April 24, 2024
  • April 24, 2024
Breaking News

Monthly Archives: July 2022

24 மணி நேரத்தில் 6 மில்லியன் பார்வைகளைத் தொடும் தனுஷின் கேப்டன் மில்லர்

by on July 4, 2022 0

தனுஷ் நடிப்பில் உருவாகும் “கேப்டன் மில்லர்” அறிவிப்பு வீடியோ, எட்டு திக்கும் அதிரடியான வரவேற்பை பெற்றுள்ளது..! சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும், தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்பட அறிவிப்பு வீடியோ, எட்டு திக்கும், மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த திரைப்படம் அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாகவே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. புத்தம் புது வகையில் உருவாக்கப்பட்ட […]

Read More

பாலியல் தொல்லைக்கு ஆளான ‘மெய்ப்பட செய்’ நாயகி

by on July 4, 2022 0

எஸ்.ஆர்.ஹர்ஷித் பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர்.தமிழ் செல்வம் தயாரித்திருக்கும் படம் ‘மெய்ப்பட செய்’. அறிமுக இயக்குநர் வேலன் இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நடிகர் ஆதவ் பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக புதுமுகம் மதுனிகா நடித்துள்ளார். இவர்களுடன் ராஜ்கபூர், ஆடுகளம் ஜெயபால், ஓ.ஏ.கே.சுந்தர், பெஞ்சமின், ஞான பிரகாசம், சூப்பர் குட் சுப்பிரமணி, விஜயகணேஷ், தவசி, அட்டு முத்து, சிவா, ராஜமூர்த்தி, எமில் கணபதி, அனிஷ் உள்ளிட பலர் நடித்துள்ளனர்.  பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் தொடர் கதையாகி வரும் […]

Read More

ராக்கெட்ரி திரைப்பட விமர்சனம்

by on July 3, 2022 0

எறும்பு நடக்கும்போது பேலன்ஸ் தவறினால் எந்த பழுதும் நிகழ்ந்து விடப் போவதில்லை. அதுவே யானையின் நடை இடறி விடும்போது அது எழுந்து கொள்வதற்கு பல காலம் ஆகலாம். மாதவனே இயக்கி நடித்திருக்கும் இந்தப்படம் சொல்ல வரும் செய்தி இதுதான். ஒரு நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு அந்த நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் எந்த அளவுக்கு உதவுகிறார்கள் என்பதை பொது சமுதாயம் எப்போதுமே நினைத்துப் பார்க்க தவறிவிடுகிறது. அப்படி நினைக்கா விட்டாலும் பரவாயில்லை. ஆனால் அவர்கள் மீது அவதூறு வரும்போது […]

Read More

அன்யாஸ் டுடோரியல் வெப் சீரிஸ் விமர்சனம்

by on July 2, 2022 0

ஏழு அத்தியாயங்களைக் கொண்ட இந்த தொடர் ஆஹா (Aha) ஓடிடி.யில் காணக் கிடைக்கிறது.  கதை..? இதுதான்… ரெஜினா கஸன்ட்ராவும் நிவேதிதா சதீஷும் அக்கா தங்கையாக இருந்தும் இருவருக்கும் ஒத்து வரவில்லை. அக்காவிடம் இருப்பதை விட ஒரு பேயிடம் இருந்து விட முடியும் என்ற கோபத்தில் நிவேதிதா தன் அம்மாவிடமும், அக்கா ரெஜினாவிடமும் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி தனியாக ஒரு வீட்டில் தங்கியிருக்கிறார். ஒரு பெரிய அபார்ட்மென்டில் ஒரேயொரு வீட்டில் அவர் மட்டுமே வசிக்கிற சூழ்நிலையில் அது மக்கள் […]

Read More

டி பிளாக் திரைப்பட விமர்சனம்

by on July 2, 2022 0

அருள்நிதி நடிக்க ஒத்துக் கொள்ளும் படங்கள் என்றாலே அது பட்ஜெட் மீறாமல் பதைபதைப்புக்கும் குறைவில்லாமல் ஒரு மினிமம் கேரண்டி படமாக இருக்கும் என்பது நமக்குத் தெரிந்த விஷயம்தான். அந்த வரிசையிலேயே அமைகிறது இந்த டி பிளாக் படமும். வனப்பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் ஒரு கல்லூரியில் படிக்கிறார்கள் அருள்நிதியும், நாயகி அவந்திகா மிஸ்ராவும். அதே கல்லூரியைச் சேர்ந்த பெண்கள் ஹாஸ்டலில் டி பிளாக் பகுதியில் ஒவ்வொரு மாணவியாக மர்மமான முறையில் இறந்து கொண்டிருக்க, அதன் உண்மைத்தன்மை என்ன என்று […]

Read More

சுந்தர் சி இயக்கும் காபி வித் காதல் படத்தின் குடும்ப நடன பாடல் வெளியானது

by on July 2, 2022 0

அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்து வரும் படம் ‘காபி வித் காதல்’. கலகலப்பான படங்களை இயக்குவதற்கு பெயர்பெற்ற இயக்குனர் சுந்தர்.சி இந்த படத்தை இயக்கியுள்ளார்.   இதற்கு முன்னதாக சுந்தர்.சி யின் டைரக்ஷனில் வெளியான  அரண்மனை 3 ஹாரர் த்ரில்லராக ரசிகர்களை மிரட்டியது என்றால் குடும்பப்பாங்கான காதல் கதையாக கலகலப்புக்கு உத்தரவாதம் தரும் விதமாக உருவாகி உள்ளது இந்த காபி வித் காதல். இந்த […]

Read More