April 19, 2024
  • April 19, 2024
Breaking News

Monthly Archives: September 2020

எஸ்பிபி ஆத்மாவுக்கு திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றினார் இளையராஜா

by on September 26, 2020 0

நேற்று மரணம் அடைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியமும், இசைஞானி இளையராஜாவும் இணைந்து காலத்தை வெல்லும் பல்லாயிரம் பாடல்களை கொடுத்து இருக்கிறார்கள். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது தெரிந்த விஷயம்.  மருத்துவமனையில் எஸ்பிபி சேர்க்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டிருந்த போது இளையராஜா ஒரு காணொளி அனுப்பியிருந்தார். அதில் சீக்கிரம் எஸ்பிபி குணமடைந்து வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருந்தார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக எஸ்பிபி மரணமடையவே அதில் மிகவும் அதிர்ச்சியடைந்து போயிருக்கிறார் இளையராஜா. அதற்காக […]

Read More

எஸ்பிபி நல்லடக்கம் காவல்துறை மரியாதையுடன் நடக்கும் – முதல்வர் அறிவிப்பு

by on September 25, 2020 0

இந்திய மொழிகள் பலவற்றிலும் 50 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை படைத்தது மட்டுமில்லாமல் ஆறு தேசிய விருதுகள் உள்ளிட்ட பல பெருமைகளுக்கு சொந்தக்காரர் அமரர் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம். இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மறைந்த அந்த சாதனையாளருக்கு இந்தியா முழுமையில் இருந்தும் அஞ்சலிகள் குவிந்தவண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் அவரது உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் அரசுக்கு  கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதன் எதிரொலியாக தாமரை பக்கத்திலுள்ள […]

Read More

கொரோனா பாதிப்புக்கு நிதி திரட்ட போய் கொரோனாவுக்கே பலியான எஸ்பிபியின் சோகம்

by on September 25, 2020 0

பாடும் நிலா என்று இசை ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட எஸ் பி பாலசுப்பிரமணியம் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக சூளைமேட்டில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் உயர்தர சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை ஆரம்பித்த இரண்டு வாரங்களில் அவருடைய உடல்நிலை பின்னடைவு பெற்றது. அதைத்தொடர்ந்து உலகம் முழுக்க அவரது உயிருக்காக கூட்டுப்பிரார்த்தனை நடந்தது. அதன் விளைவாக ஆச்சரியப்படத்தக்க வகையில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. […]

Read More

எஸ்பிபி உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு – கமல் சென்று பார்த்த வீடியோ

by on September 24, 2020 0

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் சூளைமேட்டில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். சிகிச்சை ஆரம்பித்த சில தினங்களில் அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. உயிர்காக்கும் உபகரணங்களின் துணையுடன் மட்டுமே அவரால் சுவாசிக்க முடிந்த நிலையில் திரையுலகம், பொதுமக்கள் என்று அனைவரும் அவருக்காக பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து ஆச்சரியப்படத்தக்க வகையில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. கடந்தவாரம் எழுந்து உட்காரவும் உணவு உட்கொள்ளவும் பிசியோதெரபி […]

Read More

மகேஷ்பாபுவின் மனைவியை போதைப்பொருள் வழக்கில் தொடர்பு படுத்தியது யார் தெரியுமா?

by on September 23, 2020 0

நடிகர் சுஷாந்தின் மேனேஜர்களில் ஒருவரான ஜெய சஹா அளித்த தகவல் தான் இப்போது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. போதை பொருள் வழக்கில் நடிகர் மகேஷ் பாபுவின் மனைவியும், நடிகை யுமான நம்ரதா ஷிரோத்கருக்கு தொடர்பு இருப்பதாக ஜெய சஹா கூறியிருக்கிறார். மேலும் அவர் போதைப் பொருள் கேட்டதற்கான உரையாடல் களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்தடுத்த திரை உலகங்கள் இந்த விவகாரத்தில் சிக்கி இருக்கும் நிலையில் கோலிவுட்டுக்கும் விசாரணை நீளலாம் என்பதால் இங்குள்ள […]

Read More

பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் கொரோனா கால சலுகை

by on September 23, 2020 0

கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் தாங்கள் பெற்ற வீட்டுக்கடன் அல்லது சில்லறை கடனை திருப்பி செலுத்த 2 ஆண்டுகள் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் அல்லது மாத தவணையை இரண்டு ஆண்டுகளுக்கு மறுசீரமைப்பு செய்து நீட்டித்துக் கொள்ளலாம் என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்திருக்கிறது. 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 1ம் தேதிக்கு முன், பாரத ஸ்டேட் வங்கியில் கடன் பெற்று இதுவரை தவணைத் தொகையை தவறாமல் செலுத்தி, கொரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த சலுகையை பெற்று […]

Read More

5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ.517.82 கோடி

by on September 22, 2020 0

பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு வெளியுறவு அமைச்சர் வி.முரளீதரன் அளித்துள்ள பதிலில்…   பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் 58 வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். பிரதமரின் வெளிநாட்டு பயணத்திற்கு ரூ. 517.82 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது…’’ என்று கூறி உள்ளார்.   பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தால் ஏற்பட்ட நன்மைகள் குறித்த கேள்விக்கு, இந்த பயணங்களால் வர்த்தகம் மற்றும் முதலீடு, தொழில்நுட்பம், கடல்சார், விண்வெளி மற்றும் […]

Read More

ரஜினி நலம் விசாரித்த மதுரை முதல் ரசிகர் பற்றிய விவரம் – ரஜினி பேசிய ஆடியோ

by on September 22, 2020 0

முதன் முதலில் தனக்கு மன்றம் ஆரம்பித்த மதுரை AP. முத்துமணியை, ரஜினி இன்று போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் என்ற செய்தி இன்று டிரெண்ட் ஆகியிருக்கிறது. யார் இந்த முத்துமணி..? அவரைப்பற்றிய செய்தி இது… பெரும்பாலான நட்சத்திரங்களுக்குத் தமிழகத்தின் முதல் ரசிகர் மன்றத்தைத் தொடங்கிய ஊர் மதுரை. ரஜினிகாந்த்துக்கும் கூட முதல் ரசிகர் மன்றம் மதுரையில்தான் தொடங்கப்பட்டிருக்கிறது. அப்போது முத்து மணிக்கு 18 வயது. அபூர்வ ராகங்கள்  படம் பார்த்துவிட்டு வந்து, தொடங்கிய ரசிகர் மன்றமாம் […]

Read More