June 2, 2023
  • June 2, 2023
Breaking News

Monthly Archives: July 2020

டேனி படத்தில் வரலட்சுமிக்கு இணையான வேடத்தில் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்

by on July 31, 2020 0

ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பி.ஜி.முத்தையா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எல்.சி.சந்தானமூர்த்தி இயக்கத்தில், வரலட்சுமி கதையின் நாயகியாக நடித்திருக்கும் டேனி படம் நாளை (ஆகஸ்ட் 1 ஆம் தேதி) ZEE5  ஒடிடி தளத்தில் வெளியாகிறது. இப்படத்தில் வரலட்சுமிக்கு இணையான வேடத்தில் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் நடித்திருக்கிறார். களவாணி2’ மூலம் வில்லத்தினத்தில் வித்தியாசத்தை காட்டி மிரட்டியவர் நடிகர் துரை சுதாகர். டேனி யில் அப்படி என்ன கேரக்டராம் அவருக்கு..? தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பெண்கள் கொடூரமாக கொலை […]

Read More

இயக்குனரிடம் போனில் பேசி கதை ரெடி பண்ண சொன்ன ரஜினி – கசிந்த ஆடியோ

by on July 31, 2020 0

தமிழ் படத்தை இயக்க வந்திருக்கும் அத்தனை இயக்குனர்களுக்கும் இருக்கும் ஒரு கனவு சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் செய்வதாகவே இருக்கும். அப்படிப்பட்ட ரஜினியே போன் செய்து ” எனக்கு ஒரு கதை தயார் பண்ணி வை…” என்று சொன்னால் அந்த இயக்குனரின் அதிர்ஷ்டத்தையும் திறமையையும் எப்படி பாராட்டுவது? அப்படி ஒரு அதிர்ஷ்டக்கார டைரக்டராக ஆகியிருக்கிறார் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி. சமீபத்தில் OTTயில் ரிலீசான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை ரஜினி […]

Read More

சிவகார்த்திகேயன் தனுஷ் படங்களில் நடித்த மலையாள நடிகர் திடீர் மரணம்

by on July 30, 2020 0

தமிழ், தெலுங்கில் இருநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் மலையாள நடிகர் அனில் முரளி. தமிழில் 6 மெழுகுவர்த்திகள் மற்றும் ஜெயம் ரவியுடன் நிமிர்ந்து நில், தனி ஒருவன், கணிதன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தனுசுடன் கொடி, சிவகார்த்திகேயனுடன் மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கல்லீரல் பிரச்சினைக்காக கேரளா கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருத்தார். இந்த நிலையில இன்று (வியாழக்கிழமை) இயற்கை எய்தினார். அவருக்கு வயது 56தான் என்பதும் அதிர்ச்சி அளிக்கும் […]

Read More

பாகுபலி இயக்குனர் ராஜமௌலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா

by on July 29, 2020 0

பாகுபலி படத்தின் மூலம் உலகத்தில் புகழின் உச்சம் தொட்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி இன்று பதிவிட்டுள்ள டுவீட்டில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதாக தெரிவித்திருக்கிறார். அந்த ட்விட்டர் செய்தியில் ” எனக்கும் என் குடும்பத்தினருக்கும் லேசாக காய்ச்சல் இருந்தது. நாங்கள் அனைவரும் கோவிட் டெஸ்ட் செய்து கொண்டோம். எதுவும் இருக்காது என்றுதான் நினைத்தோம். ஆனால் மெலிதாக கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. நாங்கள் குடும்பத்துடன் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். மருத்துவர்கள் ஆலோசனைப்படி முறையான மருந்துகள் […]

Read More

நயன்தாரா ரம்யாகிருஷ்ணன் அரசு நிலத்தை விலைக்கு வாங்கி ஏமாந்தார்களா..?

by on July 29, 2020 0

ஹைதராபாத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தை கிரிக்கெட் வீரர் சச்சின் மற்றும் நடிகை நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் உட்பட பலருக்கு பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததாக ரியல் எஸ்டேட் நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பதற்கு உதாரணமாகத் திகழும் இந்த நில மோசடி சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு. ஒரு சில ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் சாமானியர்கள் பாதிக்கப்படும் செய்திகளை நாம் கேள்விப்பட்டுள்ளோம். இப்போதோ பிரபலங்கள் பலர் […]

Read More

1.5 கோடி நஷ்டஈடு கேட்டு நியூஸ் 18 டிவி தொடர்ந்த வழக்கில் மாரிதாஸ் வீடியோக்களை நீக்க ஐகோர்ட் உத்தரவு

by on July 29, 2020 0

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட மாரிதாசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. நியூஸ் 18 தொலைக்காட்சி, அதன் முதன்மை ஆசிரியர் குணசேகரன் மற்றும் செய்தியாளர்கள் குறித்து மாரிதாஸ் தொடர்ந்து 4 அவதூறு வீடியோக்கள் வெளியிட்டிருந்தார். அவதூறு செய்திகள் வெளியிட்ட மாரிதாசிடம் 1.5 கோடி நஷ்டஈடு கேட்டு நியூஸ் 18 தொலைகாட்சியும் ஆசிரியர் மு.குணசேகரனும் வழக்கு தொடர்ந்திருந்தனர். மக்களிடையே மத ரீதியான பிளவு ஏற்படுத்தும் வகையிலும் செய்தியாளர்களை மிரட்டும் வகையிலும் […]

Read More

ஜூலை 31க்குப் பிறகும் ஊரடங்கு நீட்டிப்பா – 30ஆம் தேதி முதல்வர் ஆலோசனை

by on July 28, 2020 0

கொரோனா பரவலை தடுக்க ஜூலை 31-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் எந்தவித தளர்வுமின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப் படுகிறது. ஆனாலும  கூட தமிழக மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் ஊரடங்கை நீட்டிப்பதா, இல்லையா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் நாளை மறுநாள் (ஜூலை 30) முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து நாளை மாவட்ட கலெக்டர்களுடன் […]

Read More