June 2, 2023
  • June 2, 2023
Breaking News

Monthly Archives: April 2021

இயக்குனர் கே வி ஆனந்த் மாரடைப்பால் மரணம்

by on April 30, 2021 0

தமிழ்த்திரையுலகம் தொடர்த்து திடீர் இழப்புகளை சந்தித்துவருகிறது. நடிகர் விவேக் மரணமடைந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளாத திரையுலகம் அடுத்து இயக்குநர் கே.வி. ஆனந்தை இழந்திருக்கிறது. பத்திரிகையில் புகைப்படக்கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய கே.வி. ஆனந்த், சினிமாவுக்குள் ஒளிப்பதிவாளராக நுழைந்து பின்னர் இயக்குநர் ஆனவர். பிரித்வி ராஜ், ஶ்ரீகாந்த் நடிக்க ‘கனா கண்டேன்’ எனும் படத்தை முதன்முதலாக இயக்கியவர் அதன் பிறகு தொடர்ந்து ‘அயன்’, ‘மாற்றான்’, ‘காப்பான்’ எனப் பல படங்களை நடிகர் சூர்யாவை ஹீரோவாக வைத்து இயக்கினார். […]

Read More

கர்நாடகா ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தலைமறைவு

by on April 29, 2021 0

கர்நாடகாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3000க்கும் அதிகமான நோயாளிகள் தலைமறைவாகி இருப்பதாக அம்மாநில வருவாய் துறை அமைச்சர் அசோகா தெரிவித்திருக்கிறார். வீட்டில் இருந்து வெளியேறிய அத்தனை பேரும் அ செல்போன்களை அணைத்து வைத்திருப்பதாகவும், தற்போது எங்கு தங்கியிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இது கொரோனா பரவலை மேலும் தீவிரமாக்கிவிடும் என்பதால் தலைமறைவாகி உள்ள நோயாளிகள் தயவுசெய்து செல்போனை ஆன் செய்ய வேண்டும் என்று கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொள்வதாக அமைச்சர் அசோகா கேட்டுக்்கண்டிருக்கிறார். இதனிடையே, திருப்பதியிலும் […]

Read More

பா இரஞ்சித் தயாரிப்பில் ரைட்டர் ஆகும் சமுத்திரக்கனி

by on April 29, 2021 0

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்கள் தயாரித்து வருகிறார். பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு , இரண்டு படங்கள் பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றதுடன் வரவேற்பையும் பெற்றது. தொடர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டுவரும் பா.இரஞ்சித் தன்னிடம் உதவியாளராக இருந்த பிராங்ளின் ஜேக்கப் இயக்கும் ரைட்டர் படத்தினை தயாரிக்கிறார்.  இதில் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் , கோல்டன் ரேசியோ பிலிம்ஸ், லிட்டில் ரெட் கார் , மற்றும் ஜெற்றி […]

Read More

இந்திய கொரோனா 17 நாடுகளுக்கு பரவியது – முக்கிய செய்திகள்

by on April 28, 2021 0

இந்தியாவின் உருமாறிய கொரோனா 17 நாடுகளுக்கு பரவி உள்ளது – உலக சுகாதார நிறுவனம். தமிழகத்தில் ஒரேநாளில் 16,665 பேருக்கு கொரோனா தொற்று – 98 பேர் உயிரிழப்பு. அண்ணா பல்கலைக்கழகம் அடுத்த மாதம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறவிருந்த நிலையில் ஒத்திவைப்பு. தமிழக கட்சிகளின் முடிவு ஒருதலைப்பட்சமானது – ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர். மே 1 முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத்தேவையில்லை – பள்ளிக் கல்வித்துறை இயக்குநர். ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நேரத்தை […]

