April 19, 2024
  • April 19, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • விவசாயத்தில் இருக்கு அரசியல் – கடைக்குட்டி சிங்கம் கார்த்தி
July 11, 2018

விவசாயத்தில் இருக்கு அரசியல் – கடைக்குட்டி சிங்கம் கார்த்தி

By 0 973 Views

நாளை மறுநாள் 13-07-2018 அன்று வெளியாக இருக்கும் தன் ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் பற்றி கார்த்தி கூறியதிலிருந்து…

“வருஷம் 16’ன்னு மறக்க முடியாத படம் ஒண்ணு எல்லோரும் பார்த்திருப்போம். அப்படி ஒரு படத்துல நடிக்க மாட்டமான்னு எனக்கு ஏக்கம் இருந்திருக்கு. அது டைரக்டர் பாண்டிராஜ் சொன்ன இந்தக் கதையில தீர்ந்து போச்சு.

அஞ்சு அக்காக்களோட பிறந்த ஒரு பையனோட கேரக்டர். கேக்கும்போதே அவ்வளவு நல்லா இருந்தது. பெரிய குடும்பம்னா பெரிய கூட்டம்னு இல்லாம ஒவ்வொருத்தருக்கும் ஒரு கேரக்டர் கொடுத்து ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு வேல்யூ கொடுத்து அற்புதமா உருவாக்கியிருக்கார் பாண்டிராஜ்.

அது விவசாயத்தை நம்பி வாழற குடும்பம். விவசாயம் அழிஞ்சிக்கிட்டிருக்கு, தண்ணீர் இல்லைன்னு பல பிரச்சினைகள் போய்க்கிட்டிருந்தாலும் இன்னும் பல விவசாயிகள் பாரம்பரியமா விவசாயத்தை லாபகரமா செஞ்சுக்கிட்டிருக்காங்க. அது எப்படி முடியுதுன்னா எதையும் வெளியில இருந்து வாங்கி கடன்படாம இருக்கிறதை வச்சு விவசாயம் பண்ற முறை. அப்படியொரு விவசாயியா நான் வரேன். இதுல ஒரு அரசியலே இருக்கு. அதைப் படம் சொல்லுது.

இதுல நடிச்ச எல்லோருக்குமே விவசாயத்து மேல ஆசை வந்துடுச்சுன்னா பாருங்களேன். பிரகாஷ்ராஜ் சார் விவசாயம் பண்ணிக்கிட்டிருக்கார். இப்ப கிஷோர் பண்ணிக்கிட்டிருக்கார். விஜி டிராக்டர் ஓட்டிக்கிட்டிருக்காங்க. எனக்கும் அப்படிப் பண்ணனும்னு திட்டம் இருக்கு.

ஒரு மரத்தை நாம வளத்து அதுல பூ பூத்து காய் காக்கிறதைப் பாக்கிறது எத்தனை இன்பம்னு செஞ்சு பார்த்தாதான் தெரியும். இதோட உறவுகளோட அருமையையும் படம் சொல்லுது. இயக்குநர் பாண்டிராஜ் உறவுகளைப் பத்திப் பேசினாலே அழுதுடுவார். நானெல்லாம் ஃபாரீன்ல இருந்து இந்தியா வந்ததே உறவுகளோட வாழணும்னுதான்..!

பாண்டிராஜ் டைரக்‌ஷன்ல அண்ணன் சூர்யாவோட 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்புல வந்திருக்க இந்தப்படம் இந்த ரெண்டுவகையிலயும் எனக்கு முக்கியமானது..!”