April 16, 2024
  • April 16, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • யார் பாரம் தாங்குவார்களோ அவர்கள்தான் உயர முடியும் – விஜய் சேதுபதி
October 6, 2018

யார் பாரம் தாங்குவார்களோ அவர்கள்தான் உயர முடியும் – விஜய் சேதுபதி

By 0 858 Views

‘மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்’ சார்பில் எஸ். நந்தகோபால் தயாரித்து வெளியான திரைப்படம் 96. ஒளிப்பதிவாளராக இருந்த பிரேம்குமார் இந்த படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார்.

இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, திரிஷா நடித்திருக்கும் இந்தப் படம் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்கு காரணமான ரசிகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.

விழாவில் விஜய் சேதுபதி பேசுகையில்,‘தமிழ் சினிமா மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. ‘பரியேறும் பெருமாளி’ன் வெற்றி கொண்டாடப்படுகிறது. சாதியின் தீவிரத்தையும், அதன் தீவிரவாதத்தையும் அழகியலுடன் சொல்லப்பட்ட படம் அது.

பிரேம்குமார் என்ற ஒரு படைப்பாளிக்கு சொந்தமான படைப்பு தான் 96. ஆனால் அதனை பார்க்கும் அனைவரும் தங்களுக்கு சொந்தமான படமாக நினைக்க வைத்திருக்கிறது. விமர்சனம், திரைப்படம், மக்கள் ரசனை, பணியாற்றியவர்கள் என அனைவரும் ஒரு புள்ளியில் இணைந்த படம்..!” என்றார்.

அப்போது 96 படத்தின் வெளியீட்டில் ஏற்பட்ட சிக்கல் பற்றிய கேள்வி எழ, பதில் சொன்னார் விஜய் சேதுபதி.

“இங்கு திரையுலகில் ஏராளமான பிரச்சனைகள் இருக்கிறது. அதற்காக யாரும் யார்மீது குறைச் சொல்வதற்கு ஒன்றுமேயில்லை. யாரோ ஒருவர் யாரோ ஒருவரைக் குறி வைத்து செய்யும் தவறு. இது உருவாக்கப்பட்டது. இது எல்லாம் ஒரு வட்டத்தைப் போன்றது. வட்டத்தில் எது தொடக்கம்? எது இறுதி? என்று கண்டுபிடிப்பது கஷ்டமோ, அதேப்போல் இது போன்ற பிரச்சினைகளின் தொடக்கம் எது என்று கண்டுபிடிப்பதும் கஷ்டம்.

அதற்காக இவ்விஷயம் தொடர்பாக யார் மீது பழிசுமத்தவிரும்பவில்லை. யாரும் இதற்கு பொறுப்பும் அல்ல. தயாரிப்பாளர் நந்தகோபால் பட்ட கஷ்டத்தை நான் நேரில் பார்த்தேன். வலித்தது. ஆனால் சில சமயத்தில் வேறு வழியில்லை. ஏனெனில் இதெல்லாம் ஒரு குடும்பம். வாழ்க்கையில் இது போன்ற பிரச்சினைகள் வரும் போது நான் அடுத்தக்கட்டத்திற்கு போகப்போகிறேன் என்று அர்த்தம்.

யார் மீது யார் எவ்வளவு பாரம் வைக்கப்போகிறார்களோ, யார் எவ்வளவு பாரம் தாங்குவார்களோ அவர்கள்தான் இன்னும் மேலே உயரமுடியும். என்னுடைய வாழ்க்கையில் பலமுறை இப்படி பல சம்பவங்களைக் கடந்து வந்திருக்கிறேன்..!”என்றார்.

“தெளிவுடன் இருக்கீறீர்கள் சேது..!”