காத வரவேற்பு பெற்ற படமானது. அதன் இயக்குநர் ‘தியாகராஜன் குமாரராஜா’ இன்றளவும் சிறந்த இயக்குநர்கள் வரிசயில் வைத்துக் கொண்டாடப்படுகிறார். அவரது அடுத்த படம் பற்றி வருடக் கணக்கில் தகவல் இல்லாத நிலையில் விஜய் சேதுபதியை வைத்து ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை […]

Read More

கூத்தன் படம் பாருங்க… ஒரு பவுன் தங்கம் அள்ளுங்க..!

by on October 8, 2018 0

நீல்கிரீஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் நீல்கிரீஸ் முருகன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புத்தம் புதியதிரைப்படம் ‘கூத்தன்’.  இப்படத்தை எழுதிஇயக்குகிறார் A L வெங்கி. அறிமுக நாயகன் ராஜ்குமார் , அறிமுக நாயகிகள் ஸ்ரிஜிதா, சோனால், கீரா, ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் (பிரபுதேவா தம்பி)நாகேந்திர பிரசாத், விஜய் டிவி முல்லை,கோதண்டம், இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி,மனோபாலா, ஜீனியர் பாலையா, கவிதாலயாகிருஷ்னன், ஶ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி,கலா மாஸ்டர் என ஒரு திரையுலக பட்டாளமேநீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டைன்மெண்ட்ன்பிரமாண்ட தயாரிப்பில் வரும் 11 தேதி இப்படம்திரைக்கு வருகிறது.  சமீபத்த்ல் நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டுவிழாவிலேயே பட டிக்கெட் விற்பனையை புதியமுறையில் தொடங்கி  பரபரப்பை கிளப்பிய தயாரிப்பாளர் நீல்க்ரீஸ் முருகன் இப்போது படபார்க்க வரும் ரசிகர்களுக்கு தங்கப்பரிசு அறிவித்துஆச்சர்யப்படுத்துகிறார்.  இப்படம் வெளியாகும் தமிழ்நாட்டின் ஒவ்வொருதியேட்டரிலும் ஒரு கூப்பன் பெட்டி வைக்கப்படும். அங்கு வைக்கப்பட்டிருக்கும் கூப்பனில்  படடிக்கெட்டின் நம்பரையும் ரசிகர்கள் தங்கள் போன் நம்பர் முகவரி விவரத்தையும் எழுதி கூப்பன்பெட்டியில் போட வேண்டும்.  தமிழகம் முழுதும்  அப்பெட்டிகளில் உள்ள கூப்பன்களிலிருந்து 18 அதிர்ஷ்டசாலிகள்தேர்ந்தெடுக்கப்பட்டு தனியாக கூத்தன் பட வெற்றிவிழாவில் ஒவ்வொருவருக்கும் 1பவுன் தங்கம்வீதம் 18 பவுன் அளிக்கப்படும்.                                              

Read More

விஜய் ரசிகர்களுடன் மோதல் – காமெடி கருணாகரன் போலீஸ் கமிஷனரிடம் புகார்

by on October 8, 2018 0

‘சர்கார்’ பாடல்கள் வெளியீட்டு விழாவில் விஜய பேசியதைக் கமெண்ட் செய்த காமெடி நடிகர் கருணாகரனை பிடி பிடியென்று விஜய் ரசிகர்கள் பிடித்து விட, பதிலுக்கு கருணாகரனும் அவர்களுடன் மல்லுக்கட்ட கடந்த நாள்களாக ட்விட்டரில் ஆவி பறக்கும் செய்தி இதுவாகத்தான் இருக்கிறது. ஆனால், இது சர்கார் பாடல் வெளியீட்டுடன் தொடங்கிய பிரச்சினை இல்லை. மார்ச் மாதம் சினிமா ஸ்டிரைக் நடந்தபோது சிறப்பு அனுமதி பெற்று சர்கார் ஷூட்டிங் நடந்தபோதே அதை விமர்சித்து கருணாகரன் பிரச்சினையைத் தொடங்கியிருந்தார். அதன் தொடர்ச்சிதான் […]

Read More

நான் முப்பது வருடங்களுக்கு முன் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும் – கமல்

by on October 7, 2018 0

வேல்ஸ் கல்விக்குழுமத்தின் நிறுவனர், வேந்தர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் அவர்களின் பிறந்த தினமான அக்டோபர் 7ஆம் தேதியை ஆண்டுதோறும் வேல்ஸ் குடும்ப விழாவாகk கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டின் வேல்ஸ் குடும்ப விழா சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் இண்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது. விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். இவ்விழாவில் வேல்ஸ் கல்விக்குழுமத்தில் சிறப்பாக பணியாற்றி, அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவர்களுக்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கி […]

Read More

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக போராடும் பெண்கள்

by on October 7, 2018 0

சபரிமலையில் எல்லா வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற பொதுநல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களையும் அனுமதிக்கலாம் என தீர்ப்பு கூறியது நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தத் தீர்ப்புக்கு பெரும்பாலும் ஆதரவு இருந்த போதிலும் தீர்ப்புக்கு எதிராகவும் ஐய்யப்ப பக்தர்கள் கருத்துகளைப் பரப்பி வருவதுடன் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் இன்று சென்னை, டெல்லி, பெங்களூருவில் நடைபெற்றது இப்படி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ’ஐய்யப்ப நம ஜப […]

Read More