April 23, 2024
  • April 23, 2024
Breaking News

Monthly Archives: November 2020

பாபா ஆம்தே பேத்தி விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை

by on November 30, 2020 0

பாபா ஆம்தேவின் பேத்தியும், புகழ்பெற்ற சமூக ஆர்வலராக அறியப்படும் மருத்துவர் சீதள் ஆம்தே கராஜ்கி தற்கொலை செய்து கொண்டார். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சந்திரபூரில் அமைந்துள்ள ஆனந்தவன ஆசிரமத்தில் திங்கள்கிழமை காலை அவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில் கிடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், அவர் இன்று காலை, தனக்குத் தானே விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்துகொண்டதாக வரோரா காவல்நிலைய அதிகாரி பி. பென்டார்கர் தெரிவித்துள்ளார். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் […]

Read More

ரசிகர்களுக்காக விஜய் தொடங்க இருக்கும் யூ டியூப் சேனல்

by on November 29, 2020 0

விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் யூட்யூப் சேனல்துவங்க முடிவு செய்து விட்டாராம் விஜய். காரணம், தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வருகிறது. அந்த நேரத்தில் யாரும் தனது பெயர் மற்றும் படத்தை பயன்படுத்தக்கூடாது என தெளிவாக உள்ளார். இதற்காகவே, விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் யூடிப்சேனல் தொடங்க உள்ளார். தொடங்கி என்ன செய்யவிருக்கிறார் தெரியுமா? விஜய் அறிவிக்கும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்யும் சமூக பணிகள் குறித்தும் அதில் தெரிவிக்கப்படும் […]

Read More

தமிழில் அஜித்தின் மகள் இப்போது தெலுங்கில் நாயகி

by on November 28, 2020 0

குழந்தை நட்சத்திரமாக தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். தல அஜித்துடன் விஸ்வாசம் ,என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் மகளாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் . வழக்கமாக முன்னணி நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு போட்டோஷூட் நடத்திய ரசிகர்களை அதிர்ச்சியடைய வைப்பார் .அந்த போட்டோஷூட் எல்லாம் ஒரு ஹீரோயின் வாய்ப்புக்காக தான் . தற்போது அது நிறைவேறி விட்டதாம். இந்தாண்டு மார்ச் மாதத்தில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் “கப்பேல்ல”.இதில் அன்னா பென் , […]

Read More

கன்னி ராசி படத்தை வெளியிட தடை விதித்தது நீதிமன்றம்

by on November 27, 2020 0

நடிகர் விமல் நடிப்பில் உருவான திரைப்படம் ‘கன்னிராசி’. கிங் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரிக்கான விநியோக உரிமை ‘மீடியா டைம்ஸ்’ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதற்காக படத்தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிமுக்கு 17 லட்சம் ரூபாயை மீடியா டைம்ஸ் நிறுவனர் அல்டாப் ஹமீது வழங்கியுள்ளார். ஆனால், ஒப்பந்தத்தின்போது உறுதி அளித்ததைப் போல 2018-ம் ஆண்டுக்குள் படத்தைத் தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிம் வெளியிடவில்லை. இந்நிலையில், ‘கன்னிராசி’ திரைப்படம் இன்று (27/11/2020) வெளியாகும் […]

Read More

முதல்வரிடம் பாராட்டு பெற்ற மூத்த அமைச்சர்

by on November 27, 2020 0

நிவர் புயலின் தாக்கம் சென்னைவாசிகளை பல முனைகளிலும் நின்று தாக்குகிறது. இந்த சூழலில் வீடுகளை இழந்தோர், உணவில்லாமல் தவிப்போர், தத்தளிக்கும் மீனவர்கள், ஆதரவில்லாத முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் அரசின் உதவிகளை எதிர்பார்த்து நிற்க… அரசின் உதவிகளை எதிர் பார்த்துக் கொண்டிராமல் தன் சொந்த செலவிலேயே உதவிகளைச் செய்து களத்தில் நிற்கிறார் மூத்த அமைச்சர் ஒருவர். வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ரெயின் கோட் அணிந்து தண்ணீர் சூழ்ந்த பல்வேறு பகுதிகளுக்கும் நேரடியாக சென்று குறைகளை கேட்பதும், […]

Read More

இந்திய அரசியலமைப்பு சட்டம் சமர்ப்பிக்கப்பட்ட நாள் இன்று

by on November 26, 2020 0

வரலாற்றில் இன்று ( 26.11. 1949) இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட தினம்.  அண்ணல் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் 300 நிபுணர்கள் கொண்ட அரசியல் அமைப்பு குழுவால் (Constitutional Assembly) உருவாக்காப்பட்ட இந்த அரசியல் அமைப்பு சட்டம் பின்னர் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு அமலுக்கு வந்த நாள்தான் 1950 ஜனவரி 26ம் நாள்! இது தான் இதுவரை உலக நாடுகளில் எழுதப்பட்டதில் மிக நீண்ட அரசியலமைப்பாகும். இதில் மொத்தம் 22 பிரிவுகள், 12 அட்டவணைகள், 94 திருத்தங்கள், […]

Read More

கால்பந்தாட்ட நட்சத்திர வீரர் மாரடோனா மாரடைப்பால் காலமானார்

by on November 25, 2020 0

அர்ஜென்டினா நாட்டின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் டீகோ மாரடோனா. இவர் 1986 ஆம் ஆண்டில் உலகக்கோப்பையை அர்ஜென்டினா வெல்ல மிகவும் துணை புரிந்தார். அதன் மூலம் உலகப் புகழையும் பெற்றார். எல்லா காலங்களிலும் சிறந்த வீரராக மதிக்கப்படும் மாரடோனாவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு மூளையில் அறுவை சிகிச்சை நடந்தது. அந்த சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் அவர். இந்நிலையில் அவருக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் உயிரிழந்தார். மாரடோனாவுக்கு வயது 60. பல முக்கிய உயிர்களை […]

Read More

சென்னை மாநகராட்சியின் 24×7 கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ள…

by on November 24, 2020 0

பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் 24 x 7 இயங்கும் கட்டுப்பாட்டு அறை உள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு அறை 75 பணியாளர்களுடன் பொதுப்பணித்துறை, போக்குவரத்துக் காவல்துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம் மற்றும் பிற துறைகளின் அலுவலர்களுடன் இயங்கி வருகிறது. இந்தக் கட்டுப்பாட்டு அறையின் 044-25384530, 044-25384540 என்ற தொலைபேசி எண்களும், 1913 புகார் மையத்தின் எண்ணும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் […]

Read More