Read More

இயக்குனர் சிகரத்தையும் இமயத்தையும் இணைய வைத்த தாமிரா மரணம்

by on April 27, 2021 0

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் தாமிரா. அவருடன் படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் முக்கிய பங்காற்றி இரக்கிறார். பின்னர் 2010-ல் இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் உருவான ரெட்டைச் சுழி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்தில் பெரும் இயக்குநர்களான கே.பாலச்சந்தரையும் பாரதிராஜாவையும் நடிக்க வைத்திருந்தார். இதன்பிறகு சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் நடித்த ஆண் தேவதை படத்தை இயக்கினார். இப்போது சத்யராஜ் நடிக்கும் வெப்சீரிஸ் ஒன்றை இயக்கி வருகிறார். அத்துடன் முழு திரைப்படம் இயக்கம் […]

Read More

ரஜினி வழியில் அண்ணாத்தே படப்பிடிப்புக்கு சென்ற நயன்தாரா

by on April 27, 2021 0

ரஜினி நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு இப்போது ஐதராபாத்தில் நடந்து வருவது தெரியும்தானே..? இதில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்த் தனி விமானத்தில் அங்கு சென்றார் இல்லையா…    இதன் அடுத்தகட்ட  படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக, நடிகை நயன்தாராவும் தனி விமானத்தில் ஐதராபாத் சென்றுள்ளார். அவர் ஐதராபாத் விமான நிலையத்தில் நடந்து செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர்களில் சூப்பர்ஸ்டாருக்கு அந்த வசதி என்றால் நடிகைகளில் சூப்பர் ஸ்டாருக்கும் அதே வசதி வேண்டும் தானே..?

Read More

தயாரிப்பாளர் சூப்பர் குட் பாபு ராஜா திடீர் மரணம்

by on April 26, 2021 0

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிய பாபு ராஜா இதய கோளாறு காரணமாக வடபழநி விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கொரோனா பரிசோதனை செய்துள்ளனர் அதில் அவருக்கு 10 சதவீதம் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், அதை சரி செய்து விடலாம் என்றும் தெரிவித்துள்ளனர். தற்போது மருத்துவ மனையில் பெட் வசதி இல்லாததால், வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இருந்த நிலையில், நேற்றிரவு மரணமடைந்து விட்டார். அவருக்கு மும்தாஜ் என்ற மனைவியும், […]

Read More

விஜய் 65 பட நாயகி பூஜா ஹெக்டே வுக்கு கொரோனா

by on April 25, 2021 0

சமீபத்தில் மளமளவென்று முன்னுக்கு வந்த நடிகைகளில் முக்கியமானவர் பூஜா ஹெக்டே. இவர் இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கி வரும் விஜய் 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஜார்ஜியாவில் நடைபெற்ற படப்பிடிப்பில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு இவர் நடனமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜார்ஜியா படப்பிடிப்பு முடிந்து விஜய் வந்து விட இப்போது பூஜா ஹெக்டே விடமிருந்து ஒரு ட்வீட் வந்திருக்கிறது. அந்த ட்விட்டர் செய்தியில் அவர் தனக்கு கொரோனா பாசிட்டிவ் வந்திருப்பதாகவும் தன்னுடன் […]

Read More

20 லட்சம் மாணவர்களுக்கு கல்விச்சேவை நடிகர் தாமுவுக்கு தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது

by on April 23, 2021 0

தமிழ் திரையுலகில் கடந்த முப்பது வருடங்களாக தனது நகைச்சுவை மூலம் சிறப்பான பங்களிப்பு செய்து வருபவர் டாக்டர் ஏ.வி.தாமோதரன் என்கிற நடிகர் தாமு. இயக்குனர் சிகரம் பாலசந்தரின் சீடரான இவருக்கு சினிமாவை தாண்டிய இன்னொரு முகமும் இருக்கிறது.. ஆம்.. கல்வி சேவையாளர் என்கிற புதிய முகம்.. அந்த முகத்துக்கான அங்கீகாரமும் தற்போது அவரை தேடி வந்துள்ளது. கல்வித்துறையில் கடந்த பத்து ஆண்டுகளாக, தொடர்ந்து நடிகர் தாமு மேற்கொண்ட முயற்சிகளுக்காக, தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் […]

Read